நியூசிலாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: lo:ປະເທດນູແວນ​ເຊລັງ
சி தானியங்கிஇணைப்பு: pih:Niiw Siiland
வரிசை 204: வரிசை 204:
[[os:Ног Зеланди]]
[[os:Ног Зеланди]]
[[pam:New Zealand]]
[[pam:New Zealand]]
[[pih:Niiw Siiland]]
[[pl:Nowa Zelandia]]
[[pl:Nowa Zelandia]]
[[pms:Neuva Zelanda]]
[[pms:Neuva Zelanda]]

00:26, 23 செப்டெம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்

நியூசிலாந்து
New Zealand
Aotearoa
கொடி of சியூசிலாந்தின்
கொடி
சின்னம் of சியூசிலாந்தின்
சின்னம்
நாட்டுப்பண்: "நியூசிலாந்தை கடவுள் காப்பாராக"
"அரசியைக் கடவுள் காபபராக"
சியூசிலாந்தின்அமைவிடம்
தலைநகரம்வெலிங்டன்
பெரிய நகர்ஓக்லாந்து
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம் (98%)
மாவோரி (4.2%)3
சமிக்கை மொழி (0.6%)
மக்கள்நியூசிலாந்தர், கிவி
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியல் முடியாட்சி
• அரசுத் தலைவர்
இரண்டாம் எலிசபேத்
• ஆளுநர்
ஆனந்த் சத்தியானந்த்
• பிரதமர்
ஹெலன் கிளார்க்
விடுதலை 
• தன்னாட்சி
செப்டம்பர் 26, 1907
• Statute of Westminster
டிசம்பர் 11, 1931
• அரசியல் சட்டம் 1986
டிசம்பர் 13, 1986
பரப்பு
• மொத்தம்
268,680 km2 (103,740 sq mi) (75வது)
• நீர் (%)
2.1
மக்கள் தொகை
• டிசம்பர் 2007 மதிப்பிடு
4,252,000 (122வது (2007))
• 2006 கணக்கெடுப்பு
4,143,279
• அடர்த்தி
15/km2 (38.8/sq mi) (204வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2008 IMF மதிப்பீடு
• மொத்தம்
$117.696 பில்லியன் (58வது)
• தலைவிகிதம்
$27,785 (28வது)
மொ.உ.உ. (பெயரளவு)2008 IMF மதிப்பீடு
• மொத்தம்
$128.071 பில்லியன் (53வது)
• தலைவிகிதம்
$30,234 (27வது)
ஜினி (1997)36.2
மத்திமம்
மமேசு (2007) 0.943
Error: Invalid HDI value · 19வது
நாணயம்நியூசிலாந்து டொலர் (NZD)
நேர வலயம்ஒ.அ.நே+12 (NZST)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+13 (NZDT)
(செப் முதல் ஏப்ரல் வரை)
அழைப்புக்குறி64
இணையக் குறி.nz


நியூசிலாந்து ஒரு தீவு நாடாகும். இது பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. வெலிங்டன் இதன் தலைநகராகும். இது இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளையும் பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. இவற்றுள் ஸ்டெவார்ட் தீவு/ராக்கியுராவும், சத்தாம் தீவுகளும் முக்கியமானவை. நியூசிலாந்தின் மாவோரி மொழிப் பெயர், நீளமான வெண்ணிற முகில் நிலம் என்னும் பொருள் தரும் ஆவோதேயாரோவா (Aotearoa) என்பதாகும். குக் தீவுகள், நியுவே, தொக்கேலாவு என்பனவும் நியூசிலாந்தின் ஆட்சிக்குள் அடங்கியுள்ளன. புவியியல் அடிப்படையில் நியூசிலாந்து மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மிக அருகில் உள்ள நாடான ஆஸ்திரேலியா தாஸ்மேனியக் கடலுக்குக் குறுக்காக 2000 கிலோமீட்டர்களுக்கு (1250 மைல்கள்) அப்பால் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. வடக்கே இதன் அண்மையிலுள்ளவை நியூ கலிடோனியா, பிஜி, தொங்கா என்பவை. இந் நாட்டின் நீண்டகாலத் தனிமையின் போது நியூசிலாந்தில், பறவைகளை முக்கியமாகக் கொண்ட தனித்துவமான விலங்கினங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. இவற்றுட் பல மனிதர்களும் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பாலூட்டிகளும் நாட்டுக்குள் வந்தபின்னர் அழிந்துவிட்டன.

