கோட்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோட்டியா என்பது இந்தியாவில் சரக்குப் போக்குவரத்துக்காகப் பயன்படும் சிறிய அளவிலான கப்பல்கள் ஆகும். தமிழகத்தின் கடலூர் துறைமுகத்தில் சிறிய அளவிலான கோட்டியா கட்டும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மட்டுமே கோட்டியா என அழைக்கப்படும் சிறிய கப்பல்கள் கட்டப்படுகின்றன. கடலூரில் மீன்பிடித் துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோட்டியா கட்டுவது, பழுது பார்ப்பது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தரை வழி அனுப்பப்படும் சரக்குகளுக்கு எரிபொருள் செலவு, இயந்திரத் தேய்மானம் போன்றவற்றால் கூடுதல் செலவாகிறது. அதனால் அதிகமான சரக்குகளை அனுப்ப கடல்வழியைத் தேர்வு செய்கின்றனர். அதனால் கடலில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் கோட்டியாக்களுக்கு அதிக தேவை ஏற்படுகிறது.

பெயர் விளக்கம்[தொகு]

‘கோட்டியா’ என்றால், கடலில் புலி போல வேகமாகச் செல்லுகின்ற கப்பல். கோட்டியா என்றால், இலங்கையில் புலி என்று பொருள். அது சோழர்களைக் குறிப்பது.[1]

தேவை[தொகு]

துறைமுகத்திற்கு வரமுடியாத பெரிய கப்பல்களில் இருந்து சரக்குகளைக் கையாள இவை பயன்படுகின்றன. சிறிய அளவிலான கோட்டியாக்கள் சுமார் 10 டன்கள் வரை எடை தாங்கும் ஆற்றல் கொண்டவை. கடலூர் துறைமுகப் பகுதிகளில் தற்போது 100 டன் முதல் 400 டன் வரையிலான சரக்குகளைக் கையாளும் திறன் கொண்ட பெரிய அளவிலான கோட்டியாக்கள் கட்டப்படுகின்றன. கிசிறப்பான வேலைப்பாடுகள், ஆள் கூலி குறைவு, கோட்டியா உருவாக்கத் தேவையான மரங்கள் எளிதாக கிடைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடலூர் பகுதிகளுக்கு வெளியூர்களில் இருந்து கோட்டியா செய்வதற்காக ஆணைகள் வருகின்றன. இவ்வகை கோட்டியா தயாரிப்பதற்கு தூத்துக்குடி, அந்தமான் பகுதிகளிலிருந்தும் கோழிக்கோடு, மங்களூர் பகுதியிலிருந்தும் பெரும்பாலான ஆணைகள் பெறப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கோட்டியாக்கள் பெரும்பாலானவை லட்சத்தீவுகளுக்கு உணவு பொருட்கள், கட்டுமான பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்லவும் அரபிக்கடலில் உள்ள மங்களூர், மும்பை, போர்பந்தர் ஆகிய துறைமுகங்களில் சரக்குக் கையாளவும் பயன்படுத்தப்படுகின்றன.

கட்டுமானம்[தொகு]

கிடைப்பதற்கு அரிதான ஆயில் கோங்கு, இலுப்பை முதலான மரங்களில் தான் இவை தயாரிக்கப்படுகின்றன. தேவையைப் பொறுத்து கோட்டியாவின் கட்டுமானப்பணிகளை முடிக்க ஒருவருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும். இதற்கான மரங்கள் மலேசியா மியான்மர் ஆகிய இடங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. 400 டன் சரக்கைக் கையாளும் திறன் கொண்ட கோட்டியா உருவாக்க 350 டன் அளவிற்கு இலுப்பை மரங்களும், 3,000 சதுர அடி கோங்கு மரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 20 அடி நீளமும் 50 அடி உயரமும் கொண்ட கோட்டியா செய்ய 50 இலட்சம் முதல் 1 கோடி வரை செலவாகும்.[2] பின்னர், கப்பலுக்குத் தேவையான இயந்திரப்பொறிகள், தொழில்நுட்பப் பொறிகள் ஆகியவை பொருத்தப்பட்டு நீரில் இறக்கப்பட்டு நீர்க்கசிவு உள்ளிட்ட பல்வேறு சோதனைக்குப் பிறகு துறைமுக அதிகாரிகளின் உரிமம் பெற்று இயக்கப்படுகின்றன. 400 டன் சரக்குக் கையாளும் திறன் கொண்ட கோட்டியாக்களை உருவாக்க 2 கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது.

ஆதாரம்[தொகு]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டியா&oldid=1467373" இருந்து மீள்விக்கப்பட்டது