பேச்சு:கிலோகிராம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிலோகிராம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

பேச்சு:கிலோ காணவும்.-- உழவன் +உரை.. 00:00, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]

எதனால் துப்புரவு வார்ப்புரு இடப்பட்டுள்ளது எனப் புரியவில்லை. --மணியன் (பேச்சு) 02:23, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]
கிலோ, கிலோகிராம் என்ற இருகட்டுரைகளை, உடன் ஒருங்கிணைவு செய்தமைக்கு நன்றி-- உழவன் +உரை.. 04:20, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]
கிலோ (en:Kilo-, கிலோகிராம் (en:Kilogram) என்ற இரு கட்டுரைகளும் வெவ்வேறாக இருப்பதே சிறந்தது. கிலோ கட்டுரையில் இருந்த பகுதி கிலோகிராமுக்குப் பொருத்தமில்லாமல் உள்ளது.Kanags \உரையாடுக 05:07, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]
கிலோ கிராம் என்பது முக்கியமான அடிப்படை முறை அலகு. அதற்கென தனிக் கட்டுரை இருக்க வேண்டுவது தேவை. அதனோடு "கிலோ" என்னும் எண்ணுப்பொருள் கட்டுரையைச் சேர்ப்பது ஒரு சிறிதும் பொருத்தம் இல்லாதது. சிறீதரன் கனகு சொல்வது முற்றிலும் உண்மை. அடிப்படை அலகுகள் அனைத்துக்கும் தரமான கட்டுரைகள் இருக்க வேண்டும். நாம் அளக்கும் அத்தனையும் இவற்றின் அடிப்படையே ஆகவே, அதற்கான தரம், அதனை எப்படி உறுதி செய்கின்றார்கள், அதன் துல்லியம் முதலான கருத்துகளைச் செறிவாகவும் தெளிவாகவும் வைத்து எழுதப்பட்ட கட்டுரைகள் மிக முகனையானவை. --செல்வா (பேச்சு) 05:16, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]
நன்றி செல்வா, இணைக்கப்பட்ட இரு கட்டுரைகளை எவ்வாறு வரலாற்றுடன் தனித்தனியாக்குவது என்று தெரியவில்லை.--Kanags \உரையாடுக 05:22, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் தேடிய போது வரலாற்றுடன் ஒரு கட்டுரையைப் பிரிக்க முடியாது போன்றே தோன்றுகிறது. en:Wikipedia:Splitting.--Kanags \உரையாடுக 05:37, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]

