அந்தமான் கிராமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்தமான் கிராமம், இந்தியாவில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், வெள்ளியங்குன்றம் ஊராட்சியில் அமைந்துள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 640583 ஆகும். இக்கிராமம் மதுரை - அழகர்கோவில் செல்லும் சாலையில் அப்பன்திருப்பதி அருகே உள்ளது.

கிராமத்தின் சிறப்பு[தொகு]

இக்கிராமத்திற்குள் மட்டும் மக்கள் செருப்பு அணிந்து நடமாடுவதில்லை எனும் பழக்கம் பல தலைமுறைகளாக கடைப்பிடித்து வருகின்றனர். [1]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

241.57 ஹெக்டேர் பரப்பளவும், 134 குடியிருப்புகளும் கொண்ட அந்தமான் கிராமத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 542 ஆகும். அதில் ஆண்கள் 277 ஆகவும்; பெண்கள் 265 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.67% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 ஆகவுள்ளனர். [2]அந்தமான் கிராமத்தின் மொத்த மக்கள்தொகையில் பட்டியல் இன மக்களின் விழுக்காடு 42.44 % ஆகவுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. நான்கு தலைமுறைகளாக காலணி அணிவதைத் தவிர்க்கும் தமிழக கிராமம்
  2. Andaman Population - Madurai, Tamil Nadu

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_கிராமம்&oldid=2673318" இலிருந்து மீள்விக்கப்பட்டது