பட்டு முத்திரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பட்டு முத்திரை (Silk Mark)என்பது இந்தியாவில் பட்டு ஜவுளிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ் குறியாகும். பட்டு முத்திரை அடையாளத்துடன் விற்பனைச் செய்யப்படும் ஜவுளி தூய இயற்கை பட்டினால் செய்யப்பட்டுள்ளது என்று இந்த குறி சான்றளிக்கிறது. இந்த சான்றிதழை 'இந்தியாவின் முத்திரை அமைப்பு’ வழங்குகிறது. இது இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய பட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகும்.[1] இந்திய அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டாலும், இந்த முத்திரை ஆலோசனை மட்டுமே, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முத்திரை அல்ல. இந்த சான்றிதழ் திட்டம் 2004இல் மத்திய பட்டு வாரியத்தால் நிறுவப்பட்டது.[2] [3] [4] அசல் வடிவமைப்பில், குறிச்சொல்லில் நெய்யப்பட்ட ஒரு பட்டுக் குறி சின்னத்தை உள்ளடக்கியது. இதில் தனித்துவமான எண் கொண்ட ஹாலோகிராம் பொருத்தப்படும். ஹேங்-ஆன் டேக் போலியாக தயாரிக்கப்பட்டதால் துணியின் மீது நெய்யப்பட்ட அடையாளத்துடன் கூடிய ஒரு புதிய முறை முன்மொழியப்பட்டது.[5]

சான்றிதழ் செயல்முறை நுகர்வோருக்குப் பட்டு முத்திரையின் நம்பகத்தன்மையினை அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் இலவசமாகச் சோதனை செய்வதற்கான வசதியை உறுதி செய்கிறது.[6]

மேலும் காண்க[தொகு]

  • இந்தியாவில் சான்றிதழ் மதிப்பெண்கள்
  • புவியியல் குறிப்புகள் குறிகள்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டு_முத்திரை&oldid=3135629" இருந்து மீள்விக்கப்பட்டது