புன்னக்குளங்கரை

ஆள்கூறுகள்: 11°59′35″N 75°21′51″E / 11.993148°N 75.3641939°E / 11.993148; 75.3641939
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புன்னக்குளங்கரை
கிராமம்
புன்னக்குளங்கரை is located in கேரளம்
புன்னக்குளங்கரை
புன்னக்குளங்கரை
Location in Kerala, India
புன்னக்குளங்கரை is located in இந்தியா
புன்னக்குளங்கரை
புன்னக்குளங்கரை
புன்னக்குளங்கரை (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°59′35″N 75°21′51″E / 11.993148°N 75.3641939°E / 11.993148; 75.3641939
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கண்ணூர்
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்670564
தொலைபேசிக் குறியீடு+91 497
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுகேஎல்-13, கேஎல்-59
அருகிலுள்ள நகரங்கள்தளிப்பறம்பா
மக்களவைத் தொகுதிகண்ணூர்
காலநிலைவெப்பமண்டல பருவமழை (கோப்பென்)
இணையதளம்punnakkulangara.blogspot.com
புன்னக்குளங்கரையின் நெல் வயல்கள்
நீலியார் கோட்டம் குளம்

புன்னக்குளங்கரை (Punnakkulangara) என்பது தென்னிந்தியாவில் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அந்தூர்நகராட்சியின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும். இது மொராழா கிராமத்தின் கீழ் வருகிறது.

இருப்பிடம்[தொகு]

இந்த ஊர் வடக்கு மலபாரில் உள்ள ஒரு கிராமம். இது கண்ணூர் மாவட்டத்தின் அந்தூர் நகராட்சியில் அமைந்துள்ளது. புன்னக்குலங்கரா மொராழா கிராமத்தின் கீழ் வருகிறது.

ஒரு சிறிய கிராமம் என்றாலும், இது முக்கியமான இடங்களால் சூழப்பட்டுள்ளது. சுதந்திர இயக்கத்தின் வரலாற்று இடங்களான, மொராழா, பக்கலம் ஆகியவை இந்த ஊரைச் சுற்றி அமைந்துள்ளது. கண்ணூர் பல்கலைக்கழகம் இதன் தெற்கே அமைந்துள்ளது. கேரள ஆயுதப்படையினரின் நான்காவது படைப்பிரிவு இந்த கிராமத்தின் தென்கிழக்கு எல்லையாகும். கண்ணூர், அரசு பொறியியல் கல்லூரி, கண்ணூர், தூர்தர்ஷன் மையம், கண்ணூர், கெல்ட்ரான், பர்சினிக்கடவு பாம்பு பூங்கா போன்றவை இந்த இடத்திற்கு மிக அருகில் உள்ளன.

மக்கள்தொகை[தொகு]

புன்னக்குளங்கரையின் மக்கள் தொகை விவரங்கள் கலவையான தன்மை கொண்டவை. இந்துக்களும் முஸ்லிம்களும் ஆதிக்கம் செலுத்தும் மதங்களாகும். கிறிஸ்தவர்களும் சிறிய அளவில் இருக்கிறார்கள். இந்துக்களில் பெரும்பாலோர் ஈழவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

பொருளாதாரம்[தொகு]

வேளாண்மை - ஒரு காலத்தில் இந்த ஊர் மக்களின் முக்கிய செயல்பாடாக இருந்த விவசாயம் இப்போது கீழ்நோக்கி உள்ளது. ஆனாலும், விவசாயத்தில் இன்னும் நிறைய பேர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பக்க வணிகமாக மட்டுமே செய்கிறார்கள். ஒருகாலத்தில் ஊரின் மையப்பகுதி வழியாக ஓடும் கால்வாயின் பக்கங்களில் உள்ள பரந்த நெல் வயல்கள் ஒரு நல்ல காட்சியாக இருந்தது. மெதுவாக, ஆனால் மேலும் மேலும் நெல் வயல்கள் மலட்டுத்தனமாகி வருகின்றன. முக்கிய விவசாய நடவடிக்கைகளில் அரிசி, தேங்காய், பாக்கு, மிளகு, முந்திரி, பிற பருவகாலப் பயிர்களும் அடங்கும்.

தொழிற்சாலை - இந்த ஊரில் எந்தத் தொழிலும் இல்லை. கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் ஏராளமான மக்கள் சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இது சிறிய அளவிலான வர்த்தகம் முதல் வெளிநாடு வர்த்தகம் வரை இருக்கும்.

தொழில்[தொகு]

இதன் மக்கள் தொகையில் பெரும்பகுதி தொழிலாளர்கள். கட்டுமானம், வேளாண்மை (பருவகாலம்) போன்றவை அவர்களுக்கு தொழில் வழங்கும் முக்கிய துறைகள். கூட்டுறவுத் துறை வாழ்வாதாரத்தின் ஒரு பெரிய ஆதாரமாகும். பெரும்பாலோர் அரேபிய நாடுகளில் வேலை செய்கிறார்கள். மற்றொரு முக்கியமான பகுதி அரசுத் துறை. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகம் போன்றவற்றில் பலர் வேலை செய்கிறார்கள். இப்போதெல்லாம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களில் பணியாற்றும் மக்களும் உயர்ந்து வருகின்றனர்.

போக்குவரத்து[தொகு]

தேசிய நெடுஞ்சாலை தர்மசலா சந்திப்பு வழியாக செல்கிறது. மங்களூர் மற்றும் மும்பையை வடக்குப் பகுதியிலும், கொச்சின் மற்றும் திருவனந்தபுரத்தை தெற்குப் பகுதியிலும் அணுகலாம். அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் மங்களூர் - பாலக்காடு பாதையில் கண்ணபுரம் மற்றும் கண்ணூர். மங்களூர் மற்றும் கோழிக்கோட்டில் விமான நிலையங்கள் உள்ளன.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்னக்குளங்கரை&oldid=3051003" இலிருந்து மீள்விக்கப்பட்டது