உள்ளடக்கத்துக்குச் செல்

குருவிநாயனப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருவிநாயனப்பள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்805
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635120

குருவிநாயனப்பள்ளி (GURUVINAYANAPALLI) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் குருவிநாயனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

பெயராய்வு

[தொகு]

மலைகளும், குட்டைகளும் சூழ்ந்த பகுதி குருவிநாயனப்பள்ளி. குருவிகள் அதிகம் இருந்த இப் பகுதியில் குருவி வேட்டையாடுவதில் வல்லவனான ஒரு நாயக்கன் ஒருவன் வசித்து வந்தான். அவன் பெயராலேயே இந்த ஊர் குருவிநாயனப்பள்ளி என அழைக்கபட்டிருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[2]

அமைவிடம்

[தொகு]

குருவிநாயனப்பள்ளியானது கிருஷ்ணகிரி- குப்பம் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவிலும், வட்டத் தலைநகரான பர்கூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 251 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 805 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3484 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1788, பெண்களின் எண்ணிக்கை 1696 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 50.9 % என உள்ளது.இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[3]

பெருங்கற்காலச் சின்னங்கள்

[தொகு]

குருவிநாயனப்பள்ளியின் மேற்குப் பகுதியில் சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் பாண்டவர் பாறை என்றும் மேல்கோட்டை என்றும் அழைக்கப்படும் குன்று உள்ளது. இருந்த பாண்டவர்ப பாறையில் 50 இக்கும் மேற்பட்ட கல்திட்டைகள் அமைந்துள்ளன. இந்த கல்திட்டைகளின் கல்லறைகளானது நான்கு புறமும் நான்கு கற்பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. மேல் பகுதி ஒரு கனத்த கல்லால் மூடபட்டுள்ளது. கல் திட்டையின் கிழக்குப் பக்கம் உள்ள கற்பலகையில் அரைவட்டத்தில் இடுதுளை அமைக்கபட்டுள்ளது. இந்தக் கல்லறையை சுற்றி இரண்டு கல்வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உட்புறம் உள்ள கல்வட்டமானது இயற்கையாக கிடைக்கும் கரடு முரடான கற்களைக் கொண்டு அமைக்கபட்டுள்ளது. வெளிப்பும் உள்ள கல்வட்டம் கற் பலகைகளைக் கொண்டு அமைக்கபட்டுள்ளது.[4]

இங்கு உள்ள கல்திட்டை ஒன்றில், இடுதுளைக்கு நேர் எதிரே மேற்கு பக்க கற்பலகையின் உட்புறத்தில் வெள்ளை வண்ணத்தில் ஓவியங்கள் தீட்டபட்டுள்ளன.[4]

ஊரில் உள்ள கோயில்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
  2. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 103. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Bargur/Guruvinayanapalli
  4. 4.0 4.1 த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். p. 129. {{cite book}}: Check date values in: |year= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவிநாயனப்பள்ளி&oldid=3753269" இலிருந்து மீள்விக்கப்பட்டது