வருணா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வருணா ஆறு (Varuna River) இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதியின் சிறிய துணை நதியாகும். இது பிரயாகராஜ் மாவட்டத்தில் புல