விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு78

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாதுகாக்கப்பட்ட பக்கங்கள்[தொகு]

விசமிகளின் தொல்லை அதிகமாகி வருகிறது. ”தமிழ்” என்ற கட்டுரையின் உள்ளடங்களை யாரோ நீக்கியுள்ளார்கள். எனவே, சில முக்கியமான (குறிப்பாக தமிழ், தொன்மை, சங்க இலக்கியங்கள், தமிழ் மொழி, பண்பாடு) கட்டுரைகளை புகுபதிகை செய்தவர்கள் மட்டுமே தொகுக்க முடியுமாறு செய்யுங்கள். பதிவு செய்யாத ஒருவர், இக்கட்டுரைகளை தொகுக்க முனைந்தால், அக்கருத்தை உரையாடல் பக்கத்தில் இடவோ, அல்லது புகுபதிகை செய்தோ சேர்க்க முடியும்படி செய்துவிடுங்கள். இக்கட்டுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் சட்டம் ஏதேனும் உள்ளதா? நன்றி!--தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:07, 26 சூலை 2012 (UTC)[பதிலளி]

குறிப்பிடத்தக்க அளவிலான கட்டுப்படுத்த இயலாத விசமத் தொகுப்புகள் அல்லது தொகுப்புப் போர் போன்றவற்றிற்காக மட்டுமே பக்கங்களை காப்புச் செய்கிறோம் தமிழ்க்குரிசில். இது போன்ற ஒரு சில விசம /தெரியாமல் செய்கிற தொகுப்புகளுக்காக பக்கத்தை பூட்டுவதில்லை, ஒரு சில நேரங்களில் மட்டும் அதிகம் பேர் பார்வையிடும் பக்கத்தை முன்னெச்சரிக்கையாக காப்புச் செய்கிறோம். இனி மீண்டும் மீண்டும் இது போன்ற நீக்கல்கள் நடந்தால் பக்கத்தை காப்புச் செய்யலாம். ஒரு சிறு வேண்டுகோள்:உங்களின் கருத்துகளை இப்பக்கத்தின் இறுதியில் இடவும், அப்போதுதான் ஒரு தொடர்ச்சி இருக்கும் :)--சண்முகம்ப7 (பேச்சு) 16:36, 26 சூலை 2012 (UTC)[பதிலளி]

தமிழில் ஒருங்குறி வரிசைப்படுத்தல்[தொகு]

வார்ப்புரு பேச்சு:தமிழர் ஆடற்கலை வடிவங்கள் இங்கே, தமிழ்ச் சொற்கள் பட்டியல் ஒன்றை பி.எச்.பி யின் built in செயலி கொண்டு வரிசைப்படுத்திப் பார்த்தேன். ஜ இடையில் வருகிறது. இது ஒருங்குறியின் சிக்கலா, அல்லது பி.எச்.பி செயலியின் சிக்கலா என்று கூற முடியுமா? --Natkeeran (பேச்சு) 14:41, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஒருங்குறியில் ஜகரம் சகரத்திற்கும் ஞகரத்திற்கும் இடையில் தவறாக அமைந்துள்ளது (ஆதாரம்). அதற்கேற்றவாறு பி. எச். பி. செயலியில் மாற்ற வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 14:58, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]
நன்றி. மதனாகரன். எப்படி ஒருங்குறியை இந்தளவு சொதப்பினார்கள் என்று தெரியவில்லை. பி.எச்.பியை செயலியோடு கூடிய ஏரணம் சேர்க்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 17:47, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]
பி.எச்.பி வரிசைப்படுத்தி முதல் எழுத்தை மட்டுமே வரிசைப்படுத்துகிறது. அது அவ்வளவு சிறப்பான தீர்வு அல்ல. பிற மொழிகளில் இதைச் செய்து பாக்கலாம். --Natkeeran (பேச்சு) 17:58, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]
ஒருங்குறிய அமைப்புக்கு, இந்திய அலுவலக மொழிகளின் கணினி எழுத்துரு நுண்ணியங்களை, தனித்தனியே முன்னிலைப்படுத்தாமல், இசுகியை (ISCII) அடிப்படையில் மட்டுமே முன்னிலைப் படுத்தியதால், நமது தமிழுக்கு நேர்ந்த கொடுமைகளில் இதுவும் ஒன்றல்லவா?. இசுகியில், , சா, , ஜா என ஒலிப்புகள் உள்ளன. தமிழில் 2.ஆனால், இங்கும் கிரந்த இடைச்செருகலோ? தமிழின் தனித்துவத்தை, இதனால் இழந்துள்ளோம்.அனைத்து இந்திய மொழிகளும் ஒன்று என, அயலவர் நினைக்க இது அடிகோலிவிட்டது.தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்த, பி. எச். பி.(php)-யை விட, ஓபன் ஆபிசின் அட்டவணைச்செயலி(spread sheet), நன்கு எளிமையாக அனைவருக்கும் உதவுமென்றே எண்ணுகிறேன். முயன்று பாருங்கள்.-- உழவன் +உரை.. 03:43, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]

