ஒற்றைப்படைக் குளம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒற்றைப்படைக் குளம்பி
புதைப்படிவ காலம்:56–0 Ma
?Late Paleocene - Recent
ErmineSpot.jpg
குதிரையின் குளம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு: பாலூட்டிகள்
உள்வகுப்பு: Eutheria
பெருவரிசை: Laurasiatheria
வரிசை: ஒற்றைப்படைக் குளம்பி
(பெரிசோடாக்டிலா, Perissodactyla)

ரிச்சர்டு ஓவன், 1848
Families[1]

ஒற்றைப்படைக் குளம்பிகள் (Perissodactyla, odd-toed ungulates) என்பன பாலூட்டி வகுப்பில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் குளம்புகள் உள்ள விலங்குகள் கொண்ட ஒரு வரிசையில் உள்ள விலங்குகளைக் குறிக்கும். இவை அனைத்தும் புல் இலை தழைகளை மேய்ந்து உண்ணும் விலங்குகள். குதிரை, மூக்குக்கொம்பன் (காண்டாமிருகம்), டேப்பிர் போன்ற விலங்குகள் ஒற்றைப்படைக் குளம்பிகள் ஆகும். இவ் விலங்குகள் பெரும்பாலும் பெரிய உருவம் உடையவை, இவற்றின் வயிறு எளிமையான செரிமானம் செய்யும் அமைப்பைக் கொண்டுள்ளவை, இவற்றின் கால்களின் நடுவிரல் பெரிதாக இருப்பவை. உணவை அசைபோடும், பேரிரைப்பை அல்லது முன்வயிறு கொண்ட, இரட்டைப்படை குளம்பிகளை ஒப்பிடும்பொழுது ஒற்றைப்படை குளம்பிகள் தாம் உண்ணும் இலைதழைகளில் உள்ள செல்லுலோசுப் பொருட்களை இரைப்பையைக் காட்டிலும் குடல் போன்ற பின்செரிமானப் பாதையில் செரிக்கின்ற அமைப்பு கொண்ட விலங்குகள் ஆகும்.

அறிவியல் கலைச்சொல் விளக்கம்[தொகு]

ஒற்றைப்படைக் குளம்பிகளை பெரிசோடாக்டிலா (Perissodactyla) என்று அறிவியலில் கூறுவர். பெரிசோடாக்டிலா என்னும் இவ் ஆங்கிலச் சொல்லை ரிச்சர்டு ஓவன் என்பவர் 1848 இல் அறிமுகப்படுத்தினார். இவ் ஆங்கிலச்சொல், பெரிசோசு (Περισσος) = ஈடில்லா, ஒற்றைப்படை எண் + டாக்டிலோசு (δακτυλος) = விரல் என்னும் இரு கிரேக்க மொழிச் சொற்களால் ஆன கூட்டுச்சொல்[2]. குளம்பு என்பது கால்களின் விரல் எலும்புகள் ஒன்றிணைந்த உடல் அமைப்பு. குளம்புள்ள விலங்குகளைக் குளம்பிகள் என்று அழைப்பர். குளம்புள்ள விலங்குகளை ஆங்கிலத்தில் அங்குலேட் (ungulate) என்கின்றனர். அங்குலேட் என்னும் சொல் குளம்பு என்று பொருள் படும் அங்குலா (ungula) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து பெற்றது. இது 1802 ஆம் ஆண்டில் இருந்து ஆங்கிலத்தில் வழக்கில் உள்ளது[3].

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. Hooker, 2005, p. 206.
  2. ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி, Oxford English Dictionary. "perissodactyl"
  3. ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி, Oxford English Dictionary, "ungulate"

துணைநூல்கள்[தொகு]