தற்போதைய நியூசிலாந்தின் மக்கள் பெரும்பாலும் ஐரோப்பிய வழியினர். தாயக மாவோரி இனத்தவர் மிகப்பெரிய சிறுபான்மையினர். நகரப்பகுதிகளில், ஆசிய இனத்தவர்களும், மாவோரிகளல்லாத பொலினீசியர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்ந்துவருகின்றனர். ஐக்கிய இராச்சியத்தின் அரசி என்ற வகையில் இரண்டாம் எலிசபெத்தே நியூசிலாந்தின் அரசியாகவும் உள்ளார். இவரது சார்பில் ஆளுனர் நாயகம் ஒருவர் நியூசிலாந்தில் உள்ளார். அரசிக்கு நடைமுறையில் எவ்வித அரசியல் அதிகாரமும் கிடையாது. நாட்டின் அரசியல் அதிகாரம் மக்களாட்சி முறையில் தேர்வு செய்யப்படும் நியூசிலாந்தின் நாடாளுமன்றத்திடமே உள்ளது. இதன் தலைவரான பிரதம அமைச்சரே அரசின் தலைவராக உள்ளார். திறந்த பொருளாதார அமைப்பைக் கொண்ட நியூசிலாந்தின் பொருளாதாரம் உலகில் கூடிய அளவு கட்டற்ற சந்தை முறையைக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரங்களில் ஒன்று.

வரலாறு

நியூசிலாந்து மிகவும் அண்மைக்காலத்தில் குடியேற்றம் நிகழ்ந்த முக்கியமான நிலப்பகுதிகளுள் ஒன்று. கிபி 800க்கும் 1300க்கும் இடைப்பட்ட காலத்தில், தொடர்ச்சியான பல புலப்பெயர்வுகள் மூலம் வந்து சேர்ந்த கிழக்குப் பொலினீசியர்களே நியூசிலாந்தில் முதல் குடியேறியவர்கள் ஆவர். இதற்குப் பிந்திய சில நூற்றாண்டுகளில் இவர்கள் தனித்துவமான பண்பாட்டைக் கொண்ட மாவோரி என்னும் இனத்தவராக வளர்ச்சியடைந்தனர். இவர்கள் ஐவிகளாகவும் (இனக்குழுக்கள்), ஹாப்புக்களாகவும் (துணை இனக்குழுக்கள்) பிரிந்துள்ளனர். இவர்கள் சில சமயங்களில் கூட்டுறவுடனும், சிலவேளைகளில் போட்டியிட்டும், சண்டை செய்து கொண்டும் வாழ்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மாவோரிகளில் ஒரு பிரிவினர் சத்தாம் தீவுக்குக் குடி பெயர்ந்தனர். அங்கே இவர்கள் மொரியோரி பண்பாடு என்னும் தனித்துவமான பண்பாடு ஒன்றை உருவாக்கினர்.


19 ம் நூற்றாண்டில், ஒல்லாந்து நாட்டை சேர்ந்த தஸ்மன் என்ற மாலுமி, பசுபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவிற்கு அருகில் "கண்டுபிடித்த" தீவிற்கு, தனது தாயகத்தில் உள்ள மாகாணம் சீலாந்து (Zeeland) என்ற பெயரை வழங்கியதில் இருந்து அந்நாட்டின் ஐரோப்பிய காலனிய சரித்திரம் தொடங்குகின்றது. அங்கே குடியேறிய ஆங்கிலேயர்களும், பிற ஐரோப்பியர்களும் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையினராக நியூசிலாந்தின் அரசியல்,பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் அதே வேளை, பூர்வீககுடிகளான மவோரி மக்கள், சிறுபான்மையினராக சில குறிப்பிட்ட பிரதேசங்களில், தமது கலாச்சாரத்தை பேணிக்கொண்டு வாழ்கின்றனர். இருப்பினும், அந்த மக்கள் ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். பாடசாலைகளில், ஆங்கில மொழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்படுகின்றது. அங்கே பயிலும் மாணவர்கள் தமது சொந்த மவோரி மொழி பேசினால் தண்டிக்கப்படுகின்றனர். முதலில் "மவோரி" என்ற பெயர் கூட, பல்வேறு மொழிகள் பேசும் உள்நாட்டு மக்களுக்கு, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் வழங்கிய பொதுப்பெயர் ஆகும். 1987 ம் ஆண்டில் இருந்து தான் மவோரி மொழிக்கு, ஆங்கிலத்துக்கு நிகரான உதிதியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது. அவர்களின் மொழியிலேயே நியூசிலாந்துக்கு "அவோதியறோவா" என்ற பெயர் சூட்டப்பட்டது.

