உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தூர்

ஆள்கூறுகள்: 11°59′13″N 75°22′34″E / 11.987°N 75.376°E / 11.987; 75.376
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தூர்
நகராட்சி
பரச்சினிகடவு சிறீ முத்தப்பன் ஆலயம்
அந்தூர் is located in கேரளம்
அந்தூர்
அந்தூர்
Location in Kerala, India
அந்தூர் is located in இந்தியா
அந்தூர்
அந்தூர்
அந்தூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°59′13″N 75°22′34″E / 11.987°N 75.376°E / 11.987; 75.376
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கண்ணூர்
வட்டம்தளிப்பறம்பா
அரசு
 • நிர்வாகம்நகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்24.17 km2 (9.33 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்28,218
 • அடர்த்தி1,200/km2 (3,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
670331, 670562, 670563, 670564, 670567.
தொலைபேசிக் குறியீடு497278****
ஐஎசுஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுகேஎல்-13, கேஎல்-13-59
பாலின விகிதம்1121 /
கல்வியறிவு93.45%
மக்களவைத் தொகுதிகண்ணூர்
தேர்தல் தொகுதிதளிப்பறம்பா
நிர்வாகம்நகராட்சி மன்றம்
காலநிலைமனதிற்குகந்தது (கோப்பென்)
இணையதளம்https://anthoormunicipality.lsgkerala.gov.in
பாம்புப் பூங்காவின் நுழைவு
புன்னக்குளங்கரை கிராமத்தின் காட்சி
நம்பரம் மோச்சிலோட்டு பகவதி கோயில்

அந்தூர் (Anthoor) என்பது இந்திய மாநிலமான கேரளாவின் வட மலபார் பிராந்தியத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியாகும் . கண்ணூர் நகரத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும், தளிப்பறம்பா நகரத்திலிருந்து 7 கி.மீ தொலைவிலும் அந்தூர் அமைந்துள்ளது.[2][3]

நிலவியல்

[தொகு]

அந்தூரின் எல்லையில் கிட்டத்தட்ட பாதி வளப்பட்டணம் புழா, குட்டிக்கோல் புழா ஆகிய இரண்டு அழகிய ஆறுகளால் சூழப்பட்டுள்ளது. வெள்ளிக்கீல் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்காவில் உள்ள உப்பங்கழிகள் இங்கு ஒரு சுற்றுலா தலமாகும்.

அந்தூர் வடக்கே தளிபறம்பா மற்றும் குருமத்தூர், தெற்கே கல்லியாச்சேரி அரோலி, மேற்கில் கண்ணபுரம், கிழக்கில் மய்யில், கோலாச்சேரி, நாரத் ஆகியவற்றுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.[4][5][6][7][8][9][10]

பரசினிக்கடவில் வளப்பட்டணம் ஆற்றின் இயற்கை காட்சி

சொற்பிறப்பியல்

[தொகு]

அந்தூர் என்ற பெயருக்கு "பெரிய கிராமம்" என்று பொருள். அதன் பெரிய அளவு காரணமாக, இந்த நகரம் அந்தூர் மற்றும் மொராழா என இரண்டு கிராமங்களாகப் பிரிக்கப்பட்டது. இந்த ஊரின் மலை பல தெய்யம் நாட்டுப்புற பாடல்களிலும் தோட்டம் பாட்டுவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[11]

வரலாறு

[தொகு]

இந்த ஊர் முன்னர் கோலாத்திரிகளின் ஆட்சியின் கீழ் இருந்தது . பின்னர், திப்பு சுல்தானின் மைசூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இது மாறியது. பிரித்தானிய இராச்சியத்தின் போது, இந்த இந்த ஊர் சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்தைச் சேர்ந்த சிரக்கல் வட்டத்தின் கீழ் இருந்தது. கேரள மாநிலம் உருவான பின்னர், இந்த பகுதி கண்ணூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. பின்னர், அந்தூர் பஞ்சாயத்து தளிப்பரம்பு நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. தற்போது, இது கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தின் ஒரு சுயாதீன நகராட்சியாகும்.[12][13]

பரசினிக்கடவு பாலம் - இது அந்தூரை மய்யில், கோலாச்சேரி மற்றும் நாரத்துடன் இணைக்கிறது