சீரான வரிகள்[தொகு]

விக்கியில் எம்.எஸ். வேர்டில் உள்ளது போஒல் allign வசதி உள்ளதா ஒவ்வொரு வரியின் இறுதி இடமும் மாறுவதால் அலங்கோலமாய்த் தெரிகிறதே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:32, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]

இப்போதுள்ள முறையே சிறந்ததாகத் தெரிகிறதே. உதாரணத்திற்கு ஒரு பகுதியைச் சுட்டிக் காட்டுங்கள். (screenshot வேண்டாம்)--Kanags \உரையாடுக 08:38, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]

மேலுள்ள அலங்கோலமாய்த் என்ற வரியின் முடிவையும் Kanags உரையாடுக என்ற அடுத்த வரியின் முடிவையும் ஒப்பிடுங்கள். 2 வரியின் முடிவும் எவ்வளவு தள்ளி இருக்கிரது என்று பாருங்கள். இதுவே அலைன் போன்று ஒரு வசதியிருந்தால் எல்லா வரியும் ஒரே இடத்திலேயே முடிவடையும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:12, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]

இப்போதைக்கு வரிசீராக்கம் விக்கியில் இல்லை என்று நினைக்கிறேன். அவ்வாறு வரி சீராக்கம் இருந்தால் அனைத்து பக்கமும் அழகாக இருக்கும். எம்.எஸ். வேர்டில் உள்ளது போல் வலது, இடது, நடு வரிகள் சீராக்கம் என்பதெல்லாம் தேவையில்லை. தன்னிச்சையாகவே அனைத்து கட்டுரைகளும் Justify alignmentஐ போல் சீராக்கினால் நன்றாக இருக்கும். --இராச்குமார் (பேச்சு) 09:21, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]

நான் கூறியதும் ஜசுடிஃபை அலைன்மன்டைத்தான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:19, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]

Justify alignment பரவலாகப் பயன்பாட்டில் இல்லை. ஒரே வரியில் சொற்களுக்கிடையே வெவ்வேறு அளவில் இடைவெளிகள் தோன்றும். ஆங்கில விக்கியிலும் அது இருப்பதாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 12:38, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]
கனக்ஸ், தற்போது ஆங்கில விக்கியில் இந்த வசதி உள்ளது. தோற்றம் >> மேலதிக(/மேம்பட்ட) வசதிகள் சென்று இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம். இதே வசதியை தமிழிலும் அமைக்கலாம். மேலும் இது தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ள புத்தகமாக்கிடு பொத்தானை கொண்டு நூல் உருவாக்கும்போது பக்க வடிவைப்பில் இந்த வசதி பெரிதும் உதவும். --எஸ்ஸார் (பேச்சு) 16:35, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]
மன்னிக்கவும். தற்போதுதான் நான் கவனித்தேன். இந்த வசதி ஏற்கனவே தமிழிலும் கிடைகிறது. தோற்றம் >> மேம்பட்ட தேர்வுகள் சென்று ஓரச் சீரமைப்பு என்ற பெயரில் கிடைகிறது. :) --எஸ்ஸார் (பேச்சு) 16:46, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]
நன்றி எஸ்ஸார். நான் கூட ஒவ்வொரு பக்கத்தையும் தொகுக்கும் பொழுது சீர்மைபடுத்த வேண்டும் என்று ஐயமுற்றேன். பார்வையாளரின் விருப்பத்திற்கேற்ப சீர்மைப்படுத்துதலைக் கண்டு மகிழ்ந்தேன். --இராச்குமார் (பேச்சு) 16:59, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]
அவரவர் திரை அளவுகளைப் பொருத்து, இது மாறும் அல்லவா? என் விருப்பத்தேர்வுகளில்,ஒரு பகுதியான கருவிகள் தத்தலில்,/wikEd, ஃபயர்ஃபாக்சில்..தொகுத்தல் கருவி/ என்பதை பயன்படுத்திப்பாருங்கள். உங்களது இணைய வேகம் குறைவு என்றால், அவ்வசதி வேண்டாம். என்பேன். Justify alignment = சமர்த்தித்த/சமர்த்திய வரிச்சீராக்கம். தமிழ் கடலில் நீந்துங்கள். ஓரமாக நின்று, ஒலிப்புகள் மூலம் பிற மொழியினை திணிக்காதீர்கள். என் கோரிக்கை இது. வற்புறுத்தல் அல்ல. வணக்கம்.-- உழவன் +உரை.. 15:35, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]

கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள்[தொகு]