காலனியாதிக்க காலகட்டத்தில் இருந்தே சில இனங்கள் ஆங்கிலேயருடன் ஒத்துழைத்தும், சில இனங்கள் எதிர்த்துப்போராடியும் வந்துள்ளன. ஆங்கிலேயர்கள் விவசாய நிலங்களை அபகரித்துக்கொண்டிருந்த காலத்தில், இந்தத் தாயக மக்கள் காடுகளுக்குள் ஒளிந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். காலனிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்வது என்பது, அன்னிய கலாச்சாரம் ஒன்றிற்கு அடிமையாதல், என்று கருதிய துஹோ இனம் தனது கடுமையான எதிர்ப்பை காலத்திற்கு காலம் காட்ட தவறவில்லை. 1975 ம் ஆண்டு நிலவுரிமை கோரி நடந்த ஊர்வலம் ஒன்றில், 40000 பேர் கலந்து கொண்டமை நியூசிலாந்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வு. கடந்த ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களும் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான்.

படிமம்:Waitangi Treaty-1-.jpg
வைதாங்கி ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது

சர்ச்சைக்குரிய "வைதாங்கி ஒப்பந்தம்", இன்று வரை மவோரிகளின் கிளர்ச்சிகளை தூண்டிவிடும் காரணியாக உள்ளது. தேசிய தினமாக அறிவிக்கப்பட்டுள்ள "வைதாங்கி தினம்" அன்று, மவோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரிட்டிஷ் முடியை பிரதிநிதித்துவப்படுத்தும் நியூசிலாந்து தேசியக்கொடியை கிழிக்கும் போராட்டம் வருடாவருடம் நடக்கும். மவோரி மக்கள் வைதாங்கி ஒப்பந்தத்தை, நிலம் திருடுவதற்காக ஆங்கிலேயர் செய்த ஏமாற்று வேலை, என்றே கருதுகின்றனர். 1840 ம் ஆண்டு, பெப்ரவரி 6 ம் திகதி, பிரிட்டிஷ் அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம், ஆங்கிலத்தில் ஒரு பிரதியும், மவோரி மொழியில் ஒரு பிரதியுமாக எழுதப்பட்டது. இந்த இரண்டு பிரதிகளும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. பிழையான மொழிபெயர்ப்பு குறித்த சர்ச்சை இன்றைக்கும் தொடர்கின்றது. ஆங்கில மொழியில் உள்ள பிரதியில், நியூசிலாந்து நாட்டின் "இறைமை"(sovereignty) பிரிட்டிஷ் மகாராணிக்கு சொந்தமானது என்று எழுதியுள்ளது. ஆனால் மவோரி மொழியில் உள்ள பிரதியில் நியூசிலாந்து நிலங்களின் மீதான "ஆளுகை"(governorship) உள்நாட்டு இனக்குழுத் தலைவகளின் பொறுப்பில் உள்ளதாக எழுதியுள்ளது. ஒப்பந்தத்தின் போது மவோரி தலைவர்கள் தாமே நியூசிலாந்தின் உரிமையாளர்கள் என்று ஆங்கிலேயர்கள் அங்கீகரித்து விட்டதாகவும், அவர்கள் விருந்தாளிகளாகவே அங்கே தங்கியிருப்பதாக கருதினர். அதற்குமாறாக நியூசிலாந்து ஆட்சியதிகாரத்தை மவோரிகள் தம்மிடம் ஒப்படைத்துவிட்டதாக, ஆங்கிலேயர் ஒப்பந்தம் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டனர். அடுத்து வந்த வருடங்களில் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதை மவோரி மக்கள் உணர்ந்து கொண்டனர். பெரும்பான்மை நியூசிலாந்து நிலங்களை ஆங்கிலேயர்கள் சொந்தமாக்கிக்கொண்டனர். நேர்மையற்ற வழியில் நிலங்களை அபகரித்த, ஆங்கிலேயரின் ஈனச்செயல், இரண்டு சொற்களின் பிழையான மொழிபெயர்ப்பால் சாத்தியமானது. "இறைமை", "ஆளுகை" போன்ற சொற்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம், அன்று மவோரிகளுக்கு தெரிந்திருக்கவில்லை.

