உள்ளடக்கத்துக்குச் செல்

கெலாபிட் மலைப்பகுதி

ஆள்கூறுகள்: 4°13′25.73″N 114°21′58.02″E / 4.2238139°N 114.3661167°E / 4.2238139; 114.3661167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெலாபிட் மலைப்பகுதி
Kelabit Highlands
Tanah Tinggi Kelabit
கெலாபிட் மலைப்பகுதி is located in மலேசியா
கெலாபிட் மலைப்பகுதி
      கெலாபிட்
ஆள்கூறுகள்: 4°13′25.73″N 114°21′58.02″E / 4.2238139°N 114.3661167°E / 4.2238139; 114.3661167
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுமிரி
மாவட்டங்கள்மிரி[1]
துணை மாவட்டம்[3]பாரியோ
கிறித்தவத்தின் அறிமுகம்1939
மக்கள்தொகை
 (2024)
 • மொத்தம்6,100[2]
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
98xxx
இணையதளம்www.unimas.my/ebario/

கெலாபிட் மலைப்பகுதி (மலாய் மொழி: Tanah Tinggi Kelabit; ஆங்கிலம்: Kelabit Highlands; சீனம்: 加拉必高原) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் மிரி பிரிவு; மிரி மாவட்டத்தின் வடக்குப் பகுதியில், பாரியோ உயர்நிலத்தில் உள்ள ஒரு மலைப்பகுதி ஆகும். பாரியோ உயர்நிலத்தை பாரியோ மலைப்பகுதி என அழைப்பதும் உண்டு.[4]

சரவாக் - கலிமந்தான் எல்லைக்கு அருகில் மிரி நகருக்கு கிழக்கே 178 கி.மீ. தொலைவில் உள்ளது.[5]

பொது

[தொகு]

கெலாபிட் மலைப்பகுதி மூருட்டு மலைத்தொடரில் அமைந்துள்ளது. அந்த மலைத்தொடரில் மூன்று மலைகள் உள்ளன.

அவற்றுள் மிக உயரமான மலையான மூருட்டு மலை 2,423 மீட்டர் (7,949 அடி) உயரத்தில் உள்ளது. இரண்டாவது உயரமான மலை பத்து பூலி (Mount Batu Buli) மலை. மூன்றாவது உயரமான மலை பத்து லாவி (Mount Batu Lawi) மலை. இதன் உயரம் 2,082 மீட்டர் (6,831 அடி).

மாலிகான் மலைப்பகுதி (Maligan Highlands) எனும் மற்றொரு மலைப்பகுதியும் லிம்பாங் பிரிவுக்குள் அமைந்துள்ளது. இதுவும் ஒரு பாரம்பரிய பூர்வீக மலைப்பகுதி. அதன் பெயர் பாகெலாலான் மலைப்பகுதி. இது ஒரு கிராமக் குழுமம் ஆகும்.[4]

கிராமங்கள்

[தொகு]

இப்பகுதியில் 13 கிராமங்கள் உள்ளன.[4] இவற்றில் ஏழு கிராமங்கள் பாரியோ பகுதியில் உள்ளன; மற்றவை கெலாபிட் பீடபூமியின் (கெலாபிட் மலைப்பகுதி) புறப்பகுதியில் உள்ளன. பாரியோ அசால் என்பது கெலாபிட் மலைப்பகுதிக்குள் இருக்கும் முதல் முதலாகக் கட்டப்பட்ட அசல் நீளவீடு.

உலுங் பாலாங் (Ulung Palang), அரூர் டாலான் (Arur Dalan), பா ராமபோ அத்தாஸ் (Pa'Ramapoh Atas), பா ராமபோ பாவா (Pa'Ramapoh Bawah), பா டெருங் (Pa' Derung), பாடாங் பாசிர் (Padang Pasir), கம்போங் பாரு (Kampung Baru) ஆகிய கிராமங்கள் 1960-களில் மறுக் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்கள்.

பாரியோ

[தொகு]

பாரியோ 1000 மீ (3280 அடி) உயரத்தில் உள்ள ஒரு பீடபூமி. 13 முதல் 16 கிராமங்களைக் கொண்டது. கெலாபிட் சமூகத்தினர் அந்த உயர்நிலத்தில் நெல் சாகுபடி செய்கிறார்கள். பாரியோ எனும் பெயர் கெலாபிட் மொழியில் இருந்து வந்தது. "காற்று" என்று பொருள். பாரியோவை "சங்க்ரி-லா" (Shangri-La) சொர்க்கம் என்றும் வெளிநாட்டுப் பயணிகள் அழைக்கிறார்கள்.

பாரியோ (Bario Asal) 29 குடும்பங்களையும் 192 மக்களையும் கொண்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் வயதானவர்கள் அல்லது இளம் பெற்றோர்கள். சமூகத்தின் தொய்வான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக இங்கு மிகக் குறைவான இளைஞர்கள் உள்ளனர்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sudan, Ajang (30 September 2015). "Daerah Kecil Bario di bawah bidang kuasa MBM (Bario sub-district is now under the jurisdiction of Miri City Council)". Utusan Borneo. https://www.pressreader.com/malaysia/utusan-borneo-sarawak/20150930/281668253787100. 
  2. Project, Joshua. "Kelabit in Indonesia". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 September 2024.
  3. "CM: Bario's elevation proof of govt's focus on rural devt". The Borneo Post. 2015-07-31. Archived from the original on 15 August 2015. பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
  4. 4.0 4.1 "Meet the highlanders of Sarawak". Borneo Talk இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210411164247/https://www.borneotalk.com/meet-the-highlanders-of-sarawak/. 
  5. "Distance from Bario to Miri". airmilescalculator.com. பார்க்கப்பட்ட நாள் 22 May 2017.
  6. Roger, Harris; Poline, Bala; Peter, Songan; Guat Lien, Elaine Khoo; Trang, Tingang. "Challenges and Opportunities in Introducing Information and Communication Technologies to the Kelabit Community of North Central Borneo". eBario. University Malaysia Sarawak. Archived from the original on 29 April 2018. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]

விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kelabit Highlands

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெலாபிட்_மலைப்பகுதி&oldid=4107859" இலிருந்து மீள்விக்கப்பட்டது