உழவாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உழவாரக் குருவி
உழவாரக் குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Apodidae

Hartert, 1897
Genera

குறைந்தது 20

உழவாரக் குருவி அல்லது உழவாரன் (Swift) பறவையானது அபோடிஎட் (Apodidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. இப்பறவை பார்ப்பதற்கு தகைவிலான் குருவி போன்று காணப்படும். ஆனால் இவை இரணுட்மு மிகுந்த வேறுபாடுடையவை. உழவாரக் குருவிகளின் இறக்கைகள் முக நீளமானவை. கால் விரல்கள் முன்னோக்கி வளைந்திருக்க காணலாம். பார்ப்பதற்குக் கொஞ்சம் ரீங்காரப்பறவை போன்று காணப்பட்டாலும் ஹெமபிரிசிடி (Hemiprocnidae) என்ற ஒரு தனிக்குடும்பத்தச் சேர்ந்தது.

இப்பறவை தனது உணவைப் பிடிக்கச் செல்லும்போது கீழ்நோக்கி விமானம் போல் சென்று சிறு பூச்சிகளை இலாவகமாகப் பிடித்து உண்ணுகிறது. குடும்பப் பெயர், அபோடிடே, ἄπους (ápous) கிரேக்க மொழியிலிருந்து வந்தது. இது "கால் இல்லாத" என்று பொருள்படும், இது வான்வழி பறவைகளில் மிகவும் சிறிய, பலவீனமான கால்களைக் குறிக்கிறது.[1][2] இந்தப் பறவை இனங்களில் சிலவகைகள் விமானத்தைப்போல் வேகமாகப் பறக்கும் தன்மை கொண்டது ஆகும்.

விளக்கம்[தொகு]

உழவாரன்கள் எப்போதும் விரைவாக இறக்கையடித்துச் சுற்றிச் சுற்றிப் பறந்தபடி உருப்பவை. விரைவாக பறக்கக்கூடிய இவை சில மணி நேரங்களில் பல நூறு கிலோ மீட்டர்களை கடந்து சென்றுவிடக்கூடியவை. வெள்ளை-தொண்டை ஊசி வால் உழவாரன் (Hirundapus caudacutus) போன்ற பெரிய இனங்கள் மணிக்கு 169 கிமீ (105 மைல்) வேகத்தில் பயணிப்பதாகக் கூறப்படுகிறது.[3] சாதா உழவாரன் கூட அதிகபட்சமாக வினாடிக்கு 31 மீட்டர் (112 km/h; 70 mph) வேகத்தில் பயணிக்க முடியும். ஒரு ஆண்டில் சாதா உழவாரன் குறைந்தது 200,000 கிமீ தொலைவு பயணிக்கும்.[4] மேலும் வாழ்நாளில் சுமார் இரண்டு மில்லியன் கிலோமீட்டர்களை கடக்கும்; அது சந்திரனுக்குப் பறந்து சென்று ஐந்து முறை திரும்பிச் செல்லுவதற்கு இணையானது.[5]

உழவாரன்களானது கோபுரங்கள், பெரிய கோயில்கள், மலைக்குகைகள், பறை இடுக்குகள் ஆகிய இடங்களில் பெரும் கூட்டமாக தொங்கும் கூடுகளை உமிழ் நீரைப் பயன்படுத்தி அமைத்துக் கொண்டு வாழ்கின்றன. பல்லாயிரக் கணக்கில் வௌவால்கள் வாழும் குகைளில் மாலையில் அவை குகைகளில் இருந்து வெளியேறியவுடன் உழவாரன்கள் அங்கு சென்று தங்குகின்றன.

மேற்கோள்[தொகு]

  1. Jobling (2010) pp. 50–51.
  2. Kaufman (2001) p. 329.
  3. Bourton, Jody (2 March 2010). "Supercharged swifts fly fastest". BBC News. http://news.bbc.co.uk/earth/hi/earth_news/newsid_8539000/8539383.stm. 
  4. Piper, Ross (2007), Extraordinary Animals: An Encyclopedia of Curious and Unusual Animals, Greenwood Press,
  5. Rundell, Katherine (August 15, 2019). "Consider the Swift". London Review of Books.

புத்தக விபரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Apodidae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Swift sounds on xeno-canto.org
  • [1] Swift Conservation.Org free advice on the natural history and conservation of Apus apus the Common Swift
"https://ta.wikipedia.org/w/index.php?title=உழவாரன்&oldid=3784880" இலிருந்து மீள்விக்கப்பட்டது