எப். பி. ஓ. குறியீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எப். பி. ஓ. குறியீடு (FPO mark) என்பது பதப்படுத்தப்பட்ட பழ பானங்கள், பழ கூழ்மங்கள், பழச்சாறு, ஊறுகாய், நீர்மமற்ற பழப் பொருட்கள் மற்றும் பழத்திலிருந்து பெறப்பட்ட பொருட்களுக்கு 2006ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ் ஆகும். இது இந்தியாவில் விற்கப்படும் அனைத்து பதப்படுத்தப்பட்ட பழப் பொருட்கள் மீது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.[1][2] எப். பி. ஓ. குறியீடு உள்ள தயாரிப்பு ஒன்று, ஆரோக்கியமான சூழலில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பான உணவு என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதனால் இத் தயாரிப்பு நுகர்வுக்கு ஏற்றது என்பதை உறுதி செய்கிறது.

பழ தயாரிப்புகள் ஆணைச் சட்டத்தால் 1955ஆம் ஆண்டு முதல் இத் தரநிலை நடைமுறையில் உள்ளது. பின்னர் இது குறியீடு வடிவில் மாற்றப்பட்டது.[3][4] ஆனால் 2006ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டத்திற்குப் பிறகுதான் இந்த அடையாளத்திற்குக் கட்டாய அந்தஸ்து கிடைத்தது.[5] இந்தியாவில் பழ பதப்படுத்தும் தொழிற்துறையைத் தொடங்க எப். பி. ஓ. உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.[6] இந்த தரக்கட்டுப்பாட்டு அளவுகோல், அடையாளம் இவற்றை, இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் கவனித்துக்கொள்கிறது.

எப். பி. ஓ. வின் குறிப்பிட்ட தேவை [7][தொகு]

 1. கலன்கள் மற்றும் முகப்புச்சீட்டு தேவை
 2. நச்சுத் தன்மையான உலோகங்களைப் பழ உணவு தயாரிப்பில் கட்டுப்படுத்தல்
 3. அனுமதிக்கப்பட்ட பாதிப்பில்லாத உணவு வண்ணங்களின் பட்டியல்
 4. பழ தயாரிப்புகளில் அனுமதிக்கப்பட்ட பதப்பொருட்கள் மீதான வரம்புகள்
 5. பிற அனுமதிக்கப்பட்ட சேர்க்கை பொருட்கள்

பயன்பாடு [8][தொகு]

எப். பி. ஓ. குறியீடு பயன்படுத்த அனுமதி கோரும் விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யும் போது இந்தியாவின் உணவு பதப்படுத்தும் அமைச்சகத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டிய முக்கியமான ஆவணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

 1. பொருளின் பெயர்
 2. விண்ணப்பதாரர் பெயர்
 3. நிறுவனத்தின் பெயர்
 4. முகவரி
 5. தயாரிப்பு மாதிரி

மேற்கோள்கள்[தொகு]

 1. National Institute of Open Schooling. 'Wise Buying.' பரணிடப்பட்டது அக்டோபர் 11, 2010 at the வந்தவழி இயந்திரம்
 2. "FPO mark".
 3. Ministry of Food Processing Industries. Official web site.
 4. Financial Express. 'Now You Can Get FPO Licence Online.'
 5. CreatIndia. பரணிடப்பட்டது 2012-08-13 at the வந்தவழி இயந்திரம்
 6. "Food laws and Regulations".
 7. "Fpo requirement".
 8. "Apply for FPO mark". {{cite web}}: Missing or empty |url= (help)

பழ தயாரிப்புகள் ஆணை, 1955. (FPO) உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 இன் பிரிவு 97 (1) இன் படி 2011 ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம், 2006

"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்._பி._ஓ._குறியீடு&oldid=3135971" இலிருந்து மீள்விக்கப்பட்டது