திருத்தம் செய்ய வேண்டிய கூகுள் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் காட்சிப்படுத்துவது நல்லதொரு திட்டம். ஆனாலும், கட்டுரைகள் திருத்தப்பட முன்னர் அவற்றின் காட்சிப் படுத்தலை நீக்கி புதிய கட்டுரைகளைத் தருவது சரியான முறையாகத் தெரியவில்லை. ஒரு கட்டுரை திருத்தி முடிந்தவுடன் அதன் கூகுள் வார்ப்புருவையும் நீக்கி காட்சிப்படுத்தலில் இருந்தும் நீக்கலாம். இதற்கு சிலவேளை இரு வாரங்களுக்கு மேல் தேவைப்படலாம்.--Kanags \உரையாடுக 08:43, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]

இங்கு மறுமொழி இட்டுள்ளேன்--இரவி (பேச்சு) 09:30, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]

வார்ப்புரு இயங்குகிறதா?[தொகு]

வார்ப்புரு பேச்சு:விக்கிப்பீடியராக இவ்வார்ப்புரு இயங்குகிறதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:50, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]

இற்றைப்படுத்தல் தாமதம்[தொகு]

இந்தவாரக்கூட்டுமுயற்சிக்கட்டுரை முறையாக இற்றைப்படுத்தப்படுவதில்லை. இதனைக் கவனிக்கவும்--பிரஷாந் (பேச்சு) 07:57, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று. நினைவூட்டலுக்கும் ஆர்வத்தக்கும் நன்றி :)--இரவி (பேச்சு) 08:05, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]

மொழியியல் அடிப்படையில் இலக்கணக்குறிப்புகளுடன் "விரிதரவு"[தொகு]

"தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் 2011-2012 ஆம் ஆண்டிற்கான பகுதி-II திட்டத்தின் கீழ் “தமிழ் இலக்கியங்களுக்கு மொழியியல் அடிப்படையிலான இலக்கணக் குறிப்புடன் கூடிய விரிதரவு” ‘Linguistically Annotated Corpus for Tamil Literature” என்ற திட்டம் நடைபெற்று வருகிறது." பார்க்கவும். மிகவும் தேவையான ஒரு பணியை தொடங்கி இருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. --செல்வா (பேச்சு) 16:42, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]

அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. விக்சனரியில் பகுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.--இராச்குமார் (பேச்சு) 16:51, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]
நல்ல விடயம். தகவல் பகர்வுக்கு செல்வாவுக்கு நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:39, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]

இந்திய வரலாற்றில் கேள்வி[தொகு]

இந்திய வரலாற்றில் ஏதாவது அரசகுலம் 2000 ஆண்டுகளுக்கு மேல் அரசாண்டதாக வரலாறு உண்டா? இருந்தால் இங்கு தெரியப்படுத்தவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:25, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]

Help decide about more than $10 million of Wikimedia donations in the coming year[தொகு]

(Apologies if this message isn't in your language. Please consider translating it)

Hi,

As many of you are aware, the Wikimedia Board of Trustees recently initiated important changes in the way that money is being distributed within the Wikimedia movement. As part of this, a new community-led "Funds Dissemination Committee" (FDC) is currently being set up. Already in 2012-13, its recommendations will guide the decisions about the distribution of over 10 million US dollars among the Foundation, chapters and other eligible entities.

Now, seven capable, knowledgeable and trustworthy community members are sought to volunteer on the initial Funds Dissemination Committee. It is expected to take up its work in September. In addition, a community member is sought to be the Ombudsperson for the FDC process. If you are interested in joining the committee, read the call for volunteers. Nominations are planned to close on August 15.

--Anasuya Sengupta, Director of Global Learning and Grantmaking, Wikimedia Foundation 20:26, 19 சூலை 2012 (UTC)[பதிலளி]

Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)

கட்டுரைப் பின்னூட்டக் கருவி நிறுவுதல் வாக்கெடுப்பு[தொகு]

உங்கள் கருத்துக்களும், வாக்குகளும் நுட்ப_மாற்ற_வாக்கெடுப்பு/கட்டுரைப்_பின்னூட்டக்_கருவி_நிறுவுதல் பக்கத்தில் வரவேற்க்ப் படுகின்றன. நன்றி ஸ்‌ரீகாந்த் (பேச்சு) 09:38, 20 சூலை 2012 (UTC)[பதிலளி]

தமிழ் எழுத்து உதவி[தொகு]

