இலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இராயப்புதுப்பாக்கம் அரசனேஸ்வரர் சிவலிங்கம்
சோம்நாத்திலுள்ள ஜோதிர்லிங்கம்

இலிங்கம், லிங்கம் (lingam), அல்லது சிவலிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர். இவற்றுள் சிவலிங்கம் அல்லது லிங்கம் அருவுருவ நிலையாகும். இதன் மூலம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்தியாவில் லிங்க வழிபாடு மிகவும் பழமையானது. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இவ் வழிபாடு நிலவியிருக்கக்கூடும் எனக் கொள்ளத்தக்க சான்றுகள் கிடைத்துள்ளன.

பொருளடக்கம்

[தொகு] முன்னோர்களின் நினைவாக நடுகல்

பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் பல பகுதிகளில் சைவர்களின் நடுகல் கற்கள் காணப்படுகின்றன. சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

சிவலிங்கம்

[தொகு] ஆண்குறி

சில இடங்களில் லிங்கம் ஆண்குறியின் வடிவிலேயே காணப்படுகிறது. கூடலின் போது பெண் ஆண் குறிகளின் நிலையையே ஆவுடை லிங்கம் என்று வழங்கப்படுகிறது. சில இடங்களில் லிங்கம் அன்றி, ஆவுடையார் மட்டுமே லிங்கமாக கருதப்படுகிறது.

[தொகு] சொற்பொருள்

900 - 1000 ஆவது ஆண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த நேபாளத்து லிங்கம். சான் பிரான்சிஸ்கோவிலுள்ள ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் உள்ளது.

லிங்கம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும். லிங்க வடிவம், ஆண்குறியைக் குறிப்பதாகவும், வளம் என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங்காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. எனினும் சமஸ்கிருதத்தில் இதற்குப் பல பொருள்கள் உள்ளதாகத் தெரிகிறது. வாமன் சிவ்ராம் ஆப்தேயின் சமஸ்கிருத அகராதி 7 பொருள்களை இச் சொல்லுக்குக் கொடுத்துள்ளது. இவற்றுள், லிங்கம் பல வகைப்படும். முகலிங்கம், சகஸ்ர லிங்கம், தாராலிங்கம், சுயம்பு லிங்கம் மேலகடம்பூர் என்ற ஊரில் அமிர்ததுளீ விழ்ந்து சுயம்பு லிங்கமானது

  • இறைவனின் வடிவம்
  • நோய்க்கான அறிகுறி
  • ஒரு புள்ளி அல்லது மறு
  • சான்று அல்லது சான்றுக்கான வழிமுறை
  • விளைவு அல்லது முதற் காரணத்தில் இருந்து உருவாகும் ஒன்று.
  • பால் குறிக்கும் இலக்கணக் கருத்துரு.
  • ஆண்குறி

என்பனவும் அடங்கும்.

[தொகு] பெரிய கோவில்

மிகப்பெரிய லிங்கம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலிங்கம்&oldid=1004916" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்