கர்கலா

ஆள்கூறுகள்: 13°12′00″N 74°58′59″E / 13.2°N 74.983°E / 13.2; 74.983
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்கலா
கர்லா
நகரம்
கோமதீசுவர சிலை
கர்கலாவில் கோமதீசுரவர் சிலை
அடைபெயர்(கள்): சைன மதத் தளம்
Karkala
Karkala
கர்கலா
Location in Karnataka, India
ஆள்கூறுகள்: 13°12′00″N 74°58′59″E / 13.2°N 74.983°E / 13.2; 74.983
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
பிராந்தியம்துளு நாடு
Settled1912
தலைமையகம்உடுப்பி
பரப்பளவு
 • மொத்தம்23.06 km2 (8.90 sq mi)
ஏற்றம்80 m (260 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்25,824
 • அடர்த்தி1,089.16/km2 (2,820.9/sq mi)
மொஅலுவல்
 • பிராந்தியம்துளு, கொங்கணி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்574 104
தொலைபேசி இணைப்பு எண்91-(0)8258
வாகனப் பதிவுகேஏ-20
பாலின விகிதம்1.11 /
இணையதளம்www.karkalatown.gov.in
பிரபலமான சமண மையம்

கர்கலா (Karkala) கார்லா என்றும் அழைக்கப்படும், இது ஒரு நகரம் மற்றும் இந்தியாவின் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கர்கலா வட்டத்தின் தலைமையகமும் ஆகும். இது மங்களூரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகே அமைந்துள்ளது .

சமணர் ஆட்சிக் காலத்தில் இந்த நகரம் பாண்டிய நகரி என்று அழைக்கப்பட்டது. பின்னர் கரிகல்லு என்றும், பின்னர் கர்கல் என்றும், பின்னர் இறுதியாக கர்கலா என்றும் அறியப்பட்டது.

இந்நகரத்திற்கு இயற்கை மற்றும் வரலாற்று அடையாளங்கள் பல உள்ளன. இது ஆண்டு முழுவதும் பசுமையால் மூடப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் அடியில் அமைந்துள்ளது. ஹெப்ரி, சிருங்கேரி, கலாசா, ஹொரனாடு, உடுப்பி, கொல்லூர், சுப்ரமண்யா மற்றும் தர்மஸ்தாலா ஆகிய வழிகளில் செல்லும் முக்கிய இடத்தின் காரணமாக இது மத சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு முக்கிய சந்திப்பாகும்.

நள்ளூர் என்பது கர்கலா வட்டத்தில அமைந்துள்ள ஒரு கிராமம். நீண்ட காலத்திற்கு முன்பே கட்டப்பட்ட ஒரு அதிசய நல்லூர் சமண கோயில் அமைந்துள்ளது.

மதம்[தொகு]

சமண மதம் கர்கலாவில் பரவலாக நடைமுறையில் உள்ளது. மேலும் சமண மதத்தில் வரலாற்று முக்கியத்துவம் இருப்பதால் சமணர்களுக்கு புனித யாத்திரை இடமாகவும் இருக்கிறது. ஒற்றை கல் கோமதீஸ்வரர் சிலை (பாகுபலி) ஒன்று 41.5 அடி (13 மீ) நகரத்தின் மையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும், இது கர்நாடகாவின் இரண்டாவது உயரமானதாகும். சதுக்கமுகதி, ஹிரியங்கடி நேமினாத பசாதி, மற்றும் அனேகேரே பத்மாவதி பசாதி உட்பட கர்கலாவில் சுமார் 18 சமணக் கோயில்கள் உள்ளன. இவை அனைத்தும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தால் பட்டியலிடப்பட்டுள்ளன. பகவான் பாகுபலியின் சிலை 1432 பிப்ரவரி 13 அன்று கர்கலாவின் லலிதகீர்த்தியின் அறிவுறுத்தலின் பேரில் கர்கலாவில் நிறுவப்பட்டது. கர்கலாவிலும், அதைச் சுற்றியும் பல கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளன. புனித லாரன்ஸ் மைனர் பசிலிக்கா கர்கலாவின் புறநகரில் அமைந்துள்ளது. அதே நேரத்தில் நகரத்தில் கிறிஸ்து அரசர் தேவாலயமும் உள்ளது.

