துளு மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளு மக்கள்
மொத்த மக்கள்தொகை
சுமார் 1.8 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா1,846,427 (2011 census)[1]
மொழி(கள்)
துளுu
சமயங்கள்
முன்னணி
இந்து சமயம்
சிறுபான்மை:
சைனம்
கிறிஸ்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
திராவிடர் · கன்னடிகர்கள் · கொங்கனி மக்கள் · கொடுவா மக்கள்

துளு மக்கள் அல்லது துளுவா மக்கள் (Tulu people or Tuluva people) என்பவர்கள் தென்னிந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு இனக்குழுவினராகும். இவர்கள் தங்கள் சொந்த மொழியான துளு மொழியை பேசுபவர்கள். இவர்கள் பாரம்பரியமாக வசிக்கும் பகுதி துளு நாடு என்று அழைக்கப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் தெற்கு கன்னட மாவட்டம், கர்நாடகாவின் உடுப்பி மற்றும் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தின் ஒரு பகுதி அடங்கும். [2] [3] 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் இந்தியாவில் 1,846,427 பூர்வீக துளு மொழி பேசுபவர்கள் உள்ளனர். [1]

மக்கள் மற்றும் அடையாளம்[தொகு]

துளு பேசுபவர்ர்கள் பல்வேறு சாதிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். துளு பேசும் முக்கிய சாதிகள் செட்டிகர் / பத்மசாலி, முண்டர்கள், மொகேராக்கள், பைராக்கள், சமகாராக்கள், பில்லவாக்கள், சபாலிகா / சபல்யா, பந்த்துகள், மோகவீரர்கள், குலாலர்கள், தேவதிகாக்கள், துளு பிராமணர்கள், விசுவகர்மாக்கள் மற்றும் நாயக்கர்கள் முதலியன. மங்களூரின் சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்தவர்களும் துளு மொழி பேசுகிறார்கள். [4]

கலாச்சாரம்[தொகு]

துளுவர்கள், அலியசந்தனா என்று அழைக்கப்படும் ஒரு தாய்வழி உறவு முறையைப் பின்பற்றுகிறார்கள். இதில் பரம்பரை மாமா முதல் மருமகன் வரை உள்ளது. பிராமணர்கள் மற்றும் விசுவகர்மாக்கள் தவிர. [5] மற்ற தனித்துவமான அம்சங்களில் யக்சகானம், பூட்டா கோலா, நாகரதானே [6] ஆதி கலெஞ்சம் மற்றும் கம்பளா ஆகிய சடங்குகளும் அடங்கும். [7]

துளுவப் புத்தாண்டு பிசு பர்பா என்று அழைக்கப்படுகிறது. இது வைசாக்கி, விஷு மற்றும் தாய்லாந்தின் புத்தாண்டு போன்றவைகள் கொண்டாடப்படும் அதே நாளில் வருகிறது. [8]

துளுவ பதனங்கள் துளு மொழியில் நெருங்கிய தொடர்புடைய பல பாடும் மரபுகளின் ஒரு பகுதியாகும். அவை துளு பழங்குடியினரின் பரிணாம வளர்ச்சியையும் துளு கலாச்சாரத்தையும் விவரிக்கும் சந்தர்ப்பங்களில் பாடல்கள் பாடப்படுகின்றன. [9]

துளுநாட்டுக்கு கோரிக்கை[தொகு]

இந்தியா சுதந்திரத்திலிருந்து, மாநிலங்களின் மறுசீரமைப்பைத் தொடர்ந்து, துளுக்கள் துளுவுக்கு தேசிய மொழி அந்தஸ்தைக் கோருகின்றனர். [10] அவர்களின் மொழி மற்றும் தனித்துவமான கலாச்சாரத்தின் அடிப்படையில் துளு நாடு (துளுவர்களின் நிலம்) என்று அழைக்கப்படும் ஒரு தனி மாநிலத்தை கோருகின்றனர். சிறிது காலம் ஓரளவு அடங்கியிருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் இந்த தேவை வலுவடைந்துள்ளது. துளு ராச்சிய கொரட்டா சமிதி போன்ற பல அமைப்புகள் துளுவர்களின் காரணத்தை எடுத்துக் கொண்டுள்ளன. மேலும் அவர்களின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்பதற்காக துளு நாடு நகரங்களில் (மங்களூர் மற்றும் உடுப்பி போன்றவை) அடிக்கடி கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படுகின்றன. [11] [12] [13]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 "ABSTRACT OF SPEAKERS' STRENGTH OF LANGUAGES AND MOTHER TONGUES - 2011" (PDF). www.censusindia.gov.in. Indian Census 2011, Government of India. பார்க்கப்பட்ட நாள் 7 July 2018.
 2. "Tulu". ethnologue.com.
 3. "Tulu Nadu, Kasaragod, Kerala, India" (in ஆங்கிலம்). Kerala Tourism. பார்க்கப்பட்ட நாள் 12 June 2017.
 4. Shetty, Malavika (2010). Telling Stories: Language, Narrative, and Social Life (Identity building through Narratives on a Tulu Call-in Show). Georgetown University Press. pp. 95–108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781589016743.
 5. Yogitha Shetty. "Ritualistic World of Tuluva: A Study of Tuluva Women and Siri possession cult". பார்க்கப்பட்ட நாள் 12 December 2010.
 6. "Nagapanchami Naadige Doodadu". Mangalorean.com. 18 August 2007. பார்க்கப்பட்ட நாள் 28 January 2008.[தொடர்பிழந்த இணைப்பு]
 7. "Connecting with nature". "டெக்கன் ஹெரால்டு". 17 May 2010. பார்க்கப்பட்ட நாள் 20 May 2017.
 8. "Star of Mysore". பார்க்கப்பட்ட நாள் 26 July 2017.
 9. Peter J. Claus, "Varability in Tulu Padannas".[தொடர்பிழந்த இணைப்பு] Retrieved 2011-03-09.
 10. "Demand in RS for official status to Tulu, Kodava languages". dnaindia.com.
 11. Tulu Rajya Horata Samithi has urged that the region comprising Tulu speaking people should be given the status of a separate state."News headlines". daijiworld.com. Archived from the original on 2012-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-08-02.
 12. "Now the time has come for all Tulu natives to pressurize the union government with the demand for a separate Tulunadu state”, said renowned Tulu litterateur and Yakshagana artiste Kudyady Vishwanath Rai."Beltangady: Litterateur Kudyady Vishwanath Rai Voices Need for Tulunadu State". daijiworld.com. Archived from the original on 2020-01-11. பார்க்கப்பட்ட நாள் 2020-08-02.
 13. "Vedike demands separate Tulunadu State". The Hindu.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
துளு மக்கள்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளு_மக்கள்&oldid=3558887" இலிருந்து மீள்விக்கப்பட்டது