விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/துப்புரவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவைப்படும் முக்கிய கட்டுரைகள் பட்டியல் பெரிதாக, மொத்தமாக இருந்த வேளையை விட சிறுகச் சிறுக அண்மைய மாற்றங்களில் தூண்டல் இட்ட போது கவனம் செலுத்த முடிந்தது. அதைப் போலவே கூகுள் கட்டுரைகளும் கடந்த மூன்று ஆண்டுகளாக உரை திருத்தம் தேண்டித் தேங்கிப் போயுள்ளன. மொத்தம் 1200 கட்டுரைகள் இருப்பதும் அவரவர் ஆர்வத்துக்கு ஏற்ற கட்டுரைகளை இலகுவாக இனங்காண முடியாததும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே, இந்தப் பக்கத்தில் தற்போது முனைப்பாக உள்ள பயனர்களின் ஆர்வத்துக்கு ஏற்பவும் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தக்கூடிய முக்கியத்துவம் உள்ள கட்டுரைகளுக்கு முன்னுரிமை கொடுத்தும் 25, 25 கட்டுரைகளாகக் காட்சிப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். தொடர்புடைய விக்கித் திட்டங்கள், அண்மைய மாற்றங்கள், ஆர்வமுடைய பயனர் பேச்சுப் பக்கங்களில் கவனம் ஈர்ப்பதன் மூலம் இக்கட்டுரைகளைப் படிப்படியாக உரை திருத்தி முடித்திடலாம் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 21:22, 7 சூலை 2012 (UTC)[பதிலளி]

திருத்தம் செய்ய வேண்டிய கூகுள் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் காட்சிப்படுத்துவது நல்லதொரு திட்டம். ஆனாலும், கட்டுரைகள் திருத்தப்பட முன்னர் அவற்றின் காட்சிப் படுத்தலை நீக்கி புதிய கட்டுரைகளைத் தருவது சரியான முறையாகத் தெரியவில்லை. ஒரு கட்டுரை திருத்தி முடிந்தவுடன் அதன் கூகுள் வார்ப்புருவையும் நீக்கி காட்சிப்படுத்தலில் இருந்தும் நீக்கலாம். இதற்கு சிலவேளை இரு வாரங்களுக்கு மேல் தேவைப்படலாம்.--Kanags \உரையாடுக 08:43, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]

முதல் தொகுதியாக 5 கட்டுரைகளை இட்ட போது முதல் நாளே அனைத்துக் கட்டுரைகளிலும் திருத்தங்கள் வந்தன. ஆனால், அதற்கு அடுத்து திருத்தங்கள் குறைந்து விட்டன. அதே வேளை, ஆமை தொடர்பான பல்வேறு நல்ல புதிய கட்டுரைகளும் உருவாகியதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சில கட்டுரைகளே தொடர்ந்து பல வாரங்களாக அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் தேங்கி இருக்க வேண்டாமே என்று நினைத்தே அடுத்த தொகுதியாக 5 கட்டுரைகளை இட்டுள்ளேன். பயனர்களுக்குப் பல்வேறு துறைகளில் ஆர்வம் இருக்கலாம் என்பதால் சுழற்சி முறையில் இவற்றைக் காட்சிப்படுத்தலாம் என்று கருதுகிறேன். ஆனால், இங்கு இட்டுள்ள மொத்தம் 25 கட்டுரைகளையும் உரை திருத்தி வார்ப்புருவை நீக்கிய பிறகு மட்டுமே அடுத்த 25 கட்டுரைகளுக்குச் செல்லலாம் என்று எண்ணியுள்ளேன்--இரவி (பேச்சு) 09:30, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]

நன்றி இரவி. அண்மைய மாற்றங்கள் காட்சிப் படித்தலில் இந்தத் திட்டப் பக்கத்துக்கு இணைப்புக் கொடுப்பது நல்லது. தற்போது அது பகுப்புகளுக்கு நேரடியாகச் செல்கிறது.--Kanags \உரையாடுக 10:57, 15 சூலை 2012 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--இரவி (பேச்சு) 09:01, 16 சூலை 2012 (UTC)[பதிலளி]