உள்ளடக்கத்துக்குச் செல்

பேர்ள் ஆர்பர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேர்ள் ஆர்பர் (திரைப்படம்)
இயக்கம்மைக்கேல் பே
தயாரிப்பு
  • Jerry Bruckheimer
  • Michael Bay
கதைRandall Wallace
இசைஹான்ஸ் சிம்மர்
நடிப்பு
ஒளிப்பதிவுJohn Schwartzman
படத்தொகுப்பு
  • Chris Lebenzon
  • Mark Goldblatt
  • Steven Rosenblum
  • Roger Barton (film editor)
விநியோகம்Buena Vista Pictures Distribution
வெளியீடுமே 21, 2001 (2001-05-21)(Pearl Harbor, Hawaii)
மே 25, 2001 (Mainland United States)
ஓட்டம்183 நிமிடங்கள்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
மொழி
ஆக்கச்செலவு$140 million[1][2]
மொத்த வருவாய்$450.2 million[1]

பேர்ள் ஆர்பர் (Pearl Harbor) என்பது மைக்கேல் பே இயக்கிய 2001 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க காதல் போர் நாடகத் திரைப்படமாகும். இது பே மற்றும் செர்ரி புரூக்ஏய்மர் தயாரித்து இராண்டால் வாலசு எழுதியத் திரைப்படமாகும். இதில் பென் அஃப்லெக், கேட் பெக்கின்சேல், ஜோஷ் ஹர்த்நேட் போன்றோர் நடித்துள்ளனர். திசம்பர் 7, 1941 இல் சப்பானியப் படைகளால் பேர்ல் ஹார்பர் மீதான தாக்குதலின் பெரும்பகுதியைக் கொண்டு, கற்பனையாக, இந்தத் திரைப்படம் தாயரிக்கப்பட்டுள்ளது. போர் தாக்குதல், அதன் பின்விளைவுகள் இடையே ஒரு காதல் கதையையும் கொண்டு திரைக்கதை அமைந்திருக்கிறது.

இப்படம், அதன் தொடக்க வார இறுதியில் $59 மில்லியனையும், உலகளவில் $450.2 மில்லியனையும் ஈட்டி வசூல் சாதனை படைத்தது. ஆனால் கதை, நீண்ட இயக்க நேரம், திரைக்கதை, உரையாடல், வேகம், நடிப்பு போன்றவற்றைக் குறித்தும் பல்வேறு கருத்துரைகள் பொது ஊடகங்களில் வந்தன. கணினி வரைகலை நுட்பங்களை, ஹான்ஸ் சிம்மரின் பாராட்டப்பட்டாலும், இப்படத்தில் பல வரலாற்றுத் தவறுகள் இருந்தன. இருப்பினும், பல விருதுகளுக்கு, இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.

கதைக்கரு

[தொகு]

1923 ஆம் ஆண்டு டென்னசியில், இரஃபே மெக்காவ்லி, டேனி வாக்கர் என்ற இரண்டு சிறந்த நண்பர்கள் இருந்தனர். அவர்கள் முதல் உலகப் போரில் பி.டி.எஸ்.டி.யால்(PTSD) பாதிக்கப்பட்ட, ஒரு உலகப் போர் வீரரான இரஃபேவின் தந்தையின் பின்புலத்தில் பழைய இருவிமானங்களில் ஒன்றாக போர் விமானிகள் போல் நடித்து விளையாடுகிறார்கள்.

ஜனவரி 1941 இல், இரண்டாம் உலகப் போர் தீவிரமடைந்த நிலையில், மேஜர் ஜிம்மி டூலிட்டிலின் கட்டளையின் கீழ், அந்த இரு நண்பர்களும் போருக்குச் செல்ல அனுமதி கேட்கின்றனர். இச்சூழலில் இராஃபே காதலிக்கிறார். போருக்கு கிளம்புவதாக தன் காதலியிடம் கூறி செல்கிறார். பின்னர் லுஃப்ட்வாஃப் குண்டுவெடிப்புத் தாக்குதலை இடைமறிக்கும் பணியின் போது, ஆங்கிலக் கால்வாயில் இராஃப் சுட்டு வீழ்த்தப்பட்டாதாகவும், பிறகு கொல்லப்பட்டதாகக் அறிவிக்கின்றனர். இதனால் உயிருடன் உள்ள மற்றொரு நண்பனான டேனியும், இறந்த நண்பனின் காதலியான ஈவ்லினும் இராஃபின் இறப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறார்கள். பிறகு ஏற்படும் ஒரு சூழலில், இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. இதற்கிடையில், சப்பான் அமெரிக்க பசிபிக் கடற்படையைத் தாக்கத் தயாராகிறது. தாக்குதலுக்குரிய இடமாக, பேர்ள் ஆர்பர் என்ற கடற்படைத் தளம் யப்பானியப் படையால் தேர்ந்தெடுக்கப்பட்டு தாக்குகிறது.

