சந்தியாவந்தனம் (இந்து சமயம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தியாவந்தனம் செய்யும் வேத பாடசாலை மாணவர்கள், நாச்சியார்கோயில், கும்பகோணம், தமிழ்நாடு

சந்தியாவந்தனம் (Sandhyavandanam) , ஒரு நாளைக்கு மூன்று வேளைகளில் சூரியனை பகவானை நினைத்து காயத்திரி மந்திரத்தை ஜெபம் செய்வதாகும்.[1] முதல் சந்தியாவந்தனம் இரவும் பகலும் சந்திக்கும் விடியற்காலைப் பொழுதில் சூரியோதயத்துக்கு முன் (காலை மணி 5.00 முதல் 5.45 வரை) பிராத சந்தியாவந்தனம் செய்யப்படும். இரண்டாவதாக சூரியன் உச்சி வானில் இருக்கும் பொழுதில் மாத்யானிக சந்தியாவந்தனம் (மதியம் 12.00 முதல் 12.30 வரை) செய்யப்படும். மூன்றாவதாக பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் சூரியன் அஸ்தமிக்கும் முன்பு பொழுது புலரும் (மாலை 5.00 மணி முதல் 6.00 மணிக்குள்) காலத்தில் சாயம் சந்தியாவந்தனம் செய்யப்படும். சந்தியாவந்தனத்தை உபநயனம் ஆன அனைவரும் அன்றாடம் செய்ய வேண்டிய செயல் ஆகும். சந்தியாவந்தனம் என்பது உடல் மற்றும் ஆன்மா ஆகிய இரண்டுக்கும் ஆரோக்கியத்தை தரக்கூடிய செயலாகும். நாம் செய்யும் சந்தியாவந்தனம் அர்க்யம், ஜபம் வலிமையில் தான் சூரியனின் தேர் தங்கு தடையின்றி ஓட வேண்டும் என்ற நம்பிக்கையாகும்.[2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dvija, Encyclopedia Britannica (2014)
  2. Manilal Bose (1998). Social and Cultural History of Ancient India. Concept. பக். 55–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7022-598-0. https://books.google.com/books?id=t_PpdZosif4C. 

வெளி இணைப்புகள்[தொகு]