இந்த பகுதியில் குடியேறிய கவுட சாரஸ்வத் பிராமணர்கள் நல்ல எண்ணிக்கையில் உள்ளனர். மேலும், வர்த்தகம், விவசாயம் மற்றும் தொழில்கள் அடிப்படையில் உள்ளூர் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பையும் வழங்கி வருகின்றனர். அதே சமூகத்தின் தலைமையிலான கர்கலா வெங்கடரமண கோயில் 'படுதிருபதி' (மேற்கு திருப்பதி) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு புனித இடமாகும்.

மாநிலத்தில் உள்ள பாகுபலியின் மற்ற சிலைகளில் சரவணபெலகுளாவில் சவுந்தராயாவால் நிறுவப்பட்ட 57 அடி உயரமுள்ள சிலையும், வேனூரில் திம்மராஜாவால் நிறுவப்பட்ட 35 அடி (11 மீ) உயரமுள்ள சிலையும், தர்மஸ்தலாவில் முனைவர் வீரேந்திர எக்டே நிறுவிய 39 அடி (12 மீ) உயரம் கொண்ட சிலையும் அடங்கும்.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[1] கர்கலா நகரத்தின் மக்கள் தொகை 25,118 ஆகும். ஆண்களில் மக்கள் தொகையில் 51%, பெண்கள் 49%. கர்கலாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 82% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும்: ஆண் கல்வியறிவு 85%, மற்றும் பெண் கல்வியறிவு 79%. கர்கலாவில், மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டவர்கள். நகர நகராட்சியின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, தற்போது 25,635 பேர் இந்த நகரத்தில் வசிக்கின்றனர். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி கர்கலா வட்டத்தில் 2.10 லட்சம் மக்கள் தொகை உள்ளது (முந்தைய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு 2,04,571).

கர்கலாவில் இந்து மதம் மிகப்பெரிய அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது,

ராம சத்ரியர், பந்த், சபாலிகர் / சபல்யா, பில்லவா, கனிகா, கவுட சாரஸ்வத் பிராமணர், கொங்கணஸ்த் பிராமணர், சிவல்லி பிராமணர்கள், விஸ்வகர்மா பிராமணர்கள், தேவதிகா மற்றும் மோகவீரர் போன்ற முக்கிய சமூகங்கள் இங்கு வசிக்கின்றனர்.[2]

கலாச்சாரம்[தொகு]

மக்கள் துளு கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள். துளுவின் தனித்துவமான அம்சங்களில் பூட்டா கோலா, நாக ஆராதனை மற்றும் யக்சகானம் போன்ற சடங்குகள் அடங்கும். துளு புத்தாண்டு பிசு என்று அழைக்கப்படுகிறது, இது பைசாக்கி, விஷூ மற்றும் தாய்லாந்தின் புத்தாண்டு போன்ற அதே நாளில் வருகிறது.

மொழியும், மக்களும்[தொகு]

கர்கலா என்பது இந்து மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் சமண மதம் ஆகிய நான்கு மதங்களைப் பின்பற்றும் ஒரு பன்முக கலாச்சார மற்றும் பன்மொழி நகரமாகும். துளு, கொங்கணி, கன்னடம், உருது, பியரி ஆகியவை உள்ளூர் மொழிகளில் அதிகம் காணப்படுகின்றன. இருப்பினும் இந்தி மற்றும் ஆங்கிலம் நன்கு புரிந்து கொள்ளப்படுகின்றன. கொங்கணி பேசும் கவுட சாரஸ்வத் பிராமணச் சமூகங்கள், உருது மற்றும் பியரி பேசும் முஸ்லிம்களும் உள்ளனர். கத்தோலிக்கர்கள் கொங்கணி மற்றும் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் கன்னடம் பேசுகிறார்கள்.

