நஸ்ரியா நசீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நசிரியா நசீம்
Nazriya Nazim at neram audio launch.jpg
பிறப்புதிசம்பர் 20, 1994 (1994-12-20) (அகவை 26)
திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
இருப்பிடம்திருவனந்தபுரம், கேரளா, இந்தியா
பணிதிரைப்பட நடிகை, பின்னணிப் பாடகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், விளம்பர அழகி
செயற்பாட்டுக்
காலம்
2005 – தற்போதுவரை
வாழ்க்கைத்
துணை
பகத் பாசில்

நஸ்ரியா நசீம் (ஆங்கில மொழி: Nazriya Nazim) என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.[1]

வாழ்க்கை குறிப்பு[தொகு]

நஷ்ரியா நசீம் 1994, திசம்பர் 20 ஆம் நாளில் நசீமுதீன், பேகம்பீனா ஆகியோருக்கு திருவனந்தபுரத்தில் பிறந்தார்.[2] இவர் இளமைப்பருவத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள கிறித்துவப் பள்ளி ஒன்றில் படிப்பைத் துவங்கினார். பின்னர் 2013 ம் ஆண்டு வணிகவியல் இளங்கலைப் பிரிவில் தனது கல்லூரிக் கல்வியைத் தொடங்கியவர் திரைப்படங்களின் படப்பிடிப்புகளால் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டார். இவரின் குடும்பம் ஐக்கிய அரபு அமிரகத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.[3][4][5]

திருமணம்[தொகு]

மலையாள முன்னணி இயக்குநரான பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பஹத் பாசிலுடன் நஸ்ரியா திருமணம் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.[6][7]

படங்களின் பட்டியல்[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2006 பளுங்கு கீதா மலையாளம் குழந்தை கதாப்பாத்திரம்
2006 ஒருநாள் ஒரு கனவு தமிழ்
2010 பிராமணி சிந்து மலையாளம் குழந்தை கதாபாத்திரம்
ஒரு நாள் வரும் தன்யா மலையாளம் குழந்தை கதாபாத்திரம்
2013 மாட் டாட் மரியா மலையாளம்
நேரம் ஜீனா மலையாளம்
வேணி தமிழ்
ராஜா ராணி கீர்த்தனா தமிழ்
நய்யாண்டி வனரோஜா தமிழ்
திருமணம் என்னும் நிக்கா ஆயிசா தமிழ்
சலாலா மொபைல்சு சஷானா மலையாளம் படப்பிடிப்பில்
2014 நீ நல்லா வருவடா தமிழ் படப்பிடிப்பில்[8]
வாயை மூடி பேசவும் தமிழ்
பெங்களூர் டேஸ் திவ்யா பிரகாஷ் மலையாளம்
ஓம் சாந்தி ஓசனா பூஜா மாதேவ் மலையாளம் படப்பிடிப்பில்
ஹாய் ஐ அம் டோனி மலையாளம் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நஸ்ரியா_நசீம்&oldid=3218113" இருந்து மீள்விக்கப்பட்டது