இந்தியச் செந்நாய்
இந்தியச் செந்நாய் | |
---|---|
A captive Ussuri dhole at Kolmårdens djurpark, Sweden. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | குவான்
|
இனம்: | கு. அ. அல்பினசு
|
துணையினம்: | அல்பினசு
|
வேறு பெயர்கள் | |
|
உசூரி செந்நாய் (Ussuri dhole)[3] (குவான் அல்பினசு அல்பினசு), இந்திய செந்நாய், கிழக்கு ஆசியச் செந்நாய், சீன செந்நாய் அல்லது தெற்கு செந்நாய் என்றும் அறியப்படுகிறது. இது கிழக்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட செந்நாயின் பரிந்துரைக்கப்பட்ட துணையினமாகும் . சீனாவைப் பூர்வீகமாகக் கொண்டபோதிலும், இது சீனாவிலும், மங்கோலியா மற்றும் ரஷ்ய தூரக் கிழக்கிலும் இதன் பெரும்பாலான எல்லைகளில் அழிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.[4]
பண்புகள்
[தொகு]இந்தியச் செந்நாய் மிகப்பெரிய துணையினமாகும். இது ஒரு பிரகாசமான செந்தோலினையும் குறுகிய மண்டை ஓட்டினையும் கொண்டுள்ளது.[3] தியான் சான் செந்நாயினைப் போலவே, இந்தியச் செந்நாயும் குளிர் காலத்தில் அடர் உரோமங்களால் ஆன மேல்தோலினைக் கொண்டுள்ளது. ஆனால் கோடைக் காலத்தில் இத்தோல் கரடுமுரடாகவும் மெல்லியதாகவும் உள்ளது. தெற்காசியாவில் காணப்படும் செந்நாய் அடர் நிற கரடுமுரடான மற்றும் மெலிந்த உரோமங்களைக் கொண்ட தோலினைக் கொண்டுள்ளன. இவை பெரும்பாலும் சுமாத்திரா செந்நாய் போலக் காணப்படும்.
வாழிடமும் பரவலும்
[தொகு]இந்தியச் செந்நாய் காடுகள், சமவெளிகள், புல்வெளிகள், புன்னிலம், புல்வெளிகள் மற்றும் அல்பைன் தூந்திராவில் வாழ்கிறது. இது தெற்கிலிருந்து வடகிழக்கு ஆசியா வரை பரவலாகக் காணப்படும் துணையினமாகும். இது இந்தியா, நேபாளம், சீனா, வங்களாதேசம், மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்கிறது. மங்கோலியா, சைபீரியா மற்றும் கொரியாவில் அழிந்துவிட்டதாக நம்பப்பட்டது, இருப்பினும் இந்த நாடுகளில் உசூரி செந்நாய் காணப்படும் தகவல்கள் சர்ச்சைக்குரியது.[5]
வேட்டையும் உணவும்
[தொகு]இந்தியக் காட்டுச் செந்நாய்கள் சிறிய மற்றும் பெரிய தாவர வகை பாலூட்டிகளான புள்ளிமான், கடமான், புல்வாய், மான், காட்டுப்பன்றி, ஆசிய நீர் எருமை, நீலான் மற்றும் இந்தியக் காட்டெருது போன்றவற்றை உண்ணும். சில சமயங்களில், இந்தியச் செந்நாய் யானைக் குட்டிகளையும் வேட்டையாடுகின்றன. மேலும் ஆசியக் காட்டுக்கழுதை மற்றும் கியாங்கு கழுதைகளையும் உண்ணலாம்.[6]
அச்சுறுத்தல்கள்
[தொகு]இந்தியச் செந்நாயின் குறைந்த எண்ணிக்கைக் காரணமாக அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இருப்பினும், வேட்டையாடுதல், சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் தோல் வர்த்தகம் போன்ற அச்சுறுத்தல்கள் இனி இந்தியச் செந்நாய் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாது.[7] கம்போடியா போன்ற நாடுகளில் இந்தச் சிற்றினம் பாதுகாக்கப்படுகிறது. சில பகுதிகளில் உள்ள செந்நாய் பெரும்பாலும் இரையின் பற்றாக்குறை மற்றும் வாழ்விட இழப்பு ஆகியவற்றால் அச்சுறுத்தப்படுகின்றன.
ஓநாய்கள் மற்றும் பொன்னிறக் குள்ளநரி போன்ற பிற நாய்க் குடும்ப விலங்குகளுடன் வாழ்விடங்களைப் பகிர்ந்து கொள்ளும் பகுதிகளில் இந்தச் செந்நாய்கள் நோய்களால் பாதிக்கப்படக்கூடியவை. உசுரி செந்நாய்கள் புலி, சிறுத்தை, ஓநாய், வரிக் கழுதைப்புலி மற்றும் கரடி போன்ற பிற வேட்டை விலங்குகளாலும், ஆசியச் சிங்கம் மற்றும் வேங்கைப்புலிகளாலும் அச்சுறுத்தப்படுகின்றன.[8][9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ IUCN (2015-05-07). "Cuon alpinus: Kamler, J.F., Songsasen, N., Jenks, K., Srivathsa, A., Sheng, L. & Kunkel, K.: The IUCN Red List of Threatened Species 2015: e.T5953A72477893" (in ஆங்கிலம்). எண்ணிம ஆவணச் சுட்டி:10.2305/iucn.uk.2015-4.rlts.t5953a72477893.en. பார்க்கப்பட்ட நாள் 2022-08-10.
- ↑ Sykes, W. H. (1831). "Catalogue of the Mammalia obtained in Dukhun, (Deccan), East Indies". Proceedings of the Committee of Science and Correspondence of the Zoological Society of London 1 (#1): 100. doi:10.1111/j.1469-7998.1830.tb00018.x. https://www.biodiversitylibrary.org/page/12861508.
- ↑ 3.0 3.1 Heptner, V. G. & Naumov, N. P. (1998).
- ↑ Makenov, Marat (January 2018). "Extinct or extant? A review of dhole (Cuon alpinus Pallas, 1811) distribution in the former USSR and modern Russia". Mammal Research 63 (1): 1–9. doi:10.1007/s13364-017-0339-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:2199-2401.
- ↑ Bayani, A. 2022. Cuon alpinus Pallas, 1811 – Asiatic Wild Dog. A. Bayani, R. Chakravarty, P. Roy, and K. Kunte (editors). Mammals of India, v. 1.13. editors. http://www.mammalsofindia.org/sp/380/Cuon-alpinus
- ↑ Jan F. Kamler, Arlyne Johnson, Chanthavy Vongkhamheng, Anita Bousa, The diet, prey selection, and activity of dholes (Cuon alpinus) in northern Laos, Journal of Mammalogy, Volume 93, Issue 3, 28 June 2012, Pages 627–633, https://doi.org/10.1644/11-MAMM-A-241.1
- ↑ Durbin, L.S., Venkataraman, A., Hedges, S. & Duckworth, W. (2004).
- ↑ Pocock, R. I. (1939).
- ↑ Heptner, V. G.; Naumov, N. P. (1998). Mlekopitajuščie Sovetskogo Soiuza. Moskva: Vysšaia Škola. New Delhi: Smithsonian Institution and the National Science Foundation. pp. 1–731.
- ↑ Heptner, V. G.; Sludskij, A. A. (1992). Mlekopitajuščie Sovetskogo Soiuza. Moskva: Vysšaia Škola. Washington DC: Smithsonian Institution and the National Science Foundation. pp. 1–732.