ஆகாஷ் ஏவுகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகாஷ் ஏவுகணை
ஆகாஷ் ஏவுகணை ஓடிசாவிலுள்ள சந்திபூர் சோதனை தளத்தில் இருந்து சோதனைக்காக ஏவப்படுகிறது.
வகைநில வான் ஏவுகணை
அமைக்கப்பட்ட நாடு இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர்இந்திய வான்படை
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்Bharat Dynamics Ltd (BDL)
உருவாக்கியது1990
அளவீடுகள்
எடை720 kg
நீளம்5.78 m
விட்டம்350 mm
வெடிபொருள்60 kg Fragmentation or Nuclear Warhead
வெடிப்புத் தூண்டல் முறை
Radio proximity fuze

இயந்திரம்Booster + Integral Ram Rocket (IRR) solid propulsion
உந்துபொருள்திட எரிபொருள்
இயங்கு தூரம்
25-30 km
பறப்பு மேல்மட்டம்18,000 m (59,000 அடி)
வேகம்Mach 2.8 to 3.5
வழிகாட்டி
ஒருங்கியம்
Command Guidance
ஏவு
தளம்
BMP-1, T-72, Tata 4923 truck

ஆகாஷ் ஏவுகணை (Akash) தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை ஆகும்.இந்தியாவிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, படைக்கருவி தொழிற்சாலைகள் வாரியம் மற்றும் பாரத் மின்நிறுவனம் ஆகியன இணைந்து இந்த ஏவுகணையை உருவாக்கின. [1][2] எல்லாவற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது. இதன் சிறப்பென்ன வென்றால், இது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய (2.5 Mach Number) வேகத்தில் போகக்கூடியது. நீட்சித் தூரம் 25 கி.மீ. (15 மைல்) கொண்ட இந்த தாக்குகணை எண்ணெய்க் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது. ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.

உருவாக்கம் மற்றும் வளர்ச்சி[தொகு]

ஆகாஷ் ஏவுகணையின் முதல் சோதனை 1990 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டு நடந்த சோதனையில் இரண்டு ஆகாஷ் ஏவுகணைகள் வேகமாக நகரக்கூடிய ஒரு இலக்கை ஒருமித்துத் தாக்கின. ஆகாஷ் ஏவுகணையின் உருவாக்கத்திற்காக மொத்தமாக 1000 கோடி செலவிடப்பட்டது. இது மற்ற நாடுகளில் ஏவுகணை உருவாக்க ஆகும் செலவைவிட 8 முதல் 10 மடங்கு வரை குறைவாகும். ஆகாஷ் ஏவுகணையானது இலாவகம், ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்குதல், முற்றிலும் தானியங்கி செயல்பாடு என்று பல சிறப்புகளைக் கொண்டதாகும். சூன் 11, 2010 நிலவரப்படி ஆகாஷ் எம்கே II என்ற பதிப்பின் உருவாக்கம் தொடங்கப்பட்டு விட்டது. அடுத்த 24 மாதங்களில் இதன் உருவாக்கப் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகாஷ் எம்கே II முந்தைய ஏவுகணைகளை விட கூடுதல் எல்லை மற்றும் துல்லியம் கொண்டதாக இருக்கும்.

விவரம்[தொகு]

ஆகாஷ் ஏவுகணை நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கக்கூடிய நில வான் ஏவுகணை வகையை சார்ந்தது. 30 கி.மீ. வரை பறந்து சென்று இலக்கைத் தாக்கவல்லது ஆகாஷ் ஏவுகணை. அது எடை 720 கிலோ எடையும், 35 செ.மீ. விட்டமும், 5.78 மீட்டர் நீளமும் கொண்டதாகும். அதிகபட்சமாக 18 கி.மீ. உயரம் வரை பாயும் திறன் கொண்டது.

நிலவரம்[தொகு]

ஒரு ஆகாஷ் ஏவுகணையின் விலை 2 கோடிக்கும் குறைவு. இதன் விலை, இதைப் போன்ற ஏவுகணையை மேற்கு நாடுகளிலிருந்து வாங்குவதைவிட 50 சதவீதம் குறைவு. அதிக அளவு உற்பத்தி செயப்படும்போது விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய இராணுவம் (தரைப்படை மற்றும் விமானப்படை) 23,300 கோடி மதிப்புள்ள ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது. மே 24, 2012 அன்று ஆகாஷ் ஏவுகணை மீண்டும் சோதித்துப் பார்க்கப்பட்டது. சூன் 1, 2012 அன்று ஆகாஷ் ஏவுகணையின் விமானப் படைக்கான பதிப்பு சந்திபூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து சோதிக்கப்பட்டது.

இந்திய வான்படை[தொகு]

திசம்பர் 2007 இல் இந்திய வான்படை இந்த ஏவுகணைக்கான பயனர் சோதனைகளை முடித்தது. பத்து நாட்கள் நடந்த இந்த சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. சோதனைகளில் திருப்தி அடைந்த இந்திய வான்படை ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க முடிவு செய்தது. முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு ஆகாஷ் ஏவுகணைகள் இந்திய வான்படையின் சேவையில் சேர்க்கப்பட்டது. பின்னர் மேலும் சில ஏவுகணைகளை வடகிழக்கு எல்லையில் நிறுத்த இந்திய வான்படை முடிவு செய்து கூடுதல் ஏவுகணைகளை வாங்கியது.

இதுவரை இந்திய வான்படை 1000 ஆகாஷ் ஏவுகணைகளை வாங்கியுள்ளது. பூனே, குவாலியர் மற்றும் வடகிழக்கு பிரதேசங்களில் ஆகாஷ் ஏவுகணைகள் நிறுவப்படும் என்று இந்திய வான்படை அறிவித்துள்ளது.

இந்திய தரைப்படை[தொகு]

சூன் 2010 இல் 12,500 கோடி மதிப்புள்ள ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய தரைப்படைக்காக வாங்க பாதுகாப்பு கொள்முதல் சபை முடிவு செய்தது. மார்ச் 2011 நிலவரப்படி இந்திய தரைப்படை 14,000 கோடி மதிப்புள்ள - கிட்டத்தட்ட 2000 ஏவுகணைகள் - ஆகாஷ் ஏவுகணைகளை வாங்குவதாக அறியப்படுகிறது. இந்திய தரைப்படையின் SA-6 ஏவுகணைகளுக்குப் பதிலாக ஆகாஷ் ஏவுகணைகள் பயன்படுத்தப்படவிருக்கின்றன.

மற்றவை[தொகு]

ஆகாஷ் ஏவுகணைகளை வாங்க மலேசியா ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

உபயோகிப்பவர்கள்[தொகு]

 இந்தியா

மேற்கோள்கள்[தொகு]

  1. "AkashSAM.com". Archived from the original on 2012-12-28. பார்க்கப்பட்ட நாள் 2015-07-27.
  2. "Guided Threat Systems". International Electronic Countermeasures Handbook. Artech House. 2004. பக். 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-58053-898-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகாஷ்_ஏவுகணை&oldid=3867933" இலிருந்து மீள்விக்கப்பட்டது