இன்று அரசியல் அறிவு பெற்ற மவோரி மக்கள், தமக்கென சுயாட்சிப்பிரதேசங்களை கோருகின்றனர். தமது மொழி, பண்பாடு என்பன சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்வதன் மூலமே சாத்தியமாகும் என நம்புவதால், அதற்கென அரசியல் வேலைப்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். உலகை மாற்றிய 2001 செப்டம்பர் 11 க்கு பிறகான, "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நியூசிலாந்தையும் பாதித்துள்ளது. அந்நாட்டு பயங்கரவாதிகள், சுயநிர்ணய உரிமை கோரும் பூர்வீக மவோரி மக்கள்.

புவியியல்

நியூசிலாந்து
ஆவோராக்கி/குக் மலை நியூசிலாந்தின் மிக உயரமான மலை

ஒரு தீவுக் கூட்டமான நியூசிலாந்து 268,680 சதுர கிலோ மீட்டர்கள் (103,738 சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டது. இதில் பெரும்பகுதி, வடக்குத் தீவு, தெற்குத் தீவு எனப்படும் இரண்டு பெரிய தீவுகளுக்கு உரியது. இவை மாவோரி மொழியில் முறையே தே இக்கா ஆ மௌவி, தே வை பௌனாமு என அழைக்கப்படுகின்றன. குறைந்த அளவி அகலமாக 20 கிலோ மீட்டரைக் கொண்ட குக் நீரிணை வடக்கு, தெற்குத் தீவுகளைப் பிரிக்கிறது. நியூசிலாந்து பரப்பளவு அடிப்படையில் ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளைவிடச் சற்றுச் சிறியதாகவும், ஐக்கிய இராச்சியத்தைவிடச் சற்றுப் பெரிதாகவும் உள்ளது. இதன் வடக்கு-வடகிழக்கு அச்சில் இந்நாடு 1,600 கிமீ (1,000 மைல்கள்) நீளம் கொண்டது. இதன் கரைப் பகுதிகளின் மொத்த நீளம் 15,134 கிமீ (9,404 மைல்) ஆகும். மனிதர் வாழும் சிறிய தீவுகளில் முக்கியமானவை ஸ்டெவார்ட் தீவு/ராக்கியுரா; ஆக்லாந்தின் ஹவுராக்கி குடாவில் உள்ள வைஹேக்கே தீவு; ஹவிராக்கி குடாவுக்குக் கிழக்கில் அமைந்துள்ள கிரேட் பரியர் தீவு; சத்தாம் தீவு என்பனவாகும். நாடு பெருமளவு கடல் வளங்களைக் கொண்டது. தனது நிலப்பரப்பிலும் 15 மடங்கு பெரிதான நான்கு மில்லியன் சதுர கிலோ மீட்டர் (1.5 மில்லியன் சதுர மைல்) பரப்பளவு கொண்ட, உலகின் ஏழாவது பெரிய தனிப் பொருளாதார வலயம் இந் நாட்டில் உள்ளது.

நியூசிலாந்தில் உள்ள மிகப்பெரிய நிலப்பகுதி தெற்குத் தீவு ஆகும். இது இதன் நீள வாக்கில் தெற்கு ஆல்ப்ஸ் எனப்படும் மலைத் தொடரினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மலைத் தொடரின் மிகவுயர்ந்த சிகரம் ஆவேராக்கி/குக் மலை 3,754 மீட்டர்கள் (12,320 அடிகள்) உயரமானது. தெற்குத் தீவில் 3000 மீட்டர்களுக்கு மேல் உயரமான 18 மலைச் சிகரங்கள் உள்ளன. வடக்குத் தீவு தெற்குத்தீவிலும் குறைவான மலைகளைக் கொண்டது ஆயினும் எரிமலைச் செயற்பாடுகளைக் கொண்டது. வடக்குத் தீவில் மிக உயர்ந்த மலையான ருவாப்பேஹு மலை (2,797 மீ / 9,177 அடி) ஒரு இயக்கமுள்ள எரிமலையாகும்.

