உள்ளடக்கத்துக்குச் செல்

அக்மார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்மார்க்
Agmark (Agriculture marketing)
சான்றளிக்கும் நிறுவனம்இயக்குநர், சந்தைப்படுத்தல், ஆய்வு செய்தல், இந்திய அரசு
நடைமுறையிலுள்ள இடம்இந்தியா
நடைமுறைக்கு வந்த நாள்1937, 1986 (அமல்படுத்தப்பட்டது)
வகைவிவசாயப் பொருட்கள்
சட்டத் தகுதிநிலைஆலோசனை

அக்மார்க் (AGMARK) என்பது இந்தியாவில் விவசாயப் பொருட்களில் பயன்படுத்தப்படும் தரச் சான்றிதழ் அடையாளமாகும். இந்தச் சான்றிதழ் கொண்ட பொருட்கள் சந்தைப்படுத்தல் மற்றும் ஆய்வு இயக்குநரகம் ஒப்புதல் அளித்த தரநிலைகளின் தொகுப்பிற்கு இணங்குவதாக உறுதியளிக்கிறது. வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் உழவர் நலத்துறையின் இணைக்கப்பட்ட இந்த அலுவலகம் இந்திய அரசாங்கத்தின் நிறுவனம் ஆகும்.[1][2][3][4][5] [6]  அக்மார்கின் தலைமயகம் அரியானாவில் உள்ள பரிதாபாத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் 1937ஆம் ஆண்டின் விவசாய உற்பத்தி (தரப்படுத்தல் மற்றும் குறித்தல்) சட்டத்தால் சட்டப்பூர்வமாகச் செயல்படுத்தப்படுகிறது (மற்றும் 1986 இல் திருத்தப்பட்டது). தற்போதைய அக்மார்க் தரநிலைகள் பல்வேறு பருப்பு வகைகள், தானியங்கள், அத்தியாவசிய எண்ணெய்கள், காய்கறி எண்ணெய்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் சேமியா போன்ற பகுதிப் பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகளில் 224 வெவ்வேறு பொருட்களுக்கான தர வழிகாட்டுதல்களை உள்ளடக்கியது.

சொற்பிறப்பியல் (தோற்றம்)

[தொகு]
1941இல் அக்மார்க் முத்திரை

அக்மார்க் என்ற சொல்லில் உள்ள ’அக்’ என்பது விவசாயத்தினை குறிக்க 'மார்க்' என்பது சான்றிதழைக் குறிக்கின்றது. வேளாண் உற்பத்தி (தரப்படுத்தல் மற்றும் குறித்தல்) சட்டத்திற்காக இந்திய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மசோதாவில் இந்த சொல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.[7]

1934 முதல் 1941 வரை இந்திய அரசாங்கத்தின் வேளாண் மற்றும் சந்தைப்படுத்தல் ஆலோசகரான ஆர்க்கிபால்ட் மெக்டொனால்ட் லிவிங்ஸ்டன் என்பவரால் அக்மார்க்கின் முழு அமைப்பும் (பெயர் உட்பட) உருவாக்கப்பட்டது. இவருக்குப் பல நூறு ஊழியர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்தியா முழுவதும் உள்ள உள்ளூர் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தரம் குறித்த சான்றிதழ் இல்லாத நிலையில், பெறப்படும் பொருளானது அதன் உண்மையான மதிப்பை விடக் குறைவானது என்பதை வெளிப்படுத்துகிறது.[8]

அக்மார்க் ஆய்வகங்கள்

[தொகு]

நாடு முழுவதும் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான அக்மார்க் ஆய்வகங்கள் மூலம் அக்மார்க் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவை சோதனை மற்றும் சான்றளிக்கும் மையங்களாகச் செயல்படுகின்றன. மகாராட்டிராவின் நாக்பூரில் உள்ள அக்மார்க் ஆய்வகம் மைய ஆய்வகமாகும், 11 நகரங்களில் (மும்பை, புது தில்லி, சென்னை, கொல்கத்தா, கான்பூர், கொச்சி, குண்டூர், அமிர்தசரசு, செய்ப்பூர், ராஜ்கோட், போபால்) வட்டார ஆய்வகங்களாகச் செயல்படுகின்றன.[9] வட்டார ஆய்வகங்கள் ஒவ்வொன்றும் வட்டார அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்புகளைச் சோதிப்பதில் நிபுணத்துவம் பெற்றவை. எனவே சோதனை செய்யக்கூடிய தயாரிப்புகள் மையங்களுக்கு மையம் வேறுபடுகிறது.[10]

பொருட்கள் மற்றும் சோதனைகள்

[தொகு]

அக்மார்க் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் சோதனைகளாக வேதிப் பகுப்பாய்வு, நுண்ணுயிரி பகுப்பாய்வு, பூச்சிக்கொல்லி எச்சம் மற்றும் மசாலா பொருட்கள் முழுச்சோதனை, நிலத்தடி மசாலா, நெய், வெண்ணெய், காய்கறி எண்ணெய்கள், கடுகு எண்ணெய், தேன், உணவு தானியங்கள் (கோதுமை), கோதுமை பொருட்கள் (ஆட்டா, ரவைமற்றும் மைதா), கடலை மாவு, சோயா அவரைகொண்டைக் கடலை, இஞ்சி, புண்ணாக்கு, சமையலுக்கு அல்லாத எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகள், விலங்கு உறைகள், இறைச்சி மற்றும் பிற உணவுப் பொருட்கள் சோதனை அடங்கும்.[10]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Directorate of Marketing and Inspection. 'Promotion of Standardisation and Grading of Agricultural and Allied Produce'". Archived from the original on 2011-11-11. பார்க்கப்பட்ட நாள் 2011-11-25.
  2. ":: Ministry of Food Processing Industries ::". Archived from the original on 26 April 2012. பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.
  3. "Slush and stench". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.
  4. K. Santhosh. "Nectar of kindness". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.
  5. Staff Reporter. "Minister inaugurates open auction system at market". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.
  6. National Institute of Open Schooling. 'Wise Buying.' பரணிடப்பட்டது 2010-10-11 at the வந்தவழி இயந்திரம்
  7. "Agricultural Produce (Grading and Marking) Act, 1937 (Act No. 1 of 1937) (as amended up to 1986)". Archived from the original on 2012-01-06. பார்க்கப்பட்ட நாள் 2012-05-05.
  8. Archibald McDonald Livingstone 1890-1972, in conversation with 1970.
  9. "ADDRESSES OF THE CENTRAL AGMARK LABORATORY AND REGIONAL AGMARK LABORATORIES". Archived from the original on 6 September 2004. பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.
  10. 10.0 10.1 "TESTING, RESEARCH AND STANDARDISATION FACILITIES". Archived from the original on 8 March 2003. பார்க்கப்பட்ட நாள் 29 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்மார்க்&oldid=3774780" இலிருந்து மீள்விக்கப்பட்டது