பாரம்பரியம்[தொகு]

புலி வேசம் என்பது சென் கன்னட மாவட்டத்தின் நாட்டுப்புற நடனத்தின் தனித்துவமான வடிவமாகும். இது சாரதா தேவியின் விருப்பமானதாகக் கருதப்படுகிறது. இது தசரா கொண்டாட்டங்களின் போது நிகழ்த்தப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி போன்ற பிற பண்டிகைகளிலும் இது நிகழ்த்தப்படுகிறது. பூட்டா கோலா அல்லது ஆவி வழிபாடு வழக்கமாக இரவில் செய்யப்படுகிறது. கம்பளா, அல்லது எருமை பந்தயமும் நெல் வயல்களில் நடத்தப்படுகின்றன. கோரிகட்டா (சேவல் சண்டை) என்பது கிராம மக்களுக்கு பிடித்த மற்றொரு விளையாட்டாகும். அதன் ஆதரவாளர்களுக்கு, காசர்கோட்டின் வடக்குப் பகுதிகளில் உள்ள கோயில்களின் வளாகங்களில் விசேடமாக வளர்க்கப்பட்ட கோழிகளுக்கு இடையிலான சண்டையை உள்ளடக்கிய ஒரு பழங்கால விளையாட்டாகும். இது ஒரு இரத்த விளையாட்டு அல்ல, ஆனால் துளு நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு அம்சமாகவும், அதனுடன் தொடர்புடைய ஒரு பழங்கால சடங்காகவும் பார்க்கப்படுகிறது.[3] நாக தேவதை (பாம்பு கடவுள்) நிலத்தடிக்குச் சென்று மேலே உள்ள உயிரினங்களைக் காக்கிறார் என்ற பிரபலமான நம்பிக்கையின் படி, நாக ஆராதனை அல்லது பாம்பு வழிபாடும் நடைமுறையில் உள்ளது. கொங்கணி பேசும் கவுட சாரஸ்வத் பிராமணர்கள் கன்னடம் பேசும் பிராமணர்களைப் போல இரததோத்ற்சவம் மற்றும் தீபோத்ற்சவம் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கான சொந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர்.

கர்கலா வெங்கடராம கோயிலில் ஆண்டு தேர்த் விழா உலகெங்கிலும் உள்ள கொங்கணி பக்தர்களை ஈர்க்கிறது. கவுட சாரஸ்வத் பிராமணச் சமூகத்தினரிடையே ஒரு நல்ல திருவிழாவாக கருதப்படுகிறது.

கர்கலாவில் உள்ள கிறிஸ்தவர்கள் பல்வேறு பெயர்களால் அறியப்பட்ட ஒரு சிறப்பு விருந்தைக் கொண்டாடுகிறார்கள். இந்த பெயர்களில் சில சாந்த் மாரி, ஆத்தூர் பாரிஷ் விருந்து, மற்றொன்று, மேலும், (ஆத்தூரு ஜாத்ரே ) மற்றும் ஆத்தூர் தேவாலயத் திருவிழா. இந்த திருவிழா எப்போதும் சனவரி மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறுகிறது. மேலும் தொடர்ந்து செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மூன்று நாட்கள் நடைபெறும். இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை மசூதியில் பிரார்த்தனை செய்கிறார்கள். தியாகத் திருநாள் போன்றச் சந்தர்ப்பங்களில் சிறப்புத் தொழுகை நடத்தப்படுகிறாது. மேலும், சமணர்கள் ஆண்டுதோறும் தங்கள் சமண விழாக்களைக் கொண்டுள்ளனர்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  2. South Kanara District Gazetteer 1973
  3. "The Hindu". thehindu.co.in. 10 January 2008.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கர்கலா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்கலா&oldid=3806338" இலிருந்து மீள்விக்கப்பட்டது