ஒற்றைநிறைவுறாக் கொழுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒற்றைநிறைவுறா கொழுப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உணவிலுள்ள கொழுப்பு வகைகள்
இவற்றையும் காண்க

ஒற்றைநிறைவுறா கொழுப்பு (monounsaturated fat) அல்லது ஒற்றைநிறைவுறா கொழுப்பு அமிலம் (MUFA; MonoUnsaturated Fatty Acid) என்பவை கொழுப்பு அமிலத் தொடரியில் ஒரேயொரு இரட்டைப் பிணைப்பினையும், மீதமுள்ள அனைத்து கார்பன் அணுக்களிலும் ஒற்றைப்பிணைப்பினையும் கொண்டிருக்கும் கொழுப்பு அமிலமாகும். ஆனால், பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டைப் பிணைப்புகளைக் கொண்ட கொழுப்பு அமிலங்களாகும்.

கொழுப்பு அமிலங்கள் ஒரு முனையில் ஆல்க்கைல் தொகுதியும், மறு நுனியில் கார்பாக்சிலிக் அமிலத் தொகுதியினையும் கொண்ட நீள்தொடரி மூலக்கூறுகளாகும். இரட்டைப் பிணைப்புகளின் எண்ணிக்கை குறையக்குறைய கொழுப்பு அமிலங்களின் கூழ்மத்தன்மை (பாகுநிலை), கனபரிமாணம் (தடிமன்), உருகுநிலை ஆகியவை அதிகரிக்கும். எனவே, ஒற்றைநிறைவுறா கொழுப்பு அமிலங்கள், பல்நிறைவுறா கொழுப்பு அமிலங்களைக் காட்டிலும் (அதிக இரட்டைப் பிணைப்புகளைக் கொண்டவை) அதிகமான உருகுநிலையையும், நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களைக் காட்டிலும் (இரட்டைப் பிணைப்புகள் இல்லாதவை) குறைந்த உருகுநிலையையும் கொண்டவையாகும். ஒற்றைநிறைவுறா கொழுப்பு அமிலங்கள் அறைவெப்பநிலையில் திரவமாகவும், உறைபதனேற்றிய நிலையில் திண்மமாகவோ அல்லது அரைத் திண்மநிலையிலோ இருக்கும். ஒலெயிக் அமிலம் (18:1 n−9) ஒற்றைநிறைவுறா கொழுப்பு அமிலத்திற்கு ஒரு உதாரணமாகும்.

ஒலெயிக் அமிலத்தின் அடிப்படை வாய்ப்பாடு

(ஒலெயிக் அமிலத்தின் அடிப்படை வாய்ப்பாடு)

ஒலெயிக் அமிலத்தின் வெளிநிரப்பு கட்டமைப்பு

(ஒலெயிக் அமிலத்தின் வெளிநிரப்பு கட்டமைப்பு)

பல்வேறு உணவுகளில் கொழுப்பு பொதிவுகள்[தொகு]

