உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பாதி ராயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாதி ராயுடு
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அம்பாதி ராயுடு
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது ப அ து இருபது20 இளைஞர் தேர்வு
ஆட்டங்கள் 63 45 34 5
ஓட்டங்கள் 3754 1335 844 249
மட்டையாட்ட சராசரி 42.17 32.56 27.22 49.80
100கள்/50கள் 9/19 1/11 0/6 0/3
அதியுயர் ஓட்டம் 210 117 75* 86
வீசிய பந்துகள் 660 216 673 18
வீழ்த்தல்கள் 9 8 0
பந்துவீச்சு சராசரி 47.88 25.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 4/43 4/45 0/4
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
48/1 16/– 2/– 5/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஏப்ரல் 26 2011

அம்பாதி ராயுடு (Ambati Rayudu, பிறப்பு: செப்டம்பர் 23, 1985 , இந்தியத் துடுப்பாட்டக்காரர் இந்திய அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் 63 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

2002 ஆம் ஆண்டு தனது 16 ஆம் வயது முதல் ஐதராபாத்து துடுப்பாட்ட அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். 2003 ஆம் ஆண்டில் இந்தியா அ பிரிவு அணியில் விளையாடினார். 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இந்திய 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.பின் ஐசிஎல் போட்டிகளில் விளையாடியதால் இவரால் இந்திய தேசிய அணியில் விளையாட இயலவில்லை. பின் 2009 ஆண்டில் ஐசிஎல்லின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். பரோடா அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் சிறப்பாக விளையாடியதால் 2012 ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்தார். இருந்தபோதிலும் 2013 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.

சர்வதேச போட்டிகள்

[தொகு]

டிசம்பர், 2012 ஆம் ஆண்டில் இந்திய அணியின் தேர்வுக்குழு செயலாளராக சந்தீப் படேல் நியமனம் ஆனார். இவர் ஏற்கனவே ஐசிஎல் நிருவாகத்தில் இருந்தவர். இவர் 2012-2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இவரைத் தேர்வு செய்தார்[1]. காயம் காரணமாக மனோஜ் திவாரி விலகியதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[1] ஆனால் இந்தப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்படபில்லை. 2012 -2013 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடினார். இந்தத் டொடரில் 666 ஓட்டங்களை எடுத்தார். இதில் ஒரு நூறு, மற்றும் ஏழு அரைநூறுகள் அடங்கும்.[2] இவரின் ஒட்டுமொத்த சராசரி 60.54 ஆகும். 2013 இல் நடைபெற்ற ராணி கோப்பையில் மும்பை அணிக்கு எதிராக இவர் 51 மற்றும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 156* ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.[3] மேலும் 2012-2013 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தியோதர் கோப்பையில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.[4]

2013 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற மூன்றுநாடுகளுக்கு இடையேயான தொடரில் மகேந்திரசிங் தோனிக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.[5] இந்தத் தொடரில் இந்தியத் துடுப்பாட்ட அணி, இலங்கைத் துடுப்பாட்ட அணி மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி ஆகிய அணிகள் விளையாடின.[6] இந்தத் தொடரை இந்தியா வென்றது.

ஐபிஎல்

[தொகு]

2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். மே 13, 2018 இல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் துவக்கவீரராக களம் இறங்கி தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார்.[7] இதில் 4 நான்குகளும், 3 ஆறுகளும் அடங்கும். இந்தப் போட்டியில் 60 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற உதவினார். மேலும் ஷேன் வாட்சனுடன் இணைந்து முதல் இலக்கிற்கு 134 ஓட்டங்கள் சேர்த்தார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Rayudu replaces Tiwary in India T20 squad". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 May 2016.
  2. "Ranji Trophy, 2012/13 / Records / Most runs". ESPNcricinfo. Archived from the original on 6 February 2013. பார்க்கப்பட்ட நாள் 8 May 2016.
  3. "Mumbai v Rest of India at Mumbai, Feb 6–10, 2013". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 May 2016.
  4. "Rayudu takes West to Deodhar title". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 May 2016.
  5. "Injured Dhoni ruled out of tri-series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 May 2016.
  6. "Triangular Tournament in West Indies, 2013". பார்க்கப்பட்ட நாள் 8 May 2013.
  7. NDTVSports.com, "IPL 2018: Ton-Up Ambati Rayudu Guides Chennai Super Kings To 8-Wicket Win vs SunRisers Hyderabad – NDTV Sports", NDTVSports.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-05-14
  8. NDTVSports.com, "IPL 2018: Ton-Up Ambati Rayudu Guides Chennai Super Kings To 8-Wicket Win vs SunRisers Hyderabad – NDTV Sports", NDTVSports.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-05-14

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாதி_ராயுடு&oldid=3717995" இலிருந்து மீள்விக்கப்பட்டது