ரவி கே. சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரவி கே. சந்திரன்
Ravi K Chandran.jpg
பிறப்புமதுராந்தகம், தமிழ்நாடு,  இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1992— தற்போது வரை
பட்டம்ISC
வலைத்தளம்
http://www.ravikchandran.com

ரவி கே. சந்திரன் ஓர் இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளரும், திரைப்பட இயக்குனரும் ஆவார்.[1] இவர், பிரியதர்சன், மணிரத்னம், ராஜீவ் மேனன், சஞ்சய் லீலா பன்சாலி, ஏ. ஆர். முருகதாஸ் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள் பலருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். சிறந்த ஒளிப்பதிவுக்காக, இரண்டு முறை பிலிம்பேர் விருதையும், ஒருமுறை தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார். ஜீவா, துளசி நாயர் நடித்த யான் திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ரவி கே. சந்திரன், தமிழ்த் திரைப்படத்துறையின் குறிப்பிடத்தக்க ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ராமச்சந்திர பாபுவின் இளைய சகோதரர் ஆவார்.[2] ஹேமலதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது தனது இரு மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார்.

திரை வாழ்க்கை[தொகு]

திரைப்பட விபரம்[தொகு]

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

திரைப்படம் ஆண்டு மொழி குறிப்புகள்
யான் 2014 தமிழ் ஜீவா, துளசி நாயர் நடித்த திரைப்படம்

ஒளிப்பதிவு செய்தவை[தொகு]

தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

திரைப்படம் ஆண்டு இயக்குநர் குறிப்புகள்
ஆனஸ்ட் ராஜ் 1994 கே. எசு. ரவி
மின்சார கனவு 1997 ராஜிவ் மேனன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 2000 ராஜிவ் மேனன்
சிட்டிசன் 2000 சரவண சுப்பையா
கன்னத்தில் முத்தமிட்டால் 2002 மணிரத்னம் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருது
சிறந்த ஒளிப்பதிவாளருக்கான பன்னாட்டுத் தமிழ்த் திரைப்பட விருது
பாய்ஸ் 2003 சங்கர்
ஆய்த எழுத்து 2004 மணிரத்னம்
ஏழாம் அறிவு 2011 ஏ. ஆர். முருகதாஸ்

பெற்ற விருதுகள்[தொகு]

பிலிம்பேர் விருதுகள்[தொகு]

பெற்ற விருது ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
சிறந்த ஒளிப்பதிவாளர் 1998 விராசாத் இந்தி
சிறந்த தென்னிந்திய ஒளிப்பதிவாளர் 2002 கன்னத்தில் முத்தமிட்டால் தமிழ்
சிறந்த ஒளிப்பதிவாளர் 2006 பிளாக் இந்தி

இதர விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவி_கே._சந்திரன்&oldid=3226540" இருந்து மீள்விக்கப்பட்டது