தெப்பக்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில்
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை

இந்து சமயக் கோயில்களின் உள்ளேயோ அல்லது வெளியிலோ தெப்பக்குளம் அமைக்கப்படுகிறது. தெப்பக் குளங்கள் பொதுவாக சதுர வடிவில்தான் அமைக்கப்படுகின்றன. தெப்பக்குளங்கள் இந்து சமய விழாக்களுடன் தொடர்புடையதாய் இருக்கிறது.

தெப்பக்குளம் அமைப்பு[தொகு]

தெப்பங்குளங்கள் பொதுவாக சதுர வடிவிலான அமைப்பில்தான் அமைக்கப்பட்டுள்ளன. சில கோயில்களில் அறுகோண அமைப்பிலும், ஸ்வஸ்திகா அமைப்பிலும் கூட தெப்பக்குளம் அமைக்கப்பட்டிருக்கின்றன. திருமெய்யம் சத்தியகிரீசுவரர் கோயில் மற்றும் சத்தியகிரிநாதப் பெருமாள் கோயில்களில் அறுகோண அமைப்பிலான தெப்பக்குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மிகப்பெரிய தெப்பக்குளம்[தொகு]

மதுரையிலுள்ள மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் தென்னிந்தியக் கோயில் தெப்பக்குளங்களிலேயே மிகப்பெரியது. இதை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என்கின்றனர். மதுரை மன்னராக இருந்த திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இந்த தெப்பக்குளம் 304. 8 மீட்டர் நீள அகலம் கொண்டது. தெப்பக்குளத்தின் நான்குபுறமும் சுமார் 15 அடி உயரத்துக்கு கல்லினால் சுவர் கட்டப்பட்டிருக்கிறது. இத நடுவில் நீராழி மண்டபம் ஒன்றும் உள்ளது. இங்கு நடைபெறும் தெப்பத் திருவிழா சிறப்புடையது.

தெப்பக்குளப் படத் தொகுப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தெப்பக்குளம்&oldid=1695431" இருந்து மீள்விக்கப்பட்டது