ஆசியக் காட்டுக் கழுதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியக் காட்டுக் கழுதை
A Persian onager (Equus hemionus onager) at Rostov-on-Don Zoo, உருசியா.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஒற்றைப்படைக் குளம்பி
குடும்பம்: குதிரைக் குடும்பம்
பேரினம்: குதிரைப் பேரினம்
துணைப்பேரினம்: Asinus
இனம்: E. hemionus
இருசொற் பெயரீடு
Equus hemionus
Pallas, 1775
துணையினம்

E. h. hemionus
E. h. kulan
E. h. onager
E. h. khur
E. h. hemippus

Equus hemionus range

ஆசிய காட்டுக் கழுதை (Asiatic wild ass)[2] என்பது குதிரைக்குடும்பத்தைச் சேர்ந்து ஒரு கழுதை. இது ஆசியா கண்டத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும். இது வேகமாக ஓடக்கூடிய பாலூட்டி. இவை மணிக்கு 64 கிமீ வேகத்தில் ஓடக்கூடியவை. இவை இந்தியாவின் கட்ச் பாலைவனப் பகுதியின் உவர் நிலங்களில் அரிதாக காணப்படுகின்றன. இவை ஆப்பிரிக்க காட்டுக் கழுதையை நெருக்கமாக ஒத்துள்ளன.

இவை குதிரையைவிட சிறியதாகவும், கழுதையைவிட பெரியதாகவும் இருக்கும். உடல் சாம்பல் அல்லது மஞ்சள்பழுப்பு நிறத்தில் இருக்கும். வயிற்றின் அடிபாகம் வெண்பட்டைகளோடு இருக்கும். கருப்பு முனையுடன் கூடிய கூர்மையான காதுகளை உடையது. அடர்ந்த பழுப்பு நிறமுடைய பிடரிமயிர் கொண்டவை.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]