கலப்பினம்
கலப்பினம் என்பது ஒரே இனத்தைச் சேர்ந்த இருவேறுபட்ட பேதங்கள் குலவகையைச் சேர்ந்த அங்கிகளை ஒன்றாக இணைத்து அதன் மூலம் பெறும் புதிய பேதம் அல்லது குலவகை ஆகும். இந்த கலப்பினம் மூலமாக புதிய வகை வீரிய இனங்களை உருவாக்க முடியும். நெல், சோளம், கம்பு, கோதுமை எனப் புதுவகை வீரிய ஒட்டு ரகங்களைக் கலப்பின வகையாகப் பெற முடியும்.அறிவியலறிஞர்கள் பயிர்வகைகள், கனிவகைகள் மட்டுமல்லாது விலங்கினங்களிலும் கலப்பின வகைகள் பலவற்றை உருவாக்குகின்றனர். இதே போன்று பசு வகைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. சாதாரணமானவைகளை விட கலப்பினங்கள் வீரியமுடையவையாகவும் அதிகப் பலன் தரக்கூடியவைகளாகவும் அமைகின்றன. உருவில் பருமனும் திடத்தில் வலிமையும் கொண்டவையாக உள்ளன.
எ.கா:
பசுக்களில் ஐரோப்பிய இனமான பிறிசியன் உள்ளூர் இனங்களுடன் இனங்கலக்கப்படும். இதன்மூலம் வெப்பவலயத்தை சகித்து வாழக்கூடியதான அதிக பாலுற்பத்தியைத் தருவதுமான கலப்பினம் பெறப்படுகிறது.
இலங்கையில், பன்னிற சித்திரவடிவ நோயைத் தாக்குப்பிடிக்கக் கூடிய இந்திய வெண்டி இனமான 'கரித்த' உள்ளூர் பால்வெண்டியுடன் கலக்கப்பட்டது.
ஒரே இனத்தைச் சேர்ந்தவைகளைக் கொண்டே கலப்பினம் உருவாக்க முடியும். வேறுபட்ட இனங்களை இணைத்துக் கலப்பினம் உருவாக்குவது இயலாத ஒன்றாகும்.