அரபு மொழி
அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி. உலகில் ஏறத்தாழ 250-300 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். அறமைக் மொழி, ஹீப்ரு மொழி என்பவற்றுடன் தொடர்புபட்டது. அரபு உலகம் முழுவதிலும் பேசப்படுகிறது. இஸ்லாமிய சமயத்துடன் தொடர்புபட்டதாகையால் உலகெங்குமுள்ள முஸ்லிம்களால் கற்கப்படுகிறது. வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. அல்ஜீரியா, பாரேன், எகிப்து, எரித்திரியா, ஈராக், ஜோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு அரசு ஏற்புடைய மொழியாகவும் உள்ளது.இறைத் தூதர் முகமது நபி(ஸல்) அவர்களின் தாய்மொழி அரபியாக இருந்த காரணத்தினாலும் முதன் முதலாக திரு குர்ஆன் அரபிய மொழியில் எழுதப்பட்டதாலும் உலகலாவிய முஸ்லிம்கள் தங்கள் தொழுகைகளை அரபி மொழியில் நிறைவேற்றுவது சம்பிரதாயமாக்கப்பட்டது.[6]அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியை தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர்.
பொருளடக்கம் |
அரபு மொழி ஒலிப்பு[தொகு]
அரபு மொழியில் உள்ள ظ என்ற எழுத்து தமிழில் ழ என்றுதான் பெயர்க்கப்படுகிறது. உதாரணம்:
- ظهر - ழுஹ்ர்
- ظلال - ழிலால் (பீ ழிலாலில் குர்ஆன் என்பதில் உள்ளது போல்).
அவ்வாறே ض என்ற எழுத்து ள என்று பெயர்க்கப்படுகிறது. உதாரணம்:
- حضرموت - ஹளரமௌத்
- مضر - முளர்.
தமிழில் உள்ள இந்த ழகரம் அரபு மொழியின் ظ ஒலிப்பிற்கும் ளகரம் அரபு மொழியின் ض ஒலிப்பிற்கும் நெருங்கி ஒலிக்கின்றன. மேலும், தமிழில் உள்ள இந்த ழகர, ளகர ஒலிகள் உருது போன்ற மொழிகளில் இல்லை. அதனாற்றான் உருது, இந்தி மற்றும் அவற்றுக்கு நெருங்கிய மொழிக்காரர்கள் ஆங்கிலத்தின் z போல மொழிகின்றனர். தமிழை ஆங்கிலத்துக்கு ஒலிபெயர்க்கும்போதும் இதே குழப்பம் வருகிறது. இந்த ழகரத்துக்குச் சிலர் z என்றும் zh என்றும் ஒலிப்புக் கொடுக்கின்றனர். அவ்வாறே L ஒலிப்பும் Tamil என்பதிற் போலப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தின் z எழுத்தைப் போல மொழியப் பழகிய பின்னர் இந்துசுத்தானி மொழிகளைச் சேர்ந்தோர் தங்களது மொழிகளுக்கு ஏற்றாற் போல அவற்றை ஜ எழுத்தின் ஓசையிலும் மொழிவதுண்டு. அத்துடன், அரபு மொழியை ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கும்போதும் நாட்டுக்கு நாடு வேறுபாடு வருவதுண்டு. உதாரணம்:
- مسلم - முஸ்லிம் - Muslim, Moslem
- جمال - ஜமால் - Jamal, Gamal (எகிப்திய வழக்கு)
- ظاهر - ழாஹிர் - Lahir, Zhahir, Dhahir
- ذكر - திக்ர் - Zikr, Zekr, Dhikr
- حافض - ஹாபிள் - Hafil, Hafiz, Hafidh, Hafid.
இந்தச் சிக்கல்கள் காரணமாகவே, அரபு மொழியைச் சரிவரக் கல்லாதோர் அவற்றைத் தமிழிற் கூறும்போது பிழை ஏற்படுகிறது.
பேச்சு அரபு மொழி[தொகு]
| பேச்சு அரபு | தமிழில் |
|---|---|
| அஸ்ஸலாமு அலைக்கும் | உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் |
| வ அலைக்கும் ஸலாம் | உங்களுக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் |
| இன்ஷா அல்லாஹ் | அல்லாஹ் நாடினால் |
| அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் | விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு அல்லாஹ் இடம் பாதுகாவல் தேடுகிறேன், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன் |
| தவ்ஹீத் | ஏகத்துவம் (ஓரிறைக் கொள்கை) |
| லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் | வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மது ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரராவார்கள் |
| கேஃப் அல் ஹாலுக | நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அல்லது உங்கள் நலன் எப்படியுள்ளது? |
| அன பீ ஹைரி | நான் நன்றாக இருக்கிறேன். |
| மாஷா அல்லாஹ் | அல்லாஹ் நாடியவாரே |
| கலாஸ் | முடிவடைந்துவிட்டது |
| நஅம் | ஆம் |
| லா | இல்லை |
| ஷுக்ரன் | நன்றி |
| யல்லா | தயாராகு / விரைவு செலுத்து |
| மாய் | தண்ணீர் |
| வாஹித் | ஒன்று |
| சுலோனிக் | எப்படி |
| ஹாம்ஸ் | நேற்று |
| அளிஎவ்ம் | இன்று |
| பாச்சர் | நாளை |
| அசீர் | பழரசம் |
| ஓய்னிக் | எங்கே |
| மௌஜூத் | இருக்கு |
| அன | நான் |
| இந்த | நீ |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Three lists, Ethnologue, Encarta, "Languages Spoken by More Than 10 Million People". Microsoft ® Encarta ® 2006. பார்த்த நாள் 2007-02-18.
- ↑ "Languages Spoken by More Than 10 Million People". Microsoft ® Encarta ® 2006. பார்த்த நாள் 2007-02-18.
- ↑ Most Widely Spoken Languages
- ↑ John W. Wright (2001). The New York Times Almanac 2002. Routledge. ISBN 1579583482. http://books.google.ca/books?id=G81HonU81pAC&pg=RA4-PA492&dq=almanac+arabic&lr=&as_brr=3&sig=Oi3cBiQqn4ckF2QVKPnXMEffPio.
- ↑ Knesset approves Arabic academy - Israel News, Ynetnews
- ↑ http://tamilmuslim.wordpress.com/2008/01/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/
புற இணைப்புகள்[தொகு]
| Wikiversity has learning materials about அரபு மொழி |
| விக்கி ஊடக நடுவத்தில் Arabic language தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |