தா. கு. சுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தா. கு. சுப்பிரமணியன், சிறந்த நூலாசிரியருக்கான பிரிவில், 2013-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, 28 பிப்ரவரி 2019 அன்று தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.[1][2] இவர் மதுரைக் கல்லூரியில் தமிழ்த் துறை பேரராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நடனகோபாலநாயகி சுவாமிகள் இயற்றிய சௌராட்டிர மொழி கீர்த்தனங்கள் குறித்து ஆய்வு செய்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் பட்டிமன்ற பேச்சாளரும் ஆவார். இவர் 2019 ஏப்ரல் 20 ஆம் நாள் இரவு காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 2011 - 2018 கலைமாமணி விருதுகள் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
  2. 2011 - 2018 ஆண்டு முடிய 201 கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு கலைமாமணி விருதுகள்
  3. "காலமானார்: பட்டிமன்ற பேச்சாளர் தா.கு. சுப்பிரமணியன்". தினமணி. 21 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._கு._சுப்பிரமணியன்&oldid=3497449" இலிருந்து மீள்விக்கப்பட்டது