விக்கிப்பீடியா பேச்சு:உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேவைப்படும் மேம்பாடுகள்[தொகு]

  1. ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்க்கும்போது References, Notes எனும் துணைத் தலைப்புகள், குறிப்புகள் என்று தமிழில் மொழிபெயர்ப்பு ஆகிறது. References என்பது மேற்கோள்கள் என்பதாகவும், Notes என்பது குறிப்புகள் என்பதாகவும் மொழிபெயர்ப்பு ஆக வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:30, 17 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
    ஆம். இது போன்ற மாற்றங்களை அந்த கருவியில் வர எங்கு செய்ய வேண்டும்? தந்தால் தொடர்ந்து இதுபோன்றவைகளைச் செய்ய விரும்புகிறேன். உழவன் (உரை) 03:25, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
  2. திரைப்படக் கட்டுரைகள் உருவாக்கும் போது Cast எனும் துணைத் தலைப்பு அப்படியே தமிழில் காஸ்ட் என்றும் Plot என்பது சதி எனவும் Production enbathu உற்பத்தி எனவும் வருகிறது. ஆனால் அது முறையே நடிப்பு அல்லது நடிகர்கள் எனவும் மற்றும் கதைச் சுருக்கம் எனவும் மொழிபெயர்க்கப்படவேண்டும்.--Balu1967 (பேச்சு) 02:53, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
    கதைச் சுருக்கம் எனவும் பயன்படுத்தியிருக்கிறேன். காண்க: டம்ப் மனி. கதைக்கரு --> பேர்ள் ஆர்பர் (திரைப்படம்), திரைக்களம்' எனவும் அமைத்தேன். காண்க: தி பீகீப்பர் (2024 திரைப்படம்) எதை பயன்படுத்தலாம்? பல்வேறு கலைச் சொற்கள் இருக்கலாமா? சீர்மையாக ஒரே சொல்லினைப் பயன்படுத்தலாமா? உழவன் (உரை) 03:36, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
இது இயந்திரவழிக் கற்றல் முறையில் நடப்பதால் தொடர்ந்து இந்தப் பிழைகளை நீங்கள் திருத்தினாலே எதிர்காலத்தில் இக்கருவி புரிந்து கொள்ளும். இருந்தாலும் இவற்றைச் சுட்டிக்காட்ட விரும்பினால் இங்கே கருத்திடலாம். மொழிபெயர்ப்பின் தரத்தை மேம்படுத்த வாய்ப்புள்ளது.-நீச்சல்காரன் (பேச்சு) 06:27, 31 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

எழுதும் முறை[தொகு]

  1. அவர் என்பதற்குப் பதிலாக இவர் என்பது பொருத்தமாக இருக்கும்.
    உதாரணமாக he is a great cricketer. அவர் ஒரு சிறந்த துடுப்பாட்டக்காரர்.
    இங்கு இவர் என்று தான் வரவேண்டும்.
    ஆனால் இவர் என்பதையுமே பலமுறை பயன்படுத்த வேண்டாம் என கூறலாம். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:29, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
    @Sridhar G உரிய திருத்தங்களை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:49, 18 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
    Y ஆயிற்று - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:29, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

தகவல்பெட்டி[தொகு]

