உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். எல். வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்.எல்.வி

எஸ்.எல்.வி என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையம் செயற்கைக்கோள் செலுத்தி வண்டி (Satellite launch vehicle) என்ற பெயரில் முதன்முறையாக[1] தயாரித்த ஏவுகலமாகும். இந்த ஏவுகலம் தயாரிப்பதற்கான திட்டம் 1970 களில் ஆரம்பிக்கப்பட்டது. ஏவுகலம் தயாரிப்பதற்கான திட்டத்தின் முதல் திட்டத்தலைவராக ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் பணியாற்றினார். இதன் செயற்கைகோள் எடை 40 கிலோ கிராம்[2]. இதில் உள்ள 4 உறுப்பு கலங்களும் திட எரிபொருளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. இதன் முதல் சோதனையானது ஆகத்து 10,1979ம் ஆண்டு நடைபெற்றது.[3] இச்சோதனை தோல்வியில் முடிந்தது.அதன் பிறகு 3 சோதனைகள் நடத்தப்பெற்றன. அதில் 2[4] மற்றும் 4 ஆம் சோதனைகள் முழு வெற்றி பெற்றன. இதன் கடைசி சோதனை ஏப்ரல் 17, 1983 அன்று நடத்தப்பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.thecolorsofindia.com/interesting-facts/science-and-technology/india-first-indigenous-launch-vehicle.html
  2. http://www.centennialofflight.gov/essay/SPACEFLIGHT/foreign_launch_vehicles/SP15.htm
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-15. பார்க்கப்பட்ட நாள் 2010-11-12.
  4. http://india.gov.in/sectors/science/launch_vehicles.php
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எல்._வி&oldid=3546296" இலிருந்து மீள்விக்கப்பட்டது