வலைவாசல்:திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகு  

திரைப்பட வலைவாசல்

திரைப்படங்கள் பெரும்பாலும் இது போன்ற பில்ம் சுருள்களிலேயே பதியப்படுகின்றன

திரைப்படம் (Film) என்பது பொதுவாக பொழுதுபோக்கிற்காக தயாரிக்கப்பட்டு முன்னர் திரையரங்குகளின் திரைகளில் காண்பிக்கப்பட்டு, இப்பொழுது திரையரங்குகள் தவிர தொலைக்காட்சி, குறுந்தட்டு, பேழை, இணையம் போன்ற ஊடகங்கள் மூலமும் வினியோகிக்கப்படும் நகரும் படங்களையும், அப்படங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள துறையையும் குறிக்கும் சொல்லாகும்.

மேலும் திரைப்படம் பற்றி...
தொகு  

சிறப்புக் கட்டுரை

Agadam.jpg

அகடம் (Agadam) என்பது முற்றிலும் புதுமுக நடிகர்களை வைத்து தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை ஒரே வீச்சில் தயாரிக்கப்பட்டது என்பதால், இது கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அறிமுக இயக்குனர் லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்சன் சார்பில் தயாரிக்கப்பட்ட இத் திரைப்படம் ஒரே முறையில் தொடர்ச்சியாக 2 மணி 3 நிமிடங்கள் 30 வினாடிகள் நடாத்தப்பட்டுள்ளது. பின்னர் செம்மையாக்கம் கூடச் செய்யப்படவில்லை.

தொகு  

தெரிவு படிமம்

Neram poster for Malayalam and Tamil.jpeg

நேரம், நகைச்சுவை மற்றும் பரபரப்பு பாணியில் அல்போன்சு புத்திரன் இயக்கி, 2013இல் வெளிவந்த தென்னிந்தியத் திரைப்படம் ஆகும். இது ஒரே நேரத்தில் தமிழிலும், மலையாளத்திலும் படமாக்கப்பட்டது. இதில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா, நாசர், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படமே நிவின் பாலிக்கு முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.

தொகு  

சிறப்பு வாழ்க்கை வரலாறு

ஹீத் அன்ட்ரூ வில்லியம்ஸ்

ஹீத் அன்ட்ரூ லெட்ஜர் (Heath Andrew Ledger, ஏப்ரல் 4, 1979ஜனவரி 22, 2008) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஹாலிவூட் நடிகர் ஆவார். ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில், 10 வயதில் நாடகங்களில் நடிக்கத் துவங்கிய ஹீத், 1990களில் தனது 16வது வயது முதல் தொலைக்காட்சித் தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வந்தார் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த ஹீத் லெட்ஜர், தனது 19வது வயதில் டென் திங்ஸ் ஐ ஹேட் அபவுட் யூ என்ற படம் மூலம் ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்தார். புரோக்பேக் மவுண்டன் (Brokeback Mountain) என்ற படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

தொகு  

சிறப்பு பட்டியல்

2013இல் அதிக வருவாய் ஈட்டிய படங்கள்
படிநிலை படம் மொத்த வருவாய்
1 விஸ்வரூபம் 229,41,00,000
2 கடல் 97,72,00,000
3 அலெக்ஸ் பாண்டியன் 77,22,00,000
4 அமீரின் ஆதிபகவன் 48,88,00,000
5 கண்ணா லட்டு தின்ன ஆசையா 47,91,00,000
6 பரதேசி 43,13,00,000
7 கேடி பில்லா கில்லாடி ரங்கா 40,00,00,000
8 உதயம் என்.எச்4 39,70,00,000
9 சேட்டை 37,30,00,000
10 கௌரவம் 35,75,00,000
11 வத்திக்குச்சி 26,81,00,000
12 எதிர்நீச்சல் 17,00,00,000
தொகு  

சிறப்பு தகவல்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு பட்டியல்கள்

தொகு  

Associated Wikimedia

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:திரைப்படம்&oldid=2596637" இருந்து மீள்விக்கப்பட்டது