விபோத்தாரிணி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேவி விபோத்தாரிணி

விபோத்தாரிணி தேவி ( Bipodtarini Devi ) அல்லது பிபோத்தாரிணி தேவி என்பது இந்து மதக் கடவுளாகும். இவள் இந்தியாவின் மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களில் வணங்கப்படுகிறாள். சங்கடராணி தேவியுடன் நெருங்கிய தொடர்புடையவளாகவும், துர்கையின் 108 அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படும் விபோத்தாரிணி, பிரச்சனைகளை சமாளிக்க உதவிக்காக வேண்டிக் கொள்ளப்படுகிறாள். [1] அவளுடன் தொடர்புடைய வருடாந்திர திருவிழாவான விபோத்தாரிணி விரதத்தின் போது, துவிதியை முதல் தசமி வரை சுக்ல பட்சத்தின் (வளர்பிறை நிலவு) 2வது நாள் முதல் 10வது நாள் வரை பெண்களால் அனுசரிக்கப்படும் விரதம் பற்றி தேவியின் புராணக்கதைகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்து நாட்காட்டியின் படி ஆடி மாதத்தில் செவ்வாய் அல்லது சனிக்கிழமை இது அனுசரிக்கப்படுகிறது. இந்தப் புராணக்கதைகள் இவளது பெயரை நிறுவின. பிபோதா - தாரிணி, அதாவது பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பவர் எனப் பொருள். [2] [3]

புராணக் கதை[தொகு]

விபோத்தாரிணியின் கதையில் செம்பருத்தி மலர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது

விபோத்தரிணியின் பூசையானது (சடங்கு வழிபாடு) - பெண்களால் கடைபிடிக்கும் ஒரு விரதமாகும். இது தேவியின் புராணத்தைச் சொல்வதன் மூலம் பின்பற்றப்படுகிறது அல்லது முன் வைக்கப்படுகிறது. இந்த புராணக்கதை விஷ்ணுபூர் அல்லது பிஷ்ணுபூரில் (தற்போதைய மேற்கு வங்காளத்தில் உள்ளது), 7 ஆம் நூற்றாண்டு கிபி முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை பாக்டி இனத்தைச் சேர்ந்த (பர்கா சத்ரியர்) மல்ல மன்னர்களின் காலத்தில் மல்லபூம் இராச்சியத்தில் நடந்ததாக உள்ளது. நாட்டின் இராணிக்கு மாட்டிறைச்சி உண்ணும் மோச்சி இனத்தைச் சேர்ந்த ஒரு தோழி இருந்தாள். ஆர்வத்தின் காரணமாக இராணி இறைச்சியைப் பார்க்க விரும்பினார். ஒரு நாள், இராணி தன் தோழியிடம் அதைக் காட்டச் சொன்னாள். பக்தியுள்ள இந்து மன்னனின் கோபத்திற்கு பயந்து முதலில் மறுத்த தோழி, ஆனால் பின்னர் இராணியின் வேண்டுகோளுக்கு இணங்கினாள். இருப்பினும், இராணி காட்டிக் கொடுக்கப்பட்டதால், கோபமடைந்த மன்னன் அவளைக் கொல்ல விரைந்தான். இராணி தனது ஆடைகளில் இறைச்சியை மறைத்து, உதவிக்காக துர்கா தேவியிடம் வேண்டினாள். அதைத் தொடர்ந்து, மன்னன் அவளது ஆடைகளைக் கிழித்து, அவற்றின் கீழே மறைந்திருப்பதைக் கண்டபோது, அங்கு அவன் ஒரு செம்பருத்தி மலரைக் கண்டான். இன்றும் அம்மனின் பூசை பெண்களின் சடங்குகளின் ஒரு பகுதியாக உள்ளது . மேலும், குடும்ப நெருக்கடியின் போது தெய்வத்தின் தலையீட்டிற்காக செய்யப்படுகிறது.[3]

குறிப்பிட்ட நெருக்கடியின் போது அழைக்கப்படும் துர்காவின் வேறு சில வெளிப்பாடுகளைப் போலவே, அல்லது நோய்வாய்ப்பட்ட குடும்ப உறுப்பினருக்கு உதவவும், விபோத்தாரினியும் "குணப்படுத்தும் தெய்வம்" என்று நம்பி பிரார்த்தனை செய்யப்படுகிறது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கோவில்களின் மத நாட்காட்டியில் வருடாந்திர விபோத்தாரிணி-பூசை ஒரு முக்கியமான நிகழ்வாக இடம் பெற்றிருக்கும். [4]

சான்றுகள்[தொகு]

  1. "See Durga’s 51 avatars under a single roof". Oct 4, 2008. http://www.indianexpress.com/news/see-durgas-51-avatars-under-a-single-roof/369354/. 
  2. Chakrabarti, S. B. (2002). A Town in the Rural Milieu Baruipur, West Bengal. Anthropological Survey of India, Ministry of Tourism and Culture, Dept. of Culture. பக். 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-85579-73-3. https://books.google.com/books?id=EVDaAAAAMAAJ. 
  3. 3.0 3.1 Östör, Ákos (2004). The Play of the Gods: Locality, Ideology, Structure, and Time in the Festivals of a Bengali Town. Orient Blackswan. பக். 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-8028-013-6. https://books.google.com/books?id=6ASi04hC0BQC&pg=PA43. 
  4. "Sarbamangala Mandir". Bardhaman district website.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விபோத்தாரிணி_தேவி&oldid=3350015" இருந்து மீள்விக்கப்பட்டது