திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருவிழா அல்லது உற்சவம் என்பது, ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவது. திருவிழா அல்லது ஊர்வலம் அல்லது வலம் என்பதே சரியான தமிழ் பதமாகும். உற்சவம் என்பது பிற மொழி சொல்லாகும்.

Commons logo
தமிழ் விக்சனரி யிலுள்ள விளக்கத்தையும் காண்க!

பொருளடக்கம்

இந்து மதத் திருவிழாக்கள் [தொகு]

தேர்த் திருவிழா [தொகு]

பழனி மலை

பழனி முருகன் கோயில் மற்றும் பல முக்கியமான திருக்கோயில்களில் தேர்த் திருவிழா மிக முக்கியமாக கொண்டாடப்படுகிறது. தேர்த் திருவிழாவின் போது, உற்சவர் தேரில் திருக்கோயிலை சுற்றி பவனி வருவார்.[1]

தைப் பூசத் திருவிழா [தொகு]

தை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற முக்கியமான திருவிழா, தைப் பூசத் திருவிழா ஆகும். முருகன் கோவில்களில் இத்திருவிழா மிகவும் பிரசித்தியானது.[2]

சித்திரைத் திருவிழா [தொகு]

முதன்மைக் கட்டுரை: சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இது தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.

கா‌ர்‌த்‌திகை ‌தீப‌த் ‌திரு‌விழா [தொகு]

கா‌ர்‌த்‌திகை ‌தீப‌த் ‌திரு‌விழா ஆ‌ண்டு தோறு‌ம் 10 நா‌ட்க‌ள் வெகு ‌‌சிற‌ப்பாக நடைபெறுவது வழ‌க்க‌ம். இத்திருவிழா,திருவ‌ண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்றது. கா‌ர்‌த்‌திகை‌த் ‌தீப‌த் ‌திரு‌விழா அ‌ன்று மாலை, திருவ‌ண்ணாமலை‌யி‌ல் அக‌ண்ட கா‌ர்‌த்‌திகை ‌தீப‌ம் ஏ‌ற்ற‌ப்படு‌ம்.

கிறித்துவ மதத் திருவிழாக்கள் [தொகு]

தேவாலயத் திருவிழா [தொகு]

கிறித்துமசு கொண்டாட்டம் உள்ளிட்ட மிக முக்கிய தினங்களில், தேவாலயத் திருவிழாக்கள் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல புனித ஆலயங்களில் திருவிழா ஊர்வலமும் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டமும் நடைபெறும்.

தேவாலயத் திருவிழா ஊர்வலம்

படங்கள் [தொகு]

மேலும் பார்க்க [தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும் [தொகு]

  1. "ஸ்ரீ கல்யாணமுருகர் தேர்த் திருவிழா காணொளி". பார்த்த நாள் அக்டோபர் 17, 2012.
  2. "பத்து மலை தைபூசத் திருவிழா". http://www.tamilhindu.net/t1341-topic. Retrieved அக்டோபர் 17, 2012. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=திருவிழா&oldid=1368548" இருந்து மீள்விக்கப்பட்டது