விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
முதற்கட்ட உரையாடல்கள்
[தொகு]நோய்கள் பற்றி நாம் ஒரு அடிப்படைக் கட்டுரை (3-5 வசனங்கள்) எழுதக் கூடியவாறு ஒரு அட்டவணை தாயரித்து தந்தீங்கள் என்றால், அந்த அட்டவணையை கூடாக பூர்த்தி செய்து, தானிங்கி மூலம் (இதழ்கள் கட்டுரைகள் போன்று) கட்டுரைகளை உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் கருத்துக்களைப் இங்கே பகிருங்கள். --Natkeeran 22:59, 30 மே 2011 (UTC)
- இது அவசியமானது. பல நோய்கள் பற்றிய கட்டுரைகள் இருந்தால் அதைப்பற்றி தமிழில் தேடுவோருக்கு பயன்படும். ஆங்கிலத்தில் படித்து சொல்வதை விட தவி இணைப்பை குடுத்தால் அவர்களே படித்து புரிந்துகொள்வார்கள். தவியும் பலரை சென்றடையும். மூட்டு அறுவைச்சிகிச்சை, இடுப்பு மாற்றம், பல நரம்பியல் நோய்கள், நீரழிவு, இரத்தக்கொதிப்பு, இதய மாற்று அறுவை, கண் நோய்கள், தோல் நோய்கள்.... --குறும்பன் 23:32, 30 மே 2011 (UTC)
- ஆமா, இதற்கான ஒரு மாதிரிக் கட்டுரையையும், அட்டவணையையும் துறைசார்ந்தவர்கள் உருவாக்கித் தந்தால், எல்லோரும் சேர்ந்து அட்டவணையைப் பூர்த்தி செய்து கட்டுரைகளை உருவாக்கிக் கொள்ளலாம். --Natkeeran 04:53, 31 மே 2011 (UTC)
மாதிரிக் கட்டுரையை ஆக்கலாம். ஒருவேளை மருத்துவத் துறையில் உள்ளவர்கள் இதனை ஆக்கினால், முக்கியமான விடயங்களை உள்ளடக்கி எழுதுவது இலகுவாக இருக்ககூடும். அட்டவணையில், ஏற்கனவே த.வி யிலுள்ள நோய் தொடர்பான கட்டுரைகளை தவிர்க்க வேண்டுமா?--கலை 14:59, 31 மே 2011 (UTC)
- நல்ல முயற்சி, சற்று இன்னும் புரியும்படியாக விளக்கமுடியுமா?
- எவ்வாறு உருவாக்குவது, பின்னர் வேறு பயனர்கள் எப்படி அதனை உபயோகிப்பர் என்பவை பற்றி அறிய விரும்புகிறேன்.
- ஒரு நோய்க்கு "குறைந்த பட்சம்" பின்வரும் பகுதிகள் தேவைப்படுகின்றது:
- அறிமுகம்
- நோய்க்காரணி
- நோயின் வகைகள்
- நோய் உணர்/அறிகுறிகள்
- அறுதியிடல்
- பரிகாரம் (சிகிச்சை)
இவற்றுடன் தகவல் பெட்டி, படங்கள், உசாத்துணைகள் என்பன தேவையானவை. இவற்றை உள்ளடக்கி தகவல் அட்டவணை உருவாக்குவதா இல்லை வேறேதேனும் முறை உண்டா? மேலும், இதைப் பயன்படுத்திக் குறுங்கட்டுரைகள் உருவாக்கப்படுதல் நன்றன்று, குறைந்தது 5000 பைட்டுக்களாவது இருத்தல்வேண்டும் அல்லவா?--செந்தி//உரையாடுக// 17:17, 31 மே 2011 (UTC)
- 5 மாதிரிக் கட்டுரைகளைச் சுட்டினால், என்ன வகையான தகவல் கூறுகள் பொதுப்படையாக தேவை என்று அலசமுடியும். --Natkeeran 18:05, 31 மே 2011 (UTC)
- மாதிரிக்கட்டுரைகள்
- 5 மாதிரிக் கட்டுரைகளைச் சுட்டினால், என்ன வகையான தகவல் கூறுகள் பொதுப்படையாக தேவை என்று அலசமுடியும். --Natkeeran 18:05, 31 மே 2011 (UTC)
- இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்
- வயிற்றுப் புண்
- பெரிபெரி
- டெங்கு காய்ச்சல்
- பெருந்தமனி அடைப்பிதழ்க் குறுக்கம்
- காச நோய்
இங்குள்ள மருத்துவ கட்டுரைகள் பெரும்பான்மையானவை குறுங்கட்டுரைகளாகவோ அல்லது மருத்துவத் தகவல் நடைமுறைக்கேற்றவாறு எழுதப்படாததாகவோ உள்ளன,அதனால் இந்நடை காணப்படுவதில்லை, எனினும் நான் மேற்குறிப்பிட்ட நடை பேணப்பட்டு இருப்பதைச் சிலவற்றில் (எ.கா: கூகிள் மொ.பெ கட்டுரைகள்) காணலாம், மேலும் இந்நடை நோய்களைப் பொறுத்தவரையில் மாறுபடும் என்பதும் கவனிக்கவேண்டியது.(நோயின் வகைகள் சேர்க்கப்பட்டுள்ளது)--செந்தி//உரையாடுக// 19:01, 31 மே 2011 (UTC)
- ஒரு குறுங்கட்டுரையைத் தொடங்குவதே எனது எண்ணமாக இருக்கிறது. குறுங்கட்டுரையையும், தகுந்த வார்ப்புருவையும் இட்டால், துறை சார்ந்தவர்கள் அவற்றைத் தகுந்தவாறு விரிவாக்கலாம் என்று நினைக்கிறேன்.