  • கருவியில் தகவல்பெட்டியும் சேர்த்து மொழிபெயர்க்கப்படுகிறதா? தகவல்பெட்டி ஏன் ஒரே வரியில் அனைத்தும் சேர்ந்து வருகிறது. மொழிபெயர்ப்பவர்களே இதனை சரி செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் கட்டுரை ஒன்று எழுதினால் போதுமென்ற மனநிலையில்தான் எழுதுகிறார்கள் போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 06:27, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
ஆம் கருவியில் தகவல்பெட்டியும் சேர்த்து மொழிபெயர்க்கப்படுகிறது. ஒரே வரியாகவேத்தான் கொடுக்கிறது. மொழிபெயர்ப்பவர்களும் அப்படியே பதிவேற்றுகின்றனர். --கி.மூர்த்தி (பேச்சு) 06:40, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
//மொழிபெயர்ப்பவர்களும் அப்படியே பதிவேற்றுகின்றனர்.// வணக்கம், காட்சித் தொகுப்பின் போது சரியாகத் தான் வரும். காட்சித் தொகுப்பின்போதும் ஒரே வரியாக வந்து அதனைப் பதிப்பித்தால் நாம் அவர்களைக் குறை கூறலாம். காட்சித் தொகுப்பில் கட்டுரை துவங்குபவர்கள் அதே காட்சித் தொகுப்பில் தான் திருத்தங்களும் செய்வர். துப்புரவு செய்பவர்கள் தான் இரண்டு தொகுப்பிற்கும் பழகிக்கொள்ள வேண்டும். உதாரணமாக நமக்கு பழைய காட்சித் தொகுப்பு (இடைமுகம்) பழக்கமாக இருந்தாலும் பரப்புரைக்காக 2022 இடைமுகத்தைப் பயிற்சி செய்து பார்த்தோம் அல்லவா அதுபோல் தான். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 10:23, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
//ஏன் ஒரே வரியில் அனைத்தும் சேர்ந்து வருகிறது.// visual edit (காட்சித் தொகுப்பு) பயன்படுத்துவதால் இவ்வாறு வரும். மூலத் தொகுப்பில் திருத்தம் செய்யும் போது ஒரே வரியாக இருக்கும், திருத்தம் செய்வது கடினம். இதனைக் காட்சித் தொகுப்பில் திருத்துவது மிக எளிது. இந்தக் கருவியினைப் பயன்படுத்தாது, ஆ.வியில் (காட்சித் தொகுப்பில்) இருந்து நகலெடுத்து ஒட்டினாலும் இப்படித்தான் நிகழும்.-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 10:12, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
  • தாவரவியல் தகவற்பெட்டிக்கான குறியீடுகள் இங்குள்ளது போல வருவதில்லை. அதற்குரிய மீடியாவிக்கிக் குறியீடுகளோடு பெரிதாக வருகிறது. மேலும் தேவையற்ற மேற்கோள் குறியீடுகள், </nowiki> போன்றவை வருகின்றன.--உழவன் (உரை) 09:36, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

கட்டுரையைப் பிரதியிடல்[தொகு]

ஒரு கட்டுரைக்கு மேல் இன்னொரு கட்டுரை எழுதப்படுகிறது. எ+கா: மணிமாலா.--Kanags \உரையாடுக 06:43, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

தலைப்பு ஏற்கனவே இருந்தால், புதுக் கட்டுரையை எழுத இயலாதவாறு தடுக்கும் வகையில் தொழினுட்பத்தை இதில் கொண்டுவர வேண்டும். இது போன்ற குறைபாடுகளை எங்கு தெரிவிக்கவேண்டும் என்பதுவே எனக்குத் தெரியவில்லை! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:19, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
@Selvasivagurunathan m
1. //தலைப்பு ஏற்கனவே இருந்தால், புதுக் கட்டுரையை எழுத இயலாதவாறு தடுக்கும் வகையில் தொழினுட்பத்தை இதில் கொண்டுவர வேண்டும்// விக்கித்தரவில் சேர்த்தால் இந்தப் பிரச்சினை வரவே வராது.
2. ஒரு கட்டுரைக்கு மேல் இன்னொரு கட்டுரை எழுத இயலும். விக்கிச் சமூக ஒப்புதல் இருந்தால் இதனை நீக்கலாம்.
3. //இது போன்ற குறைபாடுகளை எங்கு தெரிவிக்கவேண்டும்// இங்கு
இது குறித்து ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள உரையாடல். காண்க -- நன்றி ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:16, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
தலைப்பு ஏற்கனவே இருந்தால், தமிழில் கட்டுரை உள்ளது என்று அறிவிப்பு வருகிறது. ஆனால் தலைப்பில் சிறு வித்தியாசம் இருந்தாலும் கண்டுபிடிக்கப்படாமல் புதுக் கட்டுரையை எழுத நேர்ந்து விடுகிறது. --கி.மூர்த்தி (பேச்சு) 08:54, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
மணிமாலா கட்டுரை ஏற்கெனவே விக்கித்தரவில் ஆங்கில விக்கிக் கட்டுரைக்கு இணைக்கப்பட்டிருந்தது.--Kanags \உரையாடுக 09:57, 19 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
விக்கித்தரவில் இருந்தால் தற்போதுள்ள பக்கத்தை அழித்துவிட்டு பிரசுரிக்கவும் என அறிவிப்பு வரும் அதனையும் மீறி செய்வது பயனரின் தவறு. விக்கிச் சமூக ஒப்புதல் இருந்தால் இதனைத் தடுக்கலாம். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:03, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
ஆம், இவ்வாறான பிரதியிடலைத் தடுப்பதே நல்லது.--Kanags \உரையாடுக 10:48, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
User:Sridhar G User talk:Kanags ஆகியோருக்கு வணக்கம். உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி பற்றிய தலைப்பு என்பதால் நானும் இதில் ஒரு சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தேன். ஆனால் மணிமாலா கட்டுரை தானாகவே விக்கித் தரவில் சேர்ந்து விட்டது. மேலும் //விக்கித்தரவில் இருந்தால் தற்போதுள்ள பக்கத்தை அழித்துவிட்டு பிரசுரிக்கவும் என அறிவிப்பு வரும்// எனக் கூறியுள்ளீர்கள். ஆனால் எனக்கு அவ்வாறான அறிவிப்பு ஏதும் வரவில்லை. --Balu1967 (பேச்சு) 10:52, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
எதுவாகினும் கட்டுரை உருவாக்கிய உடனேயே பக்க வரலாற்றைக் காண்பது. நல்லது என்று தோன்றுகிறது.-- சா. அருணாசலம் (பேச்சு) 11:31, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் இதுவொரு இடைக்காலத் தீர்வு. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:44, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
@Balu1967: ஒரு பரிந்துரை: en:Maram (film) எனும் கட்டுரையை மரம் எனும் கட்டுரைத் தலைப்பில் மொழி--Balu1967 (பேச்சு) 01:07, 23 மார்ச்சு 2024 (UTC)பெயர்ப்பு செய்து பார்க்கிறீர்களா? மரம் எனும் கட்டுரை ஏற்கனவே இருப்பதால், எச்சரிக்கை அறிவிப்பு வருகிறதா எனப் பார்ப்போம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:10, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
ஏற்கனவே உள்ள கட்டுரையினை பிரசுரிக்கும் போது வரும் எச்சரிக்கை

