அல்பைன் தூந்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு எல்லைக்கோடுகளுடன் கூடிய அல்பைன் நாடுகள்
அப்பைன் தூந்திர தட்பவெப்பம் கொண்ட வெள்ளை மலைத்தொடர், நியூ ஹாம்சயர், ஐக்கிய அமெரிக்க நாடு
அல்பைன் தூந்திரப் பிரதேசங்கள், வெனிசுலாவின் அந்தீசு மலைத்தொடர்

அல்பைன் தூந்திரம் (Alpine tundra) இது ஒரு வகைப்பட்ட இயற்கைப் பிரதேசம் ஆகும். துருவ தூந்திரப் பகுதிகள் போன்று ஆல்ப்ஸ் மற்றும் இமயமலையின் மர வரிசைகளுக்கு அப்பால் உயரந்த மேட்டுப் பகுதிகளில் குட்டைப் புல்வகைகளும், புதர்கள் மட்டுமே வளரும் பிரதேசங்கள் ஆகும். எனவே இத்தூந்திரப் பகுதிகளை அல்பைன் தூந்திரம் என்பர்.

உலகில் உள்ள மிக உயரமான மலைத்தொடர்களில் அல்பைன் தூந்திர தட்பவெப்ப நிலை காணப்படுகிறது. மேலும் இப்பகுதிகளில் பைங்குடில் விளைவு குறைபாட்டின் காரணமாக குட்டைச் செடிகளும், புற்களும், புதர்களும் மட்டும் வளர்கிறது. மரங்கள் வளர்வதில்லை.

துருவ தூந்திரப் பகுதிகள் போன்று அல்பைன் தூந்திரப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் தட்பவெப்பம், கடுங்குளிராகவும், கோடையில் சிறிது வெப்பமும் காணப்படுகிறது. எனவே அல்பைன் தூந்திரப் பகுதிகளில் மரங்கள் வளர்ச்சியடைவதில்லை.

புவியியல்[தொகு]

அல்பைன் தூந்திரப் பகுதிகள் ஆசியாவின் இமயமலைத் தொடர்களிலும், ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடர்களிலும் அதிகம் காணப்படுகிறது.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Alpine Biome". Archived from the original on 19 January 2010. பார்க்கப்பட்ட நாள் 2009-12-19.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பைன்_தூந்திரம்&oldid=3585984" இலிருந்து மீள்விக்கப்பட்டது