- நோயின் தமிழ்ப் பெயர்; நோயின் ஆங்கிலப் பெயர் அல்லது அறிவியல் பெயர்; நோய் பற்றிய விளக்கம் (எ.கா xx நோய் yy உடற்பாகத்தைப் பாதிக்கிறது); இது ஒரு zz வகை நோய் ஆகும்; நோயின் தீங்குத்தன்மை (எ.கா இந்த நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம்!!) போன்ற விபரங்களை இதில் சேர்க்கலாம். மேலதிகமாக நோயின் அறிகுறிகள், நோய் பாதிக்கும் மக்கள்தொகையினர் (demographics) போன்ற விபரங்களையும் சேர்க்கலாம். இந்த விபரங்களை கூகிள் அட்டவணை ஒன்றில் சேர்த்து பதிவேற்றலாம். உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். --Natkeeran 22:45, 31 மே 2011 (UTC)
- ஒரு மாதிரி அட்டவணை உருவாக்க முடியுமா? பின்னர் கூகிளில் பகிர்ந்தால் அதனை யாவரும் பொதுவாக தொகுக்கலாம்.--செந்தி//உரையாடுக// 18:23, 8 சூன் 2011 (UTC)
- நல்லது, நற்கீரன். நோய்த் தகவற்பெட்டி (infobox disease) வார்ப்புருவை இதனுள் புகுத்த ஏதேனும் வழி உண்டா?
இவ்வாறு செய்தவற்றை AWB மூலம் பதிவேற்றலாமா?அட்டவணை ஒன்று இங்கு உருவாக்க உள்ளேன், தொடுப்பு--செந்தி//உரையாடுக// 20:50, 11 சூன் 2011 (UTC)
- நல்லது, நற்கீரன். நோய்த் தகவற்பெட்டி (infobox disease) வார்ப்புருவை இதனுள் புகுத்த ஏதேனும் வழி உண்டா?
மாதிரி அட்டவணை
[தொகு]- நோயின் பெயர்
- நோயின் ஆங்கிலப் பெயர்/அறிவியல் பெயர்
- நோய் பற்றிய விளக்கம் - மேற்கோள் 1
- நோய் வகை
- நோயின் தீங்குத்தன்மை - மேற்கோள் 2
- நோய்க் காரணங்கள் - மேற்கோள் 3
- நோயின் அறிகுறிகள்
- அறுதியிடல்
- நோய்க்கான சிகிச்சை - மேற்கோள் 4
- நோய் பாதிக்கும் மக்கள் வகைப்பாடு
- மேற்கோள் 1
- மேற்கோள் 2
- மேற்கோள் 3
- மேற்கோள் 4
எ.கா 1
[தொகு]- இதயச் செயலிழப்பு
- Heart failure
- உடலுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை இதயத்தால் வழங்கமுடியாமல் போதல்
- இதய நோய் ??
- மூச்சுக் குறைவு, உடற்பயிற்சி செய்யமுடியாமை, கால் வீக்கம்
- myocardial infarction and other forms of ischemic heart disease, hypertension, valvular heart disease, and cardiomyopathy
- இரத்தப் பரிசோதனை, echocardiography
- உடலைச் செயலிழக்க வைக்கும் உயிருக்கு ஆபத்தாகாவும் அமையக் கூடும்
- வாழ்கைமுறை மாற்றங்கள், மருந்துகள், சிகிச்சை
- 65 வயதுக்கு மேற்பட்டவர்களை
மாதிரிக் கட்டுரை
[தொகு]இதயச் செயலிழப்பு (Heart failure) என்பது உடலுக்குத் தேவையான இரத்தை ஓட்டத்தை இதயத்தால் வழங்கமுடியாமல் போதல் ஆகும். இது ஒரு வகை இதய நோய் ஆகும். மூச்சுக் குறைவு, உடற்பயிற்சி செய்யமுடியாமை, கால் வீக்கம் போன்றவை இதயச் செயலிழப்பின் சில அறிகுறிகள் ஆகும். இது உடலைச் செயலிழக்க வைக்கும், உயிருக்கு ஆபத்தாகவும் அமையக் கூடும்.
இதயச் செயலிழப்புக்கு myocardial infarction and other forms of ischemic heart disease, hypertension, valvular heart disease, and cardiomyopathy ஆகியவை சில முக்கிய காரணங்களாக அமைகின்றன. இந்த நோயை இரத்தப் பரிசோதனை, echocardiography வழிகள் மூலம் அறுதியிடலாம். வாழ்கைமுறை மாற்றங்கள், மருந்துகள், அறுவைச் சிகிச்சை போன்ற வழிகளில் இதற்கு சிகிச்சை செய்யலாம். இந்த நோய் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை பெரிதும் தாக்குகிறது.