ஏற்கனவே உள்ள கட்டுரையின் பெயரில் புதிய கட்டுரையினை வெளியிட முயன்றால் இந்தப் படத்தில் இருப்பது போன்ற எச்சரிக்கை வரும். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 18:30, 20 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

வணக்கம். மா. செல்வசிவகுருநாதன் மரம் தானாகவே ஆங்கிலக் கட்டுரையுடன் சேர்ந்து விட்டது. --Balu1967 (பேச்சு) 11:53, 22 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@Balu1967: எந்தத் தலைப்பில் திரைப்படக் கட்டுரையை உருவாக்கினீர்கள்? மரம் என்றா அல்லது மரம் (திரைப்படம்) என்றா? மரம் என்ற தலைப்பில் உருவாக்கினால் எச்சரிக்கை வந்ததா?--Kanags \உரையாடுக 21:39, 22 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

@Kanags: மரம் (திரைப்படம்) என்ற பெயரில் உருவாக்கினேன்.--Balu1967 (பேச்சு) 01:07, 23 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

நந்திவர்மன் என்ற பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் இருந்ததால் நந்திவர்மன் என்ற திரைப்படக் கட்டுரையை அதேபெயரில் மொழிபெயர்த்து உருவாக்கினேன். ஸ்ரீதர் குறிப்பிட்டது போலவே தற்போதுள்ள பக்கத்தை அழித்தெழுதுக என்ற எச்சரிக்கையுடன் கைவிடு மற்றும் பரவாயில்லை, பிரசுரிக்கவும் என்பதும் வருகிறது.-- சா. அருணாசலம் (உரையாடல்) 04:03, 23 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
கூகுள் தமிழாக்கக்கப்புரைகளை மேம்படுத்தம் பணியின்போது அக்கட்டுரையை உள்ளடக்க மொழிபெயர்ப்பு கருவியில் உருவாக்கியே பழைய கட்டுரையின் மீது பிரதியிடல் செய்து மேம்படுத்தினேன். எனவே கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் மேம்பாடு திட்டம் முடியும் வரை பிரதியிடலைத் தடுக்கவேண்டாம் அல்லது என்னைப் போல பிரதியிடலை விரும்புபவர்களுக்கு மட்டும் கூகுள் தமிழாக்கக்கப்புரைகளை மேம்படுத்தம் பணி முடியும்வரை விலக்கு அளிக்க வகைசெய்யவேண்டும்.--கு. அருளரசன் (பேச்சு) 13:32, 1 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

எத்தனை வீதம் திருத்தம் செய்ய வேண்டும்?[தொகு]

எத்தனை வீதம் திருத்தம் செய்ய வேண்டும்? எத்தனை வீதம் திருத்தம் செய்தால் கட்டுரையை பிரசுரிக்க ஃ வெளியிட முடியும்? அந்த வீதம் எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது? ~AntanO4task (பேச்சு) 04:41, 9 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]