இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு
இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு' | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பிரான்சு சண்டையின் (இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின்) பகுதி | |||||||||
பிரான்சு சண்டை - இறுதி கட்ட வரைபடம்; தென் கிழக்கில் இத்தாலிய தாக்குதல்கள் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
இத்தாலி | பிரான்சு | ||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
உம்பெர்தோ டி செவோயா | ரெனே ஓல்ரி | ||||||||
பலம் | |||||||||
22 டிவிஷன்கள்,[2][3]
| 5 டிவிஷன்கள்[1] | ||||||||
இழப்புகள் | |||||||||
631 மாண்டவர், 2,631 காயமடைந்தவர், 616 காணாமல் போனவர் | 40 மாண்டவர், 84 காயமடைந்தவர், 150 காணாமல் போனவர் |
இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு (Italian Invasion of France) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு படையெடுப்பு. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். ஜூன் 10 - 22, 1940ல் நடந்த இப்படையெடுப்பில் இத்தாலியின் படைகள் பிரான்சைத் தாக்கின. இது இத்தாலிக்குத் தோல்வியில் முடிவடைந்தாலும் பிரான்சு சண்டையில் நாசி ஜெர்மனியிடம் தோல்வியடைந்து சரணடைந்த பிரான்சு, இத்தாலியுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மே 10ம் தேதி நாசி ஜெர்மனி பிரான்சையும் பெல்ஜியத்தையும் தாக்கியது. ஒரு மாத காலத்துக்குள் ஜெர்மானியப் படைகள் நேச நாட்டுப் படைகளை முறியடித்தன. டன்கிர்க் காலிசெய்தலுடன் பிரான்சு சண்டையின் முதல் கட்டம் முடிவடைந்தது. பிரான்சின் முதன்மைப் படைகள் முறியடிக்கப்பட்டதால் பிரான்சின் தோல்வி உறுதியானது. இக்காலகட்டத்தில் அச்சு நாடுகள் கூட்டணியில் அங்கம் வகித்த இத்தாலி பிரான்சின் தென்கிழக்குப் பகுதியைக் கைப்பற்றும் எண்ணத்துடன் ஜூன் 10ம் தேதி பிரான்சின் மீது போர்ப் பிரகடனம் செய்தது. ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் நிஸ் நகர் மற்றும் சுற்றுப்புறப் பிரதேசங்களைக் கைப்பற்றுவது இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் எண்ணமாக இருந்தது. மேலும் வட ஆப்பிரிக்காவிலுள்ள பிரெஞ்சு காலனிகளையும் முசோலினி தன்வசப்படுத்த எண்ணினார். பிரான்சின் படைகள் பலவீனமான நிலையில் இருந்தாலும், இத்தாலியின் படைகள் அவற்றை விட மோசமான நிலையில் இருந்தன. இத்தாலியால் வெகுதூரம் முன்னேற முடியவில்லை. இதற்குள் பிரான்சு ஜெர்மனியிடம் சரணடைந்தது. இதனால் இத்தாலியுடனும் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது. பிரான்சின் சில பகுதிகள் இத்தாலியின் வசம் வந்தன.