Sony Ericson, samsung போன்ற கைபேசிகளில் தமிழ் font பெரும்பாலும் இருப்பதில்லை. என் நண்பனுக்கு கைபேசியில் விக்கியை தமிழில் படிக்க ஆசை. தொழில்னுட்ப உதவி செய்யுமாறு வேண்டுகிறேன். தமிழ் font தொடர்பான அனைத்து உதவிகளுக்கும் ஏதேனும் பக்கம் உள்ளதா? --தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:44, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறுவது ஜாவா ஆதரவு மட்டும் கொண்ட கைபேசிகள் என நினைக்கிறேன். அதில் opera உலாவி பயன்படுத்தும் போது use bitmap image for complex script தேர்வு மூலம் தமிழை படிக்கலாம். வழிமுறைகள். மேலும் கைபேசிப்பார்வையை பயன்படுத்தலாம். கணினிக்கு விக்கிப்பீடியா:Font_help உதவும் --சண்முகம்ப7 (பேச்சு) 08:11, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறிய தளத்தைப் பார்த்தேன். செயற்படுத்திப் பார்த்தேன். தகவலுக்கு நன்றி --தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:09, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]

கணினிக்கான தமிழ் எழுத்துரு உதவிக்கான தேவை அருகி வருகிறது. ஆனால், செல்பேசிகளுக்கான விரிவான கையேட்டை உருவாக்க வேண்டியுள்ளது--இரவி (பேச்சு) 18:14, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]

இணைக்கப்பட்ட கட்டுரையைப் பிரித்தல்[தொகு]

இணைக்கப்பட்ட இரு கட்டுரைகளை வரலாற்றுடன் சேர்த்து மீண்டும் பிரிக்க முடியுமா? கிலோகிராம் கட்டுரைப் பேச்சுப் பக்கத்தைப் பார்க்க.--Kanags \உரையாடுக 11:58, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]

இயலாது என்றே நினைக்கிறேன், சிறீதரன். இது போன்ற இடங்களில் கையாள வேண்டிய முறையை இங்கே தந்துள்ளார்கள். -- சுந்தர் \பேச்சு 12:03, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]
தொடுப்புக்கு நன்றி.-- உழவன் +உரை.. 15:25, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]

எழுத்துக்கள், மொழிகள் தொடர்பான கட்டுரைகள்[தொகு]

இலத்தீனை மூலமாக்க் கொண்ட எழுத்துக்கள் ஆங்கில கட்டுரையை பார்க்க நேர்ந்தது. (ஒரு சில எழுத்துக்கள் மட்டுமே சேர்த்தால் எசுப்பானியம்). அதில் ஆங்கில அரிச்சுவடியை ஒட்டி உள்ள/அடிப்படையாகக் கொண்ட எழுத்துக்களை அறிந்துகொள்ள உதவியது. தமிழிலும் இதுபோன்ற கட்டுரைகள் இருந்தால் மாணவர்களை, மொழியிலாளர்களை வெகுவாகக் கவரும். குறைந்தபட்சம் குறுங்கட்டுரையாக்க முயலவேண்டும். நன்றி. -- மாகிர் (பேச்சு) 16:06, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]

விக்கிதானுலாவி மூலம் கட்டுரை தரவேற்றம்[தொகு]

விக்கிதானுலாவியைப் பயன்படுத்தி, பயனர் கணேசின் CSV LOADER மூலம், பயனர் நற்கீரனின் "விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்" எண்ணத்தை மையமாக வைத்து பரீட்சார்த்தமாக 7 அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள் குறுங்கட்டுரைகள் தரவேற்றப்பட்டுள்ளது. இதன் மாதிரி வடிவம் : பயனர்:Drsrisenthil/AWB CSV LOADER --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 17:21, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]

நல்ல முயற்சி. எனது கருத்துகளை இங்கு இட்டுள்ளேன்--இரவி (பேச்சு) 18:14, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]

பகுப்புக்கள்[தொகு]

விக்கி பகுப்புகளில் திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள் , திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் என இரண்டு வகையான பகுப்புக்கள் உள்ளன. இவற்றில் உள்ள வித்தியாசம் என்ன?--பிரஷாந் (பேச்சு) 07:03, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]

கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் நடந்து கொண்டிருந்த போது, உரை திருத்தம் முடிந்தது என்று மொழிபெயர்ப்பாளர்கள் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டு வந்தனர். இந்த அறிவிப்பு இக்கட்டுரைகளைச் சரி பார்க்க விக்கி சமூகத்துக்கு உதவியாக இருந்தது. இவையே திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் என்ற பகுப்பின் கீழ் குறிக்கப்பட்டன. ஆனால், விக்கி சமூகத்தால் சீராக்கப்பட்டு கூகுள் வார்ப்புரு நீக்கப்பட்ட கட்டுரைகள் திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள் என்பதின் கீழ் குறிக்கப்படுகின்றன. திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் பகுப்பு தற்போது தேவை இல்லாதது. அதில் உள்ள பேச்சுப் பக்கங்களில் வேறு உள்ளடக்கம் இல்லாவிட்டால் நீக்கிவிடுவது தகும்--இரவி (பேச்சு) 09:18, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]

