உள்ளடக்கத்துக்குச் செல்

துளு நாடு

ஆள்கூறுகள்: 13°00′N 75°24′E / 13.00°N 75.40°E / 13.00; 75.40
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளு நாடு
நிலப்பரப்பு
துளு நாடு-இன் கொடி
கொடி
தற்போது துளு மொழி பேசப்படும் பகுதி- துளுநாடு (மஞ்சள் நிறம்).
தற்போது துளு மொழி பேசப்படும் பகுதி- துளுநாடு (மஞ்சள் நிறம்).
ஆள்கூறுகள்: 13°00′N 75°24′E / 13.00°N 75.40°E / 13.00; 75.40
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகம், கேரளம்
மாவட்டம்தெற்கு கன்னடம், உடுப்பி, மற்றும் காசர்கோடு
பெரிய நகரம்மங்களூர்
மாவட்டங்கள் மற்றும் வட்டங்களின் எண்ணிக்கை3 மாவட்டம் மற்றும் 18 வட்டங்கள்
பரப்பளவு
 • மொத்தம்10,432 km2 (4,028 sq mi)
மக்கள்தொகை
 (2011)[3]
 • மொத்தம்45,74,385
 • அடர்த்தி356.1/km2 (922/sq mi)
இனம்
மொழிகள்
 • இணைப்பு மொழிதுளுவம்
 • பேச்சுமொழிதுளுவம், மலையாளம், கன்னடம், கொங்கணி, பியரி[4]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
தொலைபேசி குறியீடு0824, 0825
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுKA19, KA20, KA21, KA62, KA70, KL14.

துளு நாடு (ஆங்கிலம் : Tulu Nadu) கர்நாடகா மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்களான உடுப்பி மாவட்டம் மற்றும் தெற்கு கன்னடம் மாவட்டங்களை உள்ளடக்கியது. முன்னர் இது சேரநாட்டின் வடமேற்கில் அமைந்திருந்ததாகவும், கோசர் என்னும் அரசர்கள் இந்நாட்டை ஆண்டதாகவும் மாமூலனார் அகப்பாடல் கூறுகிறது.அகம் 15 இந்த கோசரே குடகக்கொங்கர், கொங்கிளங்கோசர் சிலம்பு 30 : 159 என்றும் அழைக்கப்படுவதால் இந்நாடு குடகுநாட்டையும் கொங்கு நாட்டையும் அண்டியிருந்ததாக தெரிகிறது.

துளுநாட்டில் கோசர் குடிமக்கள் வாழ்ந்தனர். அவர்கள் அந்நாட்டு வழியாகச் செல்பவர்களைப் பேணி விருந்தளித்துப் பாதுகாப்பர். துளுநாட்டில் மயில்கள் மிகுதி.[5]

இந்தச் செம்மற் கோசர் அக்காலத்தில் தமிழும் பேசத் தெரிந்த நான்மொழிக் கோசர்.

இது சங்ககால நிலைமை. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலுக்கு 16ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய மயிலைநாதர் தமிழ் பேசப்படாத நிலங்கள் 17 என நன்னூல் நூற்பாவின் வழி சுட்டி அவை இவை எனப் பெயர் சொல்லிக் காட்டும்போது இந்தத் துளு நாட்டையும் குறிப்பிடுகிறார். [6]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. "Tourism in DK District". National Informatics Centre, Karnataka State Unit. பார்க்கப்பட்ட நாள் 26 March 2008.
  2. "Tour to Udupi". Tourism of India. பார்க்கப்பட்ட நாள் 26 March 2008.
  3. "Census GIS India". Census of India. Archived from the original on 11 January 2010. பார்க்கப்பட்ட நாள் 26 March 2008.
  4. "Table C-16 Population by Mother Tongue: Karnataka". www.censusindia.gov.in. Registrar General and Census Commissioner of India.
  5. மெயம்மலி பெரும்பூண் செம்மற் கோசர் கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாகல் ஆர்கைம் பறைக்கண் பீலித் தோகைக்காவின் துளுநாடு அன்ன வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பின் செறிந்த சேரிச் செம்மல் மூதூர் – மாமூலனார் பாடல் அகநானூறு 15
  6. நன்னூல் 272 மயிலைநாதர் உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளு_நாடு&oldid=4088335" இலிருந்து மீள்விக்கப்பட்டது