வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா
- ... ஏரிஸ் சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் ஆகும்.
- ... தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே கோட்டியா என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.
- ... லேய்டின் கொள்கலன், எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனி அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.
- ... 4 பரிமாணங்களை கொண்ட வெளிநேரம் வழக்கமான முப்பரிமாணங்களான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுடன் நாலவதாக காலத்தையும் கொண்டது.
- ... சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளான கனிமீடு அளவில் புதன் கோளை விடப் பெரியது.
பயன்பாடு
[தொகு]இந்த “உங்களுக்குத் தெரியுமா..” வின் துனைப் பகுப்புகள் {{Random subpage}} என்ற வார்ப்புருவின் மூலம் தன்னியக்கமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
DYK list
[தொகு]வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/1
- ... 1774ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான சோசப்பு பிரீசிட்லி ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு முன்னரே காரல் வில்லெம் சீலெ (C .W .Scheele) என்ற சுவீடன் நாட்டு வேதியியலார் 1772 ல் இவர் ஆக்சிசனை கண்டறிந்தார்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/2
- ... முப்பரிமாண அச்சாக்கம் என்பது பொருட்கள் உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகும்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/3
- ... நெடுங்குழு என்பது தனிமங்களின் அட்டவணையில் மேலிருந்து கீழாக அடுக்கப்பட்டுள்ள நெடுக்கு வரிசையைக் குறிக்கும்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/4
- ... உமாமி சுவை என்பது குளூட்டாமேட் என்னும் வேதியியல் பொருளை நாவில் உள்ள சுவைமொட்டுகள் உணர்வதால் ஏற்படும் சுவை என்று 1908 இல் கிக்குனே இக்கேடா கண்டுபிடித்தார்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/5
- ... ஏரிஸ் சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்டுள்ள மிகப் பெரிய குறுங்கோள் ஆகும்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/6
- ... நியூத்திரனை இங்கிலாந்தின் இயற்பியல் அறிஞரான ஜேம்ஸ் சட்விக் 1932இல் கண்டுபிடித்தார்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/7
- ... அமெரிசியம் என்ற கதிரியக்கம் கொண்ட தனிமம், 1944 ஆண்டு 'ஸீபோர்க்' என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/8
- ... எலியாஸ் ஓவே தையல் இயந்திரத்தைக் கண்டறிந்து, நவீன தையல் இயந்திரத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட ஓர் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளராவார்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/9
- ... இந்தியாவின் ஏவுகணையான ஆகாஷ் ஏவுகணை எண்ணெய்க் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயன்படுகிறது.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/10
- ... தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே கோட்டியா என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/11
- ... இந்திய விண்வெளி ஆய்வு மையம் முதன்முறையாக தயாரித்த செயற்கைக்கோள் செலுத்தி வண்டி எஸ். எல். வி ஏவுகலமாகும்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/12
- ... ஹைன்றிக் ரோரர் என்ற சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் வருடு ஊடுருவு நுண்ணோக்கியை வடிவமைத்தார்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/13
- ... நியூட்டன் அலகு, SI அடிப்படை அலகுகளில், கிகி x மீ x செக்-2 ( ) என்பவற்றை உள்ளடக்கிய ஒரு SI அலகு ஆகும்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/14
- ... ஆல்பா ஔரிகா (காபெல்லா) விண்மீன் ஆறாவது மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட தோற்ற ஒளிப்பொலிவெண் 0.09 உடைய இரட்டை விண்மீன்கள் ஆகும்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/15
- ... லேய்டின் கொள்கலன், எனும் நிலை மின்னை சேமித்துவைக்கும் உபகரணம் தனித்தனியே சேர்மனி அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/16
- ... கிளீசு 581 ஜி புவியை அதிக அளவில் ஒத்ததும், உயிரினம் வாழக்கூடிய நிலையில் இருப்பதுமான ஒரு புறக்கோள் ஆகும்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/17
- ... த மோர்கனின் விதி என்பது பூல இயற்கணிதத்தில் பூலக்கூட்டல், பூலப்பெருக்கல் என்பனவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்கும் விதியாகும்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/18
- ... உலகின் மிகப் பெரும் துகள் முடுக்கி சுவிட்சர்லாந்து செனீவாவிலுள்ள பெரிய ஆட்ரான் மோதுவி ஆகும்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/19
- ... இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக்குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்தது சார் வெடிகுண்டு ஆகும்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/20
- ... 4 பரிமாணங்களை கொண்ட வெளிநேரம் வழக்கமான முப்பரிமாணங்களான நீளம், அகலம், உயரம் போன்றவற்றுடன் நாலவதாக காலத்தையும் கொண்டது.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/21
- ... அண்டத்தில் கருப்பு ஆற்றல் மற்றும் கரும்பொருட்களே 90 சதவிகிதத்தை ஆக்கிரமித்திருக்கின்றன.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/22
- ... தொடுதிரை என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி ஆகும்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/23
- ... கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பொதுவாக 5000 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள இலக்கைத் தாக்க வல்லவை.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/24
- ... சந்திரசேகர் வரையறையில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லையை ஒரு வெண் குறுமீன் மீறுமாயின் அது நாளடைவில் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருந்துளையாகவோ மாறிவிடும்.
வலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/25
- ... சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளான கனிமீடு அளவில் புதன் கோளை விடப் பெரியது.
முன்மொழிதல்
[தொகு]இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் படிமங்களை இங்கு முன்மொழியவும்.
- தற்போது எதுவும் இல்லை.