உணவு நிறைவுற்ற கொழுப்பு ஒற்றைநிறைவுறா கொழுப்பு பல்நிறைவுறா கொழுப்பு
மொத்தக் கொழுப்பில் எடை சதவிகிதம் (%)
சமையல் எண்ணெய்கள்
காட்டுக்கடுகு எண்ணெய் 7 59 29
சோள எண்ணெய் 13 24 59
ஆலிவ் எண்ணெய் 13 74 8
சூரியகாந்தி எண்ணெய் 10.3[1] 19.5[1] 65.7[1]
சோயா அவரை எண்ணெய் 15 24 58
தேங்காய் எண்ணெய் 92 6 2
பால் பொருட்கள்
வழக்கமான பாலாடைக்கட்டி 64 29 3
இலகுவான பாலாடைக்கட்டி 60 30 0
முழுமையான பால் 62 28 4
பால், 2% 62 30 0
உயர்தர பனிகுழைமம் (ஐஸ்கிரீம்) 62 29 4
இலகுவான பனிகுழைமம் (ஐஸ்கிரீம்) 62 29 4
இறைச்சிகள்
மாட்டிறைச்சி 33 38 5
மாட்டின் இடுப்பு மேற்பகுதி இறைச்சி (அரைக்கப்பட்டது) 38 44 4
பன்றி இறைச்சி 35 44 8
பன்றித் தொடைக்கறி 35 49 16
கோழி மார்பு 29 34 21
கோழி 34 23 30
வான்கோழி மார்பு 30 20 30
வான்கோழி தொடைக்கறி 32 22 30
மீன் 23 15 46
சால்மான் மீன் 28 33 28
மாட்டிறைச்சி துரித உணவு (ஹாட் டாக்) 42 48 5
வான்கோழி துரித உணவு (ஹாட் டாக்) 28 40 22
பர்கர் (துரித உணவு) 36 44 6
பாற்கட்டிபர்கர் (துரித உணவு) 43 40 7
கோழி கறியுடன் இடையீட்டு ரொட்டி 20 39 32
தீயில்வாட்டப்பட்ட கோழி கறியுடன் இடையீட்டு ரொட்டி 26 42 20
போலந்து தொத்திறைச்சி 37 46 11
வான்கோழி தொத்திறைச்சி 28 40 22
தொத்திறைச்சி பீத்சா 41 32 20
பாற்கட்டி பீத்சா 60 28 5
கொட்டைகள்
வறுத்த வாதுமை (பாதாம் பருப்பு) 9 65 21
வறுத்த முந்திரி 20 59 17
வறுத்த மகடாமியா 15 79 2
வறுத்த வேர்க்கடலை (கச்சான்) 14 50 31
வறுத்த பேக்கான் 8 62 25
ஆளிவிதை (அரைக்கப்பட்டது) 8 23 65
எள் 14 38 44
சோயா அவரை 14 22 57
சூரியகாந்திவிதை 11 19 66
வறுத்த அக்ரூட் பருப்பு 9 23 63
இனிப்புகள் மற்றும் சுட்ட பொருள்கள்
சாக்லெட் மிட்டாய் 59 33 3
பழ சவச்சி மிட்டாய் 14 44 38
ஓற்சுமா (காடைக்கண்ணிக் கூழ்) உலர் திராட்சை பணியாரம் 22 47 27
சாக்லெட் பணியாரம் 35 42 18
மஞ்சள் நிற இனியப்பம் (கேக்கு) 60 25 10
டேனிய (டேனிஷ்) மாப்பசை 50 31 14
சமைக்கும்போதோ அல்லது சாப்பிடும்போதோ சேர்ப்பவை
வெண்ணெய் துண்டு 63 29 3
பாற்சாரமடித்த வெண்ணெய் 62 29 4
மார்கரின் (செயற்கை வெண்ணெய்), துண்டு 18 39 39
மார்கரின் (செயற்கை வெண்ணெய்), அதிக அளவு 16 33 49
மார்கரின் (செயற்கை வெண்ணெய்) , குறைந்த அளவு 19 46 33
பன்றிக் கொழுப்பு 39 45 11
காய்கறி நெய் (டால்டா) 25 45 26
கோழிக் கொழுப்பு 30 45 21
மாட்டுக் கொழுப்பு 41 43 3
பால்திரட்டி கலவை 16 54 25
இலகுவான இத்தாலியன் கலவை 14 24 58
மற்றவை
முட்டையின் மஞ்சள் கரு கொழுப்பு 36[2] 44[2] 16[2]
குறிப்பிடப்படாத இடங்களில் மேற்கோள்: [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 .nutritiondata.com --> Oil, vegetable, sunflower Retrieved on September 27, 2010
  2. 2.0 2.1 2.2 .nutritiondata.com --> Egg, yolk, raw, fresh Retrieved on August 24, 2009
  3. Feinberg School > Nutrition > Nutrition Fact Sheet: Lipids Northwestern University. Retrieved on August 24, 2009