கடலை மாவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடலை மாவு என்பது கடலைப் பருப்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது பொதுவாக இந்திய துணைக்கண்ட நாடுகளான இந்தியா, வங்காளதேசம், பர்மா, நேபால், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் உணவில் ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பச்சை கடலைப்பருப்பிலிருந்தோ அல்லது வறுத்த பருப்பிலிருந்தோ கடலை மாவு தயாரிக்கப்படுகிறது.

இதை தயிர் அல்லது நீரில் கரைத்து ஒரு பசைபோல் ஆக்கி பின் அதை முகப்பொலிவு மருந்தாகவும் இந்திய துணைக்கண்டத்தில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள்[1]. சரியளவு தண்ணீர் சேர்த்து அந்த கலவையை முட்டைக்கு பதிலாகவும் வேகன் உணவு முறையில் பயன்படுத்துகிறார்கள்.[2]

கடலை மாவு அதிக மாவுச்சத்து கொண்டது[3], மற்ற மாவுகளை விட அதிக நார்ச்சத்தும் கொண்ட பொருள். குளுட்டன் இதில் இல்லை.[4]

உசாத்துணைகள்[தொகு]

  1. "What is gram flour?". Blurtit.com. 2007-09-29 அன்று பார்க்கப்பட்டது.
  2. The Vegan Society. "Egg Substitutes". Vegansociety.com. 2011-07-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-12-31 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Chickpea flour (besan)". Nutrition Data: Nutrition Facts and Calorie Counter. 2007-09-29 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Grains and Flours Glossary: Besan". Celiac Sprue Association. 2007-10-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-09-29 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலை_மாவு&oldid=3586455" இருந்து மீள்விக்கப்பட்டது