பசிபிக் தீவுகளின் ஒன்றியம்
|
பசிபிக் தீவுகளின் ஒன்றியம்
Pacific Islands Forum (PIF) |
||||
|---|---|---|---|---|
|
|
||||
| செயலகம் | சுவா, பிஜி |
|||
| அதிகாரபூர்வ மொழி(கள்) |
16
|
|||
| உறுப்பு நாடுகள் |
16
|
|||
| தலைவர்(கள்) | ||||
| - | பொதுச் செயலர் | துயிலோமா நெரோனி சிலேட் |
||
| நிறுவல் | ||||
| - | தெற்கு பசிபிக் ஒன்றியமாக | 1971 | ||
| - | பசிபிக் தீவுகளின் ஒன்றியமாக | 2000 | ||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 85,38,293 கிமீ² 32,96,653 ச. மை |
||
| மக்கள்தொகை | ||||
| - | 2008 மதிப்பீடு | 34.1 மில்லியன் | ||
| - | அடர்த்தி | 129/கிமீ² 334.1/ச. மை |
||
| மொ.உ.உ (கொ.ச.வே) | 2008 மதிப்பீடு | |||
| - | மொத்தம் | US$ 858.9 பில்லியன்¹ (2008) | ||
| - | தலா/ஆள்வீதம் | US$ 2,954 | ||
| HDI (2007/08) | ||||
| நாணயம் |
12
|
|||
| நேர வலயம் |
11
|
|||
| Website www.forumsec.org |
||||
| 1 | If considered a single entity | |||
பசிபிக் தீவுகளின் ஒன்றியம் அல்லது பசிபிக் தீவுகளின் பொது மன்றம் (Pacific Islands Forum) என்பது பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் இறைமையுள்ள நாடுகளுக்கிடையேயான கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அந்நாடுகளின் அரச மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஒன்றியம் ஆகும். இவ்வமைப்பு 1971 ஆண்டில் தென் பசிபிக் ஒன்றியம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இது பின்னர் வடக்கு மற்றும் தெற்கு பசிபிக் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அடங்கிய பரந்த ஓசியானியா நாடுகளை உள்ளடக்குவதற்காக பசிபிக் தீவுகளின் ஒன்றியம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
இவ்வமைப்பின் உறுப்பு நாட்டுகளாவன: ஆஸ்திரேலியா, குக் தீவுகள், மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், பிஜி, கிரிபட்டி, மார்ஷல் தீவுகள், நவூரு, நியூசிலாந்து, நியுவே, பலாவு, பப்புவா நியூ கினி, சமோவா, சொலமன் தீவுகள், தொங்கா, துவாலு, வனுவாட்டு ஆகியன. 2006 ஆம் ஆண்டில் இருந்து, நியூ கலிடோனியா, மற்றும் பிரெஞ்சு பொலினீசியா ஆகியன துணை உறுப்பு ஆட்சிப்பகுதிகளாக இவ்வொன்றியத்தில் இணைக்கப்பட்டன[1].
2009 ஆம் ஆண்டில் பிஜியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அந்நாடு காலவரையறையின்றி இவ்வொன்றியத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளது[2].
[தொகு] உறுப்பு நாடுகள்
| உறுப்பு நாடுகள் | |||
|---|---|---|---|
| துணை உறுப்பு நாடுகள் | அவதானிகள் | ||
| பொதுநலவாய செயலகம் | |||
| உரையாடல்களில் பங்குபற்றும் நாடுகள் | |||