காப்புரிமை நிலைமை அறியப்படாத அனைத்து படிமங்கள்[தொகு]

காப்புரிமை நிலைமை அறியப்படாத அனைத்து படிமங்கள் இங்குள்ள படிமங்களை நீங்கிவிடலாம். நீங்கலுக்கான அறிவித்தல் 2011ம் ஆண்டுக்கு மேலாகக் காணப்படுகின்றது. மேலும், பல பாவனையில் இல்லாதவையும், மாற்றீடான கோப்புக்களை பொதுவில் கொண்டும் காணப்படுகின்றன. சிலவற்றிற்கு மாற்றீடான கோப்புக்களை இணைத்துள்ளேன். --Anton (பேச்சு) 07:32, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]

இவற்றில் சில படிமங்களைத் தேர்ந்தெடுத்து நியாயப் பயன்பாட்டு வார்ப்புருக்களை இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 07:49, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]

முதற்பக்கமும் அண்மைய மாற்றங்களும்[தொகு]

முதற்பக்கத்தில் “நீங்களும் கட்டுரை எழுதலாம்” என்ற பகுதியை வைத்ததிலிருந்து, புதிய கட்டுரைகள் பல நாளுக்கு நாள் உருவாகின்றன. புதிய பயரைகளை ஈர்க்கும் விதத்தில் நீங்கள் இவ்வாறு செய்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மென்மேலும் த. விக்கி வளர உதவும். ஆயினும், அவற்றில் பெரும்பான்மை ஆங்கிலத் தலைப்போ/உள்ளடக்கமோ, சோதனை முயற்சியாகவோ உள்ளன. பெரும்பான்மையினர் விதிமுறைகளைப் படிப்பதில்லை எனக் கருதுகிறேன், முக்கியமான இந்த இரண்டு விதிகளை மட்டும் ””முதற்பக்கத்திலேயே”” இடுமாறு வேண்டுகிறேன். (பிறவற்றை உள்ளே படித்துக்கொள்ளட்டும்)

1. தலைப்பும், உள்ளடக்கங்களும் தமிழில் இருக்க வேண்டும். 2. தெரிந்தவற்றை எழுதலாம். தேவையற்றவை/ தற்புகழ்ச்சி/ அநாகரிகமானவை நீக்கப்படும். {இவ்விதியை திருத்தம் செய்து வெளியிடுங்கள்}.

புதுப் பயனர் உதவி எளிமையாக உள்ளது. பயனர் ஒருவர் புதியவர்களுக்காக சிறிய காணொளி ஒன்றைத் தயாரிப்பதாக அறிந்தேன். என் மனமார்ந்த வாழ்த்துகள்! புதுப் பயனர்களுக்கு இன்னும் எளிமையாக உதவ, புகுபதிகை செய்துள்ள நிர்வாகிகள் சிறப்பு உதவி பக்கம் ஒன்றில் கையொப்பமிடவும். இதற்கான இணைப்பு முதற்பக்கத்தில் இருக்கட்டும். இப்பக்கத்தில் உள்ள பயனரை சொடுக்குவதன் மூலம் புதியவர் அவரிடம் ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற முடியும்!. மேலும் ஏதேனும் முக்கியமான (மேம்படுத்தல் தொடர்பான) கலந்துரையாடல் நடைபெற்றால் எங்களுக்குத் தெரிவதில்லை. எல்லாப் பயனர்களுக்கும்,(குறைந்தபட்சம் அந்த மாதத்தில் புகுபதிகை செய்த பயனர்களுக்காவது) இது குறித்து செய்தி அனுப்பும் வசதி உள்ளதா?

அண்மைய மாற்றங்கள் பகுதியில் ’கூட்டு முயற்சியான கட்டுரையான’ என வருகிறது. இது பிழையென்று கருதியே கூறுகிறேன். என் கருத்து பிழையெனில் மன்னிக்கவும். இப்பக்கத்தில் வரிசையாக, “அறுபட்ட..”, “மொத்த கட்டுரை..”, “விரைவு நீக்கல்” என சிலவற்றை வைத்துள்ளீர்கள். சில வேளைகளில் இவற்றை மாற்றுகிறீர்கள். ஏன் எல்லாவற்றையும் இரண்டொரு வரிகளில் வைக்கக் கூடாது? நன்றி! --தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:18, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]