\கிலோ (en:Kilo-, கிலோகிராம் (en:Kilogram) என்ற இரு கட்டுரைகளும் வெவ்வேறாக இருப்பதே சிறந்தது.\
என்ற கனகுவின் கூற்று சரியே. ஆனால், இங்கு கிலோ- en:Kilo- என்ற முன்னொட்டு சொல்லுக்குரிய கட்டுரை உருவாக்கப்படவில்லை. கிலோகிராம், கிலோ என்ற இரு பெயர்சொற்களும் ஒரே பொருளடையவை என்பதால், ஒருங்கிணைக்க முன்மொழிந்தேன். அக்கட்டுரைகளில், கிலோ - என்ற முன்னொட்டுக் கட்டுரைக்குத் தேவையானத் தகவல்கள் இருந்தன. எனவே, கிலோ- போன்ற, முன்னொட்டுகளுக்குரிய கட்டுரைகளை உருவாக்க எண்ணுகிறேன். இதுபோல உருபன் (morpheme) கட்டுரைகள் (காண்க:en:Category:SI prefixes) ஆ.வி. உள்ளன. அவைகள் மிக அடிப்படையானவை. -- உழவன் +உரை.. 12:11, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]
  • //கிலோகிராம், கிலோ என்ற இரு பெயர்சொற்களும் ஒரே பொருளடையவை என்பதால், ஒருங்கிணைக்க முன்மொழிந்தேன்.// - இம்முன்மொழிவு சரியானதன்று, நான் பார்க்கத் தவறியிருக்கின்றேன். பார்த்திருந்தால், வேண்டாம் என்று கூறியிருப்பேன். எண்ணுப்பொருளைப் பற்றிய முன்னொட்டு பற்றிய கட்டுரையின் குறிக்கோளும், பயன்பாடும், முக்கியமான சீர்தர பண்பலகு ஒன்றைப்பற்றிய, அது எவ்வாறு, எதன் அடிப்படையில் வரையறை செய்து எப்படிக் காக்கப்படுகின்றது என்பன பற்றிய கட்டுரையும் முற்றிலும் வேறான நோக்கங்கள் கொண்ட கட்டுரைகள். அந்த முன்மொழிவு ஏற்கத்தக்கதன்று. சூலை 20, 2012 அன்றுதான் ஒருங்கிணைக்க வேண்டுகோள் விடப்பட்டது, அது பற்றி சரிவர கருத்தாடும் முன்பு மாற்றப்பட்டுவிட்டது. துப்புரவு அறிவிப்பும் இடப்பட்டுள்ளது. சிலவற்றை விரைந்து செய்யலாம், ஆனால் சிலவற்றைச் சற்று பொறுமையாகவும் தேவை அறிந்தும் தக்கவாறும் செய்தல் வேண்டும் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 12:52, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]
    • இன்னும் ஒன்று. ஏன் TXiKiBoT என்னும் தானியங்கி சூலை 24, 2010 இல் இக்கட்டுரையின் பல பகுதிகளை நீக்கியது என்றோ, எவ்வாறு SieBot என்னும் தானியங்கி சூலை 30, 2010‎ இல் (ஆறுநாட்கள் கழித்து) பலவற்றை மீள்வித்தது என்றோ புரியவில்லை. இதே போல MerlIwBot என்னும் தானியங்கி 8 கி..பைட்டை நீக்கியிருக்கின்றது. இந்தத் தானியங்கிகளின் செயல்களை மேலும் கூடுதலாகக் கண்காணிக்க வேண்டும் எனத் தோன்றுகின்றது.--செல்வா (பேச்சு) 12:52, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]
செல்வா, அது தானியங்கிகளில் தவறில்லை. இரு கட்டுரைகளை இணைத்தன் பின்பு ஏற்பட்டுள்ள விளைவு.--Kanags \உரையாடுக 13:13, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]
த.உழவன், நீங்கள் கிலோ என்ற கட்டுரையில் இருந்த தகவல்களைப் பார்க்காமலேயே இணைக்க முடிவு செய்துள்ளீர்கள் போல் தெரிகிறது. கிலோ கட்டுரைப் பகுதி இங்கு உள்ளது. உமாபதி கட்டுரையைத் தொடங்கிய போது அதன் ஆங்கிலக் கட்டுரையும் Kilo ன்ற தலைப்பிலேயே இருந்துள்ளது. பின்னர் அதன் தலைப்பை Kilo- என மாற்றி விட்டார்கள். ஆனாலும் தலைப்பு கிலோ என்றிருப்பதே நல்லது என்பது என் கருத்து. ஆனாலும் இது ஒரு பாரிய பிரச்சினை அல்ல. இதனைப் பெரிது படுத்த வேண்டாம். எனது பிரச்சினை என்னவென்றால், இதனை எவ்வாறு வரலாற்றுடன் பிரிப்பது என்பது தான். கட்டுரைகளை இணைக்கும் போது தகுந்த உரையாடலின் பின்னர் குறைந்தது கட்டுரையாளர்களில் கருத்தைக் கேட்டு இணைப்பது நல்லது.--Kanags \உரையாடுக 13:13, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]
உருபன் கட்டுரைகளை, (காண்க:en:Category:SI prefixes) உருவாக்கலாமா? என்பதே எனது நோக்கம். ஆம். எனில், கிலோ- என்பதனை முதலில் உருவாக்க எண்ணுகிறேன்.வணக்கம்.-- உழவன் +உரை.. 15:18, 21 சூலை 2012 (UTC)[பதிலளி]
இல்லை, இக்கட்டுரைகளின் வரலாறு அழிந்திடாமல் இருக்க இதனை இரு வகைகளில் கையாளலாம். ஒன்று, புதிதாக கிலோ கட்டுரையை உருவாக்கி அதன் சுருக்கம் பகுதியில் கிலோகிராம் கட்டுரையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது என்ற குறிப்பையும் சேர்த்தல். அல்லது இக்கட்டுரையை கிலோ கட்டுரைக்கு வழிமாற்றி விட்டு செல்வாவைக் கொண்டு புதிதாக கிலோகிராம் கட்டுரையை எழுதிவிப்பது. எனக்கு இரண்டாவது முறையே சரியானதாகப் படுகிறது.--Kanags \உரையாடுக 02:09, 22 சூலை 2012 (UTC)[பதிலளி]
தகவலுழவன் இரு கட்டுரைகளுக்கான இணைப்பு வார்ப்புரு இட்டிருந்தார். எனக்கும் இரு கட்டுரைகளை இணைக்கும் முயற்சிகள் நீண்ட நாட்களாகச் செய்யப்படாமல், அதற்கான வழிமுறைகள் சற்று மறந்தும் போயிருந்ததால், அதை நினைவூட்டிக் கொள்ளும் வகையில், எதையும் கவனத்தில் கொள்ளாமல், இரு கட்டுரைகளையும் முழுமையாக விளங்கிக் கொள்ளாமல் அவசரத்தில் இணைப்பு செய்து விட்டேன். இத்தவறில் என்னுடைய பங்கு அதிகம்தான். வருந்துகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:30, 22 சூலை 2012 (UTC)[பதிலளி]
கனகு! உருபன் கட்டுரைகள் உருவாக்குதலை தள்ளிப்போடுகிறேன்.ஏனெனில், அவைகள் மிக முக்கியமானவை.இப்பொழுதே செய்தால், சிறு குழப்பம் வர வாய்ப்புண்டு. பொதுவாக கட்டுரைகளை தகவல் செறிவுகளாக உருவாக்காமல், சிறுசிறு பத்திகளாக அமைத்தால், படிப்பவரின் ஆர்வம் குறையாமல் இருக்கும்.தகவல்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற அறிவிப்பு குறுங்கட்டுரைகளுக்கு வேண்டாம் என்றே நான் கருதுகிறேன்.தேனியாரே! நீங்கள் கெண்டைக் கட்டுரைகளை ஒருங்கிணைத்தப்பின்பு, உங்களுடன் இணைகிறேன். ஒருங்கிணைப்பு வார்ப்புருவினை பயன்படுத்துதல் இதுவே முதல் முறை.அக்கெண்டைக்கு நான் இடவில்லை. இங்கு முதலில் இடம் மாறி இட்டேன். அதனால்தான் இருபதிவுகள். வருந்த வேண்டாம். நாம் இதனால், புதிய அணுக்க மேலாண்மை ஒன்றைக் கற்றோம். மீண்டும் சந்திப்போம்.வணக்கம்.-- உழவன் +உரை.. 05:09, 22 சூலை 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிலோகிராம்&oldid=2298963" இலிருந்து மீள்விக்கப்பட்டது