புள்ளிவிவரங்கள்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அந்தூரில் 28,218 மக்கள் தொகை உள்ளது. இதில் 12,527 ஆண்கள் மற்றும் 15,691 பெண்கள் உள்ளனர்.[14]

அந்தூர் மொராழா மற்றும் அந்தூர் ஆகிய இரண்டு சிறிய கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பஞ்சாயத்தாகும். 1990 ஆம் ஆண்டில், கேரள அரசு புதிய நகராட்சிகளை அறிவித்தபோது, அந்தூர் பஞ்சாயத்து தளிப்பரம்பாவுடன் இணைக்கப்பட்டு தளிப்பரம்பாவின் புதிய நகராட்சியை உருவாக்கியது.[15] பின்னர், 2015 ஆம் ஆண்டில், அந்தூரை தளிப்பரம்பாவிலிருந்து அரசாங்கம் பிரித்து அதை ஒரு சுயாதீன நகராட்சியாக மாற்றியது. அந்தூர் அதன் மக்கள்தொகை மற்றும் அடர்த்தியால் நகராட்சியாகும், ஆனால் ஒரு கிராமத்தின் பண்புகளுடன் பராமரிக்கிறது. கேரளாவின் வடக்கு மலபார் பிராந்தியத்தின் கண்ணூர் மாவட்டத்தில் தளிப்பரம்பா அருகே அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை -66 இல் இந்த நகரம் அமைந்துள்ளது.

விஸ்மயா கேளிக்கைப் பூங்காவின் நுழைவு

சுற்றுலா

[தொகு]

மத நிறுவனங்கள்

[தொகு]

போக்குவரத்து

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை தர்மசாலா வழியாக செல்கிறது. மங்களூர் மற்றும் மும்பையை வடக்குப் பகுதியிலும், கொச்சின் மற்றும் திருவனந்தபுரத்தை தெற்குப் பகுதியிலும் அணுகலாம். கிழக்கு நோக்கிச் செல்லும் சாலை மைசூர் மற்றும் பெங்களூருடன் இணைகிறது. அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் மங்களூர்- பாலக்காடு பாதையில் கண்ணபுரம் மற்றும் கண்ணூர் . கண்ணூர் சர்வதேச விமான நிலையம், மங்களூரு விமான நிலையம் மற்றும் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-26. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "New Municipalities of Kerala : Election Results". Trend Kerala – Democracy. Archived from the original on 12 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-03-20. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Kannur.gov.in : Villages of Kannur District". Kannur.gov.in. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2010-07-07.
  4. "Kannur District Map : Villages of Kannur". Kannur.gov.in. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2010-07-07. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "Govt. College of Engineering Kannur". Gcek.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2 January 2018.
  6. "Mangattuparamba Campus, Kannur University Campus P. O, Kannur - 670 567". Kannuruniversity.ac.in. Archived from the original on 15 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 January 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  7. "Kerala Armed Police Battalions". Keralapolicehistory.com. Archived from the original on 7 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2 January 2018.
  8. "Kendriya Vidyalaya Keltron Nagar : Home Page". Kvkeltronnagar.com. Archived from the original on 24 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2 January 2018.
  9. "Archived copy". Archived from the original on 28 March 2016. பார்க்கப்பட்ட நாள் 22 March 2016.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  10. "Parassinikkadavu Ayurveda Medical College & Hospital, Kannur, Kerala - Panchakarma Guide". Panchakarma.com. பார்க்கப்பட்ட நாள் 2 January 2018.
  11. "Anthoor, Kannur District, Kerala, India". Keralatourism.org. பார்க்கப்பட்ட நாள் 2 January 2018.
  12. "The Hindu : Kerala News : Electioneering gathering momentum in Taliparamba". Thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2 January 2018.
  13. "Kannur local bodies poll results leave all parties happy". Indian24news.com. Archived from the original on 16 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 January 2018.
  14. https://anthoormunicipality.lsgkerala.gov.in/ml/about%7Ctitle=ആമുഖം[தொடர்பிழந்த இணைப்பு]
  15. "ആമുഖം - Thaliparamba Municipality". Taliparambamunicipality.in. Archived from the original on 20 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தூர்&oldid=3927057" இலிருந்து மீள்விக்கப்பட்டது