நிலக்கடலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கச்சான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| நிலக் கடலை (Arachis hypogaea) |
||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வேர்க்கடலை (நிலக் கடலை)
|
||||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||||
| Arachis hypogaea கரோலஸ் லினீயஸ் |
நிலக்கடலை அல்லது வேர்க்கடலை அல்லது கச்சான் என்பது பலரால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரம் ஆகும். இது நடு தென் அமெரிக்காவுக்கு பூர்வீகமானது. சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.
இது வட்டார வழக்குகளில் வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை (மல்லாட்டை) எனப் பலவாறாக வழங்கப்படுகிறது. நிலக்கடலையை அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது. வெல்லப்பாகுடன் கலந்து கடலை மிட்டாயாக உண்ணப்படுகிறது. பொடித்து இனிப்புருண்டைகளாக தயாரிக்கப்படுகிறது. கடலை காந்தியடிகளுக்குப் பிடித்த உணவாகும்.