டிசம்பர் 6 ஆம் தேதி இரவு, காதலியான ஈவ்லின், இராஃப் தனது கதவுக்கு வெளியே நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். அவன் வீழ்த்தப்பட்டதிலிருந்து தப்பித்து, நாஜி ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சில் சிக்கியிருந்தான். தான் இறந்ததாக கருதப்பட்ட சூழலில், தனது நண்பன் டேனியுடன், தனது காதலி ஈவ்லின் காதலுடன் இருப்பதை அறிந்து, மதுஅரங்குக்குச் செல்கிறார். அங்கு அவர் மகிழ்ச்சியடைந்த சக விமானிகளால் மீண்டும் வரவேற்கப்பட்டார். சமரசம் செய்யும் நோக்கத்துடன் மது அருந்தும் தனது உயிருடன் திரும்பிய நண்பனை டேனி பாரில் காண்கிறார். ஆனால் இருவரும் சண்டையிடுகிறார்கள். இராணுவ காவலர்கள் வரும்போது, சட்டதண்டனையைத் தவிர்ப்பதற்காக, அந்த இடத்தை விட்டு ஓடிப்போய் டேனியின் காரில் தூங்குகிறார்கள்.

அடுத்த நாள் காலை, டிசம்பர் 7 அன்று, ஏகாதிபத்திய சப்பானிய கடற்படை பேர்ள் துறைமுகத்தின் மீது தாக்குதலைத் தொடங்கியது. இந்த திடீர் தாக்குதலில் அமெரிக்க பசிபிக் கடற்படை கடுமையாக சேதமடைந்துள்ளது. மேலும் துறைமுகத்தை பாதுகாக்க போர் விமானங்களை ஏவுவதற்கு முன்பே பாதுகாப்பில் உள்ள பெரும்பாலான விமானநிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இச்சூழில், இரு நண்பர்களும்பி-40 போர் விமானங்களில் புறப்பட்டு, தாக்குதல் நடத்தும் யப்பானிய விமானங்களில், ஏழு விமானங்களை சுட்டு வீழ்த்துகின்றனர். அவர்கள் பின்னர் கவிழ்ந்த USS இன் பணியாளர்களை மீட்க உதவுகிறார்கள். பின்னர் அமெரிக்கப்படையில் மேலதிகப் படைப்பதவிகளை இரு நண்பர்களும் பெற்று, தொடர்ந்து போரில் ஈடுபடுகின்றனர். அப்பொழுது இரண்டாவதாகக் காதலித்த நண்பன் டேனி இறக்கும் தருவாயில், முதலில் காதலித்த தன் நண்பன் இராஃப்பிடம், காதலி ஈவ்லின், கர்ப்பம் தாங்கி இருப்பதையும், அதற்கு தனது குழுந்தை எனக்கூறி, இறந்து விடுகிறார்.

போருக்குப் பிறகு, முதல் காதலன் இராஃபே, நண்பனின் குழந்தையை வயிற்றில் தாங்கியுள்ள தனது காதலி ஈவ்லினை, திருமணம் செய்து கொள்கிறார். ஈவ்லின் மகனுடன் டேனியின் கல்லறைக்குச் செல்கிறார்கள். இரஃபே பின்னர் தனது வளர்ப்பு மகனிடம், பறக்க விரும்புகிறாயா? என்று கேட்கிறார். பின்னர், இராஃபின் தந்தைக்கு சொந்தமான பழைய விமானத்தில் சூரியன் மறையும் மாலைப்பொழுதில் பறக்கிறார்கள்.

பாராட்டுக்கள்

[தொகு]

இப்படம் நான்கு அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த ஒலி படத்தொகுப்பு பிரிவில் வென்றது. மோசமான படம் உட்பட ஆறு கோல்டன் ராஸ்பெர்ரி விருதுகளுக்கும் இது பரிந்துரைக்கப்பட்டது.[3] இது ஒரு மோசமான படம்-பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் அகாடமி விருதை வென்ற முதல் நிகழ்வாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Pearl Harbor (2001)". பாக்சு ஆபிசு மோசோ. 2009. பார்க்கப்பட்ட நாள் March 25, 2009.
  2. Cagle, Jess (27 May 2001). "Pearl Harbor's Top Gun". Time. Archived from the original on April 11, 2005. பார்க்கப்பட்ட நாள் 2023-11-30.
  3. Bergeson, Samantha (January 24, 2023). "From 'Blonde' to 'Joker,' Here's Every Film Nominated for Both an Oscar and a Razzie Award". simultaneously garnered four Oscar nominations, winning Best Sound Editing.

வெளி இணைப்புகள்

[தொகு]