ஆய்த எழுத்து (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆய்த எழுத்து
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புமணிரத்னம்
G. சிறீநிவாசன்
கதைமணிரத்னம்
சுஜாதா
இசைஏ. ஆர். ரஹ்மான்
நடிப்புத்ரிஷா
மீரா ஜாஸ்மின்
சூர்யா
சித்தார்த்
மாதவன்
ஈஷா தியோல்
பாரதிராஜா
ஒளிப்பதிவுரவி கே. சந்திரன்
விநியோகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடுவைகாசி 21, 2004
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆய்த எழுத்து இத்திரைப்படம் 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழிலும் ஹிந்தியில் யுவா எனவும் வெவ்வேறு நடிகர்களைக் கொண்டு ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மூன்று இளைஞர்கள் பாலமொன்றில் சந்தித்துக் கொள்கின்றனர். அவர்களில் இன்பசேகர் (மாதவன்) ஓர் அடிதடிகுணம் கொண்டவன். அவன் மைக்கேலை (சூர்யா) அப்பாலத்தில் சுட்டு வீழ்த்துகின்றான். இச்சம்பவத்தை நேரில் பார்க்கிறான் அர்ஜூன் (சித்தார்த்). இதனை அனைவருக்கும் தெரிவுபடுத்துகின்றான். இச்சம்பவத்தின் பின் மைக்கேல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றான். பின்னர் மூவரும் எவ்வாறு இச்சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதனை அவர்களின் வாழ்க்கைக் கதைகளை திரைப்படம் விளக்குகின்றது. கல்லூரி மாணவனான மைக்கேல் அரசியலில் நடக்கும் அநீதிகளை மக்களுக்கு விளக்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றான். இதனையறிந்த அரசியல்வாதிகள் அவனைக் கொல்வதற்காக இன்பசேகரைப் பயன்படுத்துகின்றனர். இன்பசேகர் கூலிக்காக கொலை கொள்ளை போன்ற பல தீய செயல்களில் ஈடுபட்டு வருபவன். இருப்பினும் அவன் தன் மனைவி சசி (மீரா ஜாஸ்மின்) மீது அளவு கடந்த அன்பைக் கொண்டிருந்தான். கீதாவைக் காதலிக்கும் மைக்கேல் அவளைத் திருமணம் செய்வதற்காக ஆயத்தமான வேளையில் இன்பசேகரின் துப்பாக்கி குண்டுகளில் காயப்பட்டு பாலத்திற்கு அருகில் இருந்த நதியில் வீழ்கின்றான். இதனை அமெரிக்காவிற்குச் சென்று கல்வி பயில இருந்த மாணவனான சித்தார்த் தனது காதலியான மீராவைச் (திரிஷா) சந்திப்பதற்காக அவசரமாக மைக்கேலின் மோட்டார் வண்டியில் சென்ற போது மைக்கேல் சுட்டு வீழ்த்தப்படுவதைப் பார்த்தான்.

மேற்கோள்கள்[தொகு]