  1. முதல் கருத்திற்கு மற்ற பயனர்களின் கருத்தையும் அறிந்து செய்யலாம்..
  2. புகுபதிகை செய்துள்ள நிர்வாகிகள் கையொப்பம் இடம் முறை அவ்வளவு சரியாக வருமா எனத் தெரியவில்லை, ஏனெனில் பலர் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வர், சிலர் எந்நேரமும் புகுபதிகையில் இருந்து கொண்டு, வேறு பணிகளில் இருப்பார். அதற்கு IRCஐ பயன்படுத்தலாம். ஆனால் நம் பயனர்கள் அவ்வளவாக IRC உபயோகிப்பதாக தெரியவில்லை. #wikipedia-taconnect தமிழ் விக்கிக்கான இணைய அரட்டைக் களம்.
  3. பிழை சரி செய்யப்பட்டது.
  4. பயனர்களின் கவனத்தை ஈர்க்க அவ்வாறு இருக்கலாம், இரவிதான் பதில் கூற வேண்டும்--சண்முகம்ப7 (பேச்சு) 16:43, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]
//மேலும் ஏதேனும் முக்கியமான (மேம்படுத்தல் தொடர்பான) கலந்துரையாடல் நடைபெற்றால் எங்களுக்குத் தெரிவதில்லை. எல்லாப் பயனர்களுக்கும்,(குறைந்தபட்சம் அந்த மாதத்தில் புகுபதிகை செய்த பயனர்களுக்காவது) இது குறித்து செய்தி அனுப்பும் வசதி உள்ளதா? //
நமக்கு ஒரு மின்னஞ்சல் குழு [1] உள்ளது. புதுப்பயனர் வரவேற்பில் பயனர்களை அதில் சேர சொல்லலாம். தற்போதைக்கு அதில் இது போன்ற அறிவிப்புகளை செய்வதில்லை. வேண்டுமெனில் செய்யலாம். முக்கியமான கொள்கை உரையாடல்களுக்கு தள அறிவிப்பு போன்றவை உபயோகப்படும். குறிப்பிட்ட பயனர்களுக்கு இது போல ஏதேனும் தெரிவிக்க வேண்டுமாயின் தானியங்கிகளை பயன்படுத்தி பேச்சுப் பக்கத்தில் அறிவிக்கலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 16:53, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]
தமிழ்க்குரிசில், நல்ல விசயங்களை ஆர்வத்துடன் சுட்டியுள்ளமைக்கு நன்றி.
முதற்பக்கத்தில் உள்ள பங்களிப்புத் தூண்டல் பற்றி உங்கள் கருத்தைச் செயற்படுத்துகிறேன். இன்னும் விரிவான குறிப்புகளைத் தந்தால் இன்னும் தரமான பங்களிப்புகள் கிடைக்கும். இடத்தை அடைக்காமல் இதை எப்படிச் செய்வது என்று பார்க்க வேண்டும்.
தங்கள் மின்மடல், கூகுள் அரட்டை, தொலைப்பேசி விவரங்களைப் பகிர விரும்பும் பயனர்கள் ஒத்தாசைப் பக்கத்தில் பதிந்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். இதன் மூலம், தனிப்பட்ட தொடர்பின் மூலம் உதவி பெற இயலும். தளத்திலேயே உதவி கேட்க விரும்புவோர் ஒத்தாசைப் பக்கத்திலேயே கேட்பது நன்று. உதவி அளிப்போரும் இதனை வலியுறுத்துவது நன்று. புதுப்பயனர் வரவேற்பில் மடற்குழுவைப் பற்றித் தெரிவிக்கலாம். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த மடற்குழுவுக்கு அறிக்கை அனுப்பலாம் (அடிக்கடி அனுப்பினால் எரிதம் போல் ஆகலாம்) ஆண்டின் இறுதியில் இவற்றைத் தொகுத்து ஆண்டு அறிக்கை எழுத உதவும். மற்றபடி, விக்கிப்பீடியா ஒருங்கிணைப்புக்கு மடற்குழுவைப் பொருத்தமாக இருக்காது. கொள்கை முடிவு உரையாடல்களில் முனைப்பான பங்களிப்பாளர்களே பங்கு கொள்வர் என்பதால் ஆலமரத்தடியிலும் அண்மைய மாற்றங்களிலும் அறிவிக்கலாம்.
அண்மைய மாற்றங்களில் பல்வேறு துப்புரவுத் தரவுகள், நிலுவையில் உள்ள பணிகளை இற்றைப்படுத்தி வருகிறோம். புதிதாக ஒன்று அறிவிக்கப்படும் போது அதைக் கவனிப்பதும் தொடர்ந்து இருக்கும்போது அதைக் காணாமல் விடுவதும் பயனர் ஊடாட்ட இயல்பு என்பதாலேயே எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாகவும் தொடர்ந்தும் தராமலும் மாற்றி மாற்றி இற்றைப்படுத்தி வருகிறேன். இடத்தை அடைக்காமலும் இருக்கும், ஒரு சில தெரிவுகளை மட்டும் இடும் போது அவற்றின் மீது கூடுதல் கவனமும் கிடைக்கும். நிறைய பணிகள் நிலுவையில் இருப்பதைக் கண்டால் அயரச் செய்தாலும் செய்யும்.--இரவி (பேச்சு) 07:34, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]