நியூசிலாந்தின் வேறுபட்ட நில அமைப்புக்கும், இது கடல் மட்டத்துக்கு மேல் வெளிப்பட்டதுக்கும் காரணம் பசிபிக் புவியோட்டுக்கும், இந்திய-ஆஸ்திரேலியப் புவியோட்டுக்கும் இடையே உள்ள இயங்கியல் எல்லை (dynamic boundary) ஆகும். நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவின் அரைப்பங்கு பரப்பளவு கொண்டதும், பெரும்பகுதி நீரில் முழுமையாக அமிழ்ந்துள்ளதுமான நியூசிலாந்தியா என்னும் கண்டம் ஒன்றின் ஒரு பகுதியாகும். சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், தட்டுப் புவிப்பொறை இயக்கங்கள் காரணமாக நியூசிலாந்தியா இரண்டு பகுதிகளாக இழுக்கப்பட்டது. இதனை ஆல்ப்ஸ், தாவுப்போ எரிமலை வலயம் ஆகிய பகுதிகளிலுள்ள பிளவுகளிலிருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

பண்பாட்டு அடிப்படையிலும், மொழியியல் அடிப்படையிலும், நியூசிலாந்து பொலினீசியாவின் ஒரு பகுதியாகும். இது பொலினீசிய முக்கோணப் பகுதியின் தென்மேற்கு மூலையாக உள்ளது. நியூசிலாந்தின் அகலக்கோடு 47°தெ 34 ஆக அமைந்துள்ளது. இது வட அரைக் கோளத்தில் இத்தாலியின் அமைவிடத்துடன் பொருந்தி வருகிறது. எனினும் கண்டச் செல்வாக்கிலிருந்து தனிமைப் படுத்தப்பட்டு இருப்பதும், தெற்கிலிருந்து வீசும் குளிர் காற்றுக்களாலும், கடல் நீரோட்டங்களாலும், இதன் காலநிலை மிதமானதாகவே உள்ளது. நாடு முழுதும் மித வெப்பக் காலநிலை நிலவுவதுடன் கடல் சார்ந்ததாகவும் உள்ளது. வெப்பநிலை மக்கள் குடியேற்றம் உள்ள இடங்களில் 0° (32°) க்குக் கீழ் செல்வதோ அல்லது 30 °C (86 °F) மேல் செல்வதோ கிடையாது. முக்கியமான நகரங்களில் கிறிஸ்ட்சர்ச்சே மிகவும் வரண்ட நகரமாகும். இது ஆண்டுக்கு 640 மிமீ (25 அங்) மழை வீழ்ச்சியைப் பெறுகிறது. ஆக்லாந்து கூடிய ஈரலிப்பான நகரம். இது ஏறத்தாழ இரண்டு மடங்கு மழையைப் பெறுகிறது. கிறிஸ்ட்சர்ச், வெல்லிங்டன், ஆக்லாந்து ஆகிய நகரங்கள் ஆண்டுக்குரிய சராசரியாக 2000 மணிநேரங்களுக்கும் மேலான சூரிய ஒளியைப் பெறுகின்றன. தெற்குத் தீவின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகள் குளிர்ந்ததும், மேக மூட்டம் கொண்டதுமான காலநிலையைக் கொண்டுள்ளன. இப் பகுதிகள் ஆண்டுக்கு 1400 - 1600 மணிநேர சூரிய ஒளி பெறுகின்றன. தெற்குத் தீவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளே நாட்டில் அதிக சூரிய ஒளியைப் பெறும் பகுதிகளாகும். இவை ஆண்டுக்கு 2400 - 2500 மணிநேர சூரிய ஒளியைப் பெறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூசிலாந்து&oldid=430729" இலிருந்து மீள்விக்கப்பட்டது