புக்கிட் தீபான் தேசியப் பூங்கா
புக்கிட் தீபான் தேசியப் பூங்கா Bukit Tiban National Park Taman Negara Bukit Tiban | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | பிந்துலு பிரிவு ![]() ![]() |
அருகாமை நகரம் | பிந்துலு |
ஆள்கூறுகள் | 3°26′N 113°29′E / 3.433°N 113.483°E |
பரப்பளவு | 96 km2 (37 sq mi) |
நிறுவப்பட்டது | 2000 |
நிருவாக அமைப்பு | சரவாக் வனவியல் கழகம் Sarawak Forestry Corporation (SFC) |
புக்கிட் தீபான் தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Bukit Tiban; ஆங்கிலம்: Bukit Tiban National Park) என்பது மலேசியா, சரவாக், பிந்துலு பிரிவில் பாதுகாக்கப்பட்ட ஒரு தேசியப் பூங்கா ஆகும். 2000-ஆம் ஆண்டில் இந்தப் பூங்கா ஒரு பாதுகாப்பு வனவிலங்குப் பகுதியாக அறிவிக்கப்பட்டது.[2]
மிரி பிரிவின் சிக்ரோக் ஆறு; நியாலாவ் ஆறு; மற்றும் திமோங் ஆறு ஆகிய மூன்று ஆறுகளின் தலைப் பகுதிகளை இந்தப் பூங்கா சூழ்ந்துள்ளது.
இந்தப் பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் செம்பனைத் தோட்டங்கள்; குடியிருப்புப் பகுதிகள்; மற்றும் தொழில்துறைப் பகுதிகள் உள்ளன. அதனால் இந்தப் பூங்கா ஒரு நீர் பிடிப்புப் பகுதியாகவும் செயல்படுகிறது. பான்-போர்னியோ நெடுஞ்சாலையின் (Pan-Borneo Highway) தெற்கே இருப்பதால், அந்தச் சாலைக்கு ஓர் எல்லையாகவும் உள்ளது.[3]
பொது
[தொகு]1985-ஆம் ஆண்டுக்கு முன்னர் பூங்காவைச் சுற்றியுள்ள காடுகளின் பெரும்பகுதி செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன. அந்த வகையில் எஞ்சியுள்ள காடுகள் மட்டுமே வனவிலங்குகளுக்கு ஒரு முக்கியப் புகலிடமாக இருந்தது.[4]
பூங்கா நிறுவப்பட்ட சில ஆண்டுகளில் பூங்காவின் கிழக்குப் பகுதியின் பெரும்பகுதி செம்பனைத் தோட்டங்களாக மாற்றப்பட்டு விட்டன. இருப்பினும் இப்பகுதியை மீண்டும் இயற்கை வன நிலைக்கு கொண்டு வர சரவாக் வனத்துறை பற்பல மீட்புப் பணிகளை மேர்கொண்டு வருகிறது.
மீட்புப் பணிகள்
[தொகு]முன்பு காலத்தில், காட்டு மரங்களை வெட்டும் பகுதியாகவும் இந்தப் பூங்கா செயல்பட்டது. தற்போது மறுபடியும் காடுகளாக மாற்றப்பட்டு வருகிறது. அண்மைய வனமீட்பு பணிகளினால், வனவிலங்குகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அழிக்கப்பட்ட காடுகளை மறுகாடுகளாக மாற்றலாம் என்பதற்கு புக்கிட் தீபான் தேசியப் பூங்கா ஓர் எடுத்துக்காட்டாக அமைகிறது.
இந்தப் பூங்கா, செம்பனைத் தோட்டங்களால் சூழப்பட்டு இருந்தாலும், அரிதான சில வனவிலங்குகளுக்கு ஒரு சரணாலயமாகவும் விளங்குகிறது.
மேலும் காண்க
[தொகு]- நியா தேசிய பூங்கா
- பாக்கோ தேசியப் பூங்கா
- முலு மலை தேசியப் பூங்கா
- குனோங் காடிங் தேசிய பூங்கா
- மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ UNEP-WCMC (2023). Protected Area Profile for Miri-Sibuti Coral Reef National Park from the World Database on Protected Areas. Accessed 18 March 2023.
- ↑ "State Park. Gazetted under the National Parks and Nature Reserves Ordinance 1998 (Section 20)". Retrieved 31 August 2024.
- ↑ "Bukit Tiban National Park, Sarawak, Malaysia". Penang Travel Tips (in ஆங்கிலம்). Retrieved 31 August 2024.
- ↑ "Bukit Tiban National Park bird checklist - Avibase - Bird Checklists of the World". avibase.bsc-eoc.org. Retrieved 31 August 2024.