உள்ளடக்கத்துக்குச் செல்

எலனா பிளவாத்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலனா பிளவாத்ஸ்கி
Helena Blavatsky
1877 இல் எலனா
பிறப்புயெலெனா பெத்ரோவ்னா வோன் ஹான்
12 ஆகத்து [யூ.நா. 31 சூலை] 1831
நிப்ரோ நகரம், எக்கதெரினோசுலாவ், உருசியப் பேரரசு
இறப்பு8 மே 1891(1891-05-08) (அகவை 59)
இலண்டன், England
குறிப்பிடத்தக்க படைப்புகள்இரகசியக் கோட்பாடு (1888)
காலம்நவீன மெய்யியல்
  • 19-ஆம் நூற்றாண்டு மெய்யியல்
பகுதிஉருசிய மெய்யியல்
பள்ளிபிரம்மஞானம்
கல்விக்கழகங்கள்பிரம்மஞான சபை
முக்கிய ஆர்வங்கள்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
செல்வாக்குச் செலுத்தியோர்
செல்வாக்குக்கு உட்பட்டோர்

எலனா பெத்ரோவ்னா பிளவாத்ஸ்கி (Helena Petrovna Blavatsky, உருசியம்: Еле́на Петро́вна Блава́тская, ஆகத்து 12 [யூ.நா. சூலை 31] 1831 — 8 மே 1891), அல்லது பொதுவாக எலனா பிளவாத்ஸ்கி அல்லது பிளவாத்ஸ்கி அம்மையார் என்பவர் பிரம்மஞானத்தையும் பிரம்மஞான சபையையும் தோற்றுவித்தவர்[4].

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

எலனாவின் தந்தை ஜெர்மனிய வம்சத்தைச் சேர்ந்த பீட்டர் கான் (1798-1873), தாய் எலனா பாதயேவா (1814-1843). தாயார் பல புதினக் கதைகளை எழுதியவர். எலனாவின் பதினொராவது வயதில் தாயார் இறந்து விட்டார். எலனாவின் சகோதரி வேரா செலீக்கோவ்ஸ்கி ஒரூ புதின எழுத்தாளர். ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் மன்னரின் கீழ் பிரதமராக இருந்த செர்கே விட் என்பவர் எலனாவின் ஒன்றுவிட்ட சகோதரர்.

எலனா பதினேழாவது வயதில் ஜூலை 7, 1848 இல் யெரெவான் நகர ஆளுநர் 41-வயது நிக்கிபோர் பிளவாத்ஸ்கி என்பவரைத் திருமணம் புரிந்தார். மூன்று மாத மகிழ்ச்சியில்லாத திருமண வாழ்வை அடுத்து, எலனா குதிரை ஒன்றைத் திருடி அதிலேறி மலைகளைக் கடந்து திபிலீசியில் உள்ள அவரது தாய்வழிப் பேரனாரிடம் வந்து சேர்ந்தார். பேரனார் அவரை உடனடியாகவே சென் பீட்டர்ஸ்பேர்க் நகருக்குத் தந்தையிடம் அனுப்பி வைத்தார். அங்கு செல்லும் வழியில் அவர் வழிமாறி ரஷ்யா செல்லாமல் இஸ்தான்புல் நகரை அடைந்தார். மணவாழ்க்கை முறிவடைந்ததும், அவர் தனது வாழ்நாள் முழுக்க மறுமணம் புரியாமல் கன்னியாகவே இருந்து வந்தார்.

1848 முதல் 1858 வரை எகிப்து, பிரான்ஸ், கனடா (கியூபெக்), இங்கிலாந்து, தென்னமெரிக்கா, ஜெர்மனி, மெக்சிக்கோ, இந்தியா, கிரேக்கம் போன்ற பல உலக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். குறிப்பாக திபெத் நாட்டில் சகோதரர்கள் என அவரால் அழைக்கப்பட்டவர்களைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். அவர் இலங்கையில் இருக்கும் போது பௌத்த மதத்துக்கு மாறினார்[5]. 1858 இல் ரஷ்யா திரும்பினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Edward Bulwer-Lytton, The Coming Race, Introduction by David Seed, Wesleyan University Press, 2007, p. xlii.
  2. Brian Stableford, The A to Z of Fantasy Literature, Scarecrow Press, 2009, "Blavatsky, Madame (1831–1991)".
  3. Carlson, Maria (2015). No Religion Higher Than Truth: A History of the Theosophical Movement in Russia, 1875–1922. p. 33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-60781-8.
  4. 1891 England Census
  5. "Blavatsky and Buddhism". Archived from the original on 2008-12-10. பார்க்கப்பட்ட நாள் 2008-11-22.

வெளி இணைப்புகள்

[தொகு]
வெளி ஊடகங்கள்
படிமங்கள்
Young H. P. von Hahn, a bust by Ukrainian sculptor Alexey Leonov
ஒளிதம்
The Life of H. P. Blavatsky
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலனா_பிளவாத்ஸ்கி&oldid=3701055" இலிருந்து மீள்விக்கப்பட்டது