உள்ளடக்கத்துக்குச் செல்

தொன்பியல் கண்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்லாண்டிஸ், மூ கண்டங்களைக் காட்டும் நிலப்படம்

மரபுவழிக் கதைகளிலும் இதிகாசங்களிலும் விவரிக்கப்படும் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பெருநிலப் பகுதிகளை தொன்பியில் கண்டங்கள் என்கிறோம்.

பண்டைக் கிரேக்கம்

[தொகு]
  • மிகவும் அறியப்பட்ட தொன்பியல் கண்டமாக அட்லாண்டிஸ் உள்ளது.[1][2] வடக்குக் காற்றுக்கு அப்பால் புராண மாந்தர்கள் வாழ்ந்த ஐப்பர்போரியா, துலே போன்ற நிலங்களைப் போலவே அட்லாண்டிசின் இருப்பிடமும் பண்டைக் கிரேக்க ஆவணங்களிலிருந்து ஊகிக்கப்படுகின்றது.

மாயர்கள்

[தொகு]
  • மாயா நாகரித்தின் மத்ரிடு எழுத்துப்படியில் கிடைத்துள்ள எஞ்சிய நான்கு படிகளின் மொழிபெயர்ப்பு முயற்சிகளிலிருந்து மூ என்ற தொலைந்த கண்டத்தைக் குறித்து அறிய முடிந்துள்ளது.

சமசுகிருதம்

[தொகு]
  • ஐரோப்பியர்களுக்கு சமசுகிருதம் இலக்கியம் அறிமுகமானபிறகு இந்தியப் புராணக் கதைகள் மேற்கத்திய உலகிற்கு பரவின. லூயி யாக்கோல்லியட்டு இந்த இலக்கியங்களில் ரூதாசு என்ற மூழ்கிய கண்டத்தைக் குறித்த குறிப்புகள் இருப்பதை விவரித்தார். இதன் பின்னணியில் எலனா பிளவாத்ஸ்கி இலெமூரியா கண்டத்தைக் குறித்த கருதுகோளை முன்வைத்தார். இதனுடன் தொடர்புடையதே குமரிக்கண்டம் குறித்த ஊகங்களும். லெமூரியா என்ற பெயர் அறிவியல் கருதுகோள்படி இந்தியாவிற்கும் தென் ஆப்பிரிக்காவிற்கும் இடையே நிலப்பாலம் அமைந்திருந்ததைக் குறிப்பிடுகின்றது. [3] கண்டப்பெயர்ச்சி குறித்த கண்டறிதலுக்குப் பிறகு இந்தக் கருதுகோள் தற்போது பயனற்றதாக கருதப்படுகின்றது.

இடைக்காலத்து ஐரோப்பா

[தொகு]
  • துவக்க கடலோடிகளின் தெளிவற்ற குறிப்புகளிலிருந்து டெரா ஆஸ்திராலிசு போன்ற கண்டங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றின் அமைவு பின்னாளில் தெரியவந்தபோதும் எந்தவொரு அறிவியல்சார் புலனாய்வும் எல்லை வரையறுப்பும் நடைபெறவில்லை.

தற்காலப் புனைவு

[தொகு]

கனவுப் புனைவு, அறிவியல் புனைவு எழுத்தாளர்களுக்கு தொன்பியல் கண்டங்களைக் குறித்து எழுதப் பெரும் ஆர்வம் உள்ளது. பல தற்கால மறைபொருள் நிலை அல்லது புது யுக இயக்க எழுத்தாளர்கள் தற்போது கடலடியில் மூழ்கிய கண்டங்களில் வாழ்ந்த பண்டை நாகரிகங்களைக் குறித்த ஊகங்களைக் கொண்டு புனைவிலக்கியம் படைத்துள்ளனர். எல். இசுப்ரேக்கு டெ கேம்ப் என்பாரின் "தொலைந்த கண்டங்கள்" என்ற ஆய்வில் குறிப்பிட்டுள்ளபடி அண்மைய வரலாற்றில் தொலைந்த கண்டங்களுக்கு எவ்வித அறிவியல்சார் சான்றும் இல்லை; இருப்பினும், கடைசி இடைப்பனிக்காலத்தின் இறுதியில் கடல் மட்டங்கள் எழுந்தமையால் சில பெரிய தீவுகள் மூழ்கின. இதுவே கடலில் மூழ்கிய கண்டங்களாக புராணங்களில் விவரிக்கப்பட்டிருக்கலாம். சில தொலைந்த கண்டங்கள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கலாம். இந்த கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு டெ கேம்ப்பே புனைவுக் கதைகள் எழுதியுள்ளார்.

ஜே. ஆர். ஆர். டோல்கீன் தனது நிலப்பகுதிகளை விவரமாக எழுதியுள்ளார்; தேவதையொத்த வலர்,மையர்களும் எல்வ் என்ற பேய்களும் வாழ்ந்த வலினோர் இத்தகைய கற்பனை நிலமாகும்.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. ATLANTIS SEARCH SHIFTS TO AEGEAN; Lost Continent Legend Held Based on False Statistics 1966 New York Times
  2. "Ignatius Donnelly has recently published at work in defence of the story that a continent known among the ancients as Atlantis was sunk in the Atlantic Ocean by an earthquake." A Submerged Continent April 4, 1882 page 1 Los Angeles Times
  3. [1] November 28, 1932 The Sydney Morning Herald
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொன்பியல்_கண்டங்கள்&oldid=3147394" இலிருந்து மீள்விக்கப்பட்டது