எங்களையெல்லாம் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி மனநிறைவு அடையும் ரவி அவர்களுக்கு நன்றி! என் கருத்துகளை பரிசீலித்தமைக்கு நன்றி! முதற் பக்கத்தில் ,மேலே சொன்ன இரண்டு விதிகளையும் குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே, தமிழ்த் தலைப்புகளுடன் கட்டுரைகள் உருவாகின்றதைக் கண்டீர்களா? ஆயினும், இரண்டு விதிகளை மட்டுமே எழுதி உள்ளதால், பிற விதிகளை யாரும் பார்ப்பதில்லை எனக் கருதுகிறேன். (அதற்காக எல்லாவற்றையுமா முதல் பக்கத்தில் எழுதமுடியும்?). எனவே, “மாதிரியைப் பாருங்கள்” என்ற ஒற்றைத் தலைப்பின் இணைப்பை கீழே இட்டு, அப்பக்கத்தில் ஒரு உதாரண கட்டுரையை எப்படி எழுதக் கூடாது எனவும் எப்படி எழுதவேண்டும் எனவும் இரு பகுதிகளில் சிறிய மாதிரி ஒன்றை எழுதி highlight செய்து காட்டுமாறு வேண்டுகிறேன். இது மிக முக்கியமானது என்பதால், விரைந்து சிந்தித்து, சிறந்த தீர்வு காணுமாறு வேண்டுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:21, 26 சூலை 2012 (UTC)[பதிலளி]

~~சிறு மாற்றம் வேண்டுகிறேன்.~~ மாற்றத்திற்கான சில காரணங்கள்:

  • பெரும்பாலானவர்களிடம் தமிழ்த் தட்டச்சு வசதி இருப்பதில்லை. அதனாலேயே, ஆர்வமுள்ள பலரும், “thanjavur mavattam sooza naattil uLLahtu ” என்பதுபோன்று தட்டசிடுவதும் பின்னர் இப்பக்கம் நீக்கப்படுவதும் வழமையே! என்ன தான் நாம் தட்டச்சு உதவி வழங்கினாலும், புதியவர்கள் பலர் ஆர்வமிகுதியால் எதையும் தெளிவாகப் படிப்பதில்லை என நினைக்கிறேன். (இணையத்திற்கே புதியவர்கள் என்றால் இவர்களுக்கு விளங்குவதில்லை)
  • முதற்பக்கத்தில் விதிகள் எழுதப்பட்டாலும், இதையும் பெரும்பான்மையினர் கவனத்தில் கொள்வதில்லை,
  • மணல்தொட்டியில் பயிற்சி செய்யுங்கள் எனக் கூறினாலும், கட்டுரைகளிலேயே தொகுத்துப் பழகுகின்றனர்.

புதியவர்களுக்கு விக்கியைப் பற்றித் தெரியாததால், இவை நடைபெறுவது வழமையே! கீழ்க்கண்டவாறு செயற்படுத்தினால் சிறப்பாக இருக்குமெனக் கருதுகிறேன், (உதவிக் குறிப்புகளை மட்டும் வழங்காமல், நாமே உதவினால் என்ன?) கட்டுரை எழுதும்முன் சிறு குறிப்புகள் வழங்கப்படுவது நல்லது. முதற்பக்கத்தில் “நீங்களும் கட்டுரை எழுதலாம்” என்ற பகுதியில், தலைப்பை உள்ளிடுங்கள் என்பதை நீக்கவும். கட்டுரையை நீங்களும் தொகுக்கலாம் என்பதை அறிவீர்களா, அறிந்து கொள்ள, இங்கே செல்லவும், என்பது போன்ற இணைப்பை வழங்கலாம். அடிப்படையான விக்கி செயல்களை (தமிழ்த் தட்டச்சு) சிலவற்றை மட்டும் ஒரு பக்கத்தில் காட்டி, மேலும் அறிய தனி இணைப்பை வழங்கலாம். வேண்டாமெனில் skip வசதி மூலம், மணல்தொட்டிக்கு இட்டு செல்லும், அதில் தொகுத்து சேமிக்கவும் எனக் கூறலாம். இங்கே அடிப்படையான எழுத்து செயல்பாடுகளான, bold, headline, adding an image போன்றவற்றிற்கு குறிப்பு வழங்கி ஒவ்வொன்றையும் மணல்தொட்டியில் செயல்படுத்திப் பார்க்கவும் எனலாம். பின்னர் மேலும் உதவிக்கு என்று, இணைப்புகளை வழங்கலாம். மேலுவற்றில் நான் கூற வருவது user friendly ஆக, படினிலைகளக் கொண்டு இருக்க வேண்டுமென்பதே! நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு)

கவனிக்கப்பட வேண்டிய பேச்சுப்பக்கம்[தொகு]

பேச்சு:தமிழ்த்தாய் வாழ்த்து. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:02, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]

செந்தமிழ் அறிவியல் - சுப்பராமன்[தொகு]

இந்த ஒளிப்படத்தை பாருங்கள். அறிவியல் தமிழ் இலக்கியத்தை பற்றி சுப்பராமன் உரை. --இராச்குமார் (பேச்சு) 15:24, 24 சூலை 2012 (UTC) 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 17:39, 24 சூலை 2012 (UTC)[பதிலளி]

நன்று. நல்ல முயற்சி. சுப்பராமன் அவர்களைப் பாராட்டுகின்றேன், அவர் உணர்வையும் பாராட்டுகின்றேன். இங்கே பகிர்ந்தமைக்கும் நன்றி. ஆனால் இன்றைய நிலையில் சமன்பாடுகள் வாயிலாகவும், எளிய உரைநடை வாயிலாகவும், படங்களின் வாயிலாகவும் சொல்வதே சிறந்தது என்பது என் தனிக்கருத்து. நியூட்டனின் விதிகளையும் ஓளியின் இருமைப்பண்பையும் குறள்வெண்பாக்களாக 1994-5 களில் எழுதி soc.culture.taml போன்ற குழுமங்களில் வெளியிட்டிருக்கின்றேன். அவை ஒரு விளையாட்டு போலவோ, இலக்கியப் படைப்பு போலவோ இருப்பதின் மறுப்புகள் இல்லை. ஆங்கிலத்திலும் சிலர் அறிவியற்கருத்துகளை "பாட்டு/செய்யுள்" வகையில் எழுதியுள்ளனர். ஆனால் புதிதாக கருத்தைக் கற்க இன்றைய சூழலில் எளிய ஒழுக்கம் சார்ந்த உரைநடையும் சமன்பாடுகளும், விளக்கப்படங்களும் சிறந்தவை. --செல்வா (பேச்சு) 02:52, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]

விரைந்து நீக்க வேண்டிய பக்கங்கள்[தொகு]

இன்று விரைந்து நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் பகுப்பில் உள்ள கட்டுரைகளை ஆய்ந்ததன் பேரில் பின்வரும் கருத்தை முன்வைக்கிறேன்: ஒரு விக்கிப்பக்கம் விரைந்து நீக்கப்பட வார்ப்புரு இணைப்போர் விரைந்து நீக்குதலுக்கான காரணங்களில் ஒன்றை உரையாடல் பக்கத்தில் அல்லது தொகுத்தல் சுருக்கத்தில் இடுதல் நலம். அவ்வாறில்லாத கட்டுரைகளை நீக்க விரும்பினால் விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு பக்கத்தில் தகுந்த காரணங்களுடன் பரிந்துரையுங்கள். பிற பயனர்கள் தகுந்த ஆட்சேபனை தெரிவிக்காவிடத்தும் தகுந்த காரணங்கள் இருக்குமிடத்தும் நிர்வாகிகள் அக்கட்டுரையை நீக்குவார்கள். இவ் வாக்கெடுப்பு பொதுவாக ஒரு வாரம் நிலுவையில் இருக்கும். --மணியன் (பேச்சு) 18:35, 24 சூலை 2012 (UTC)👍 விருப்பம்--Kanags \உரையாடுக 21:15, 24 சூலை 2012 (UTC) 👍 விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 02:31, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --செல்வா (பேச்சு) 02:44, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:54, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]

நீக்கல் வார்ப்புருவை இட்ட பயனர் காரணத்தைச் சேர்க்க மறந்தாலும், கட்டுரையை நீக்குவது சரி என்று நினைக்கும் பயனர் அதற்கான காரணத்தைப் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்க வேண்டும். மறுப்பு இல்லா நிலையில் ஒரு வாரம் பொருத்திருந்து அழிக்கலாம். அல்லது, அப்பக்கத்திலேயே உரையாடலாம். நேரடியாக வாக்கெடுப்புப் பக்கத்துக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்--இரவி (பேச்சு) 05:32, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]

GLAM Crafts Museum blog post[தொகு]

Dear all, Here's a blog post cum report on India's first GLAM initiative at the National Crafts Museum! The program started out in English but was taken forward in Hindi to suit the staff members who have been enthusiastically creating articles and editing in Hindi Wikipedia! The program has been a bold step to prove that GLAM can very well happen in India - with its own design and structure and it has also given the Hindi community a precious gift of 6 new editors.

A special thanks to User: Roboture who has been with us in each and every meet and helped train editors, User:Yann for his first set of invaluable Commons contributions and to User:Aniruddhajnu and User:Siddhartha Ghai for coming down to the museum to inspire the staff members.

Hope this gives more courage to any community that wants to start a similar project! Would love to provide any help needed. Noopur28 (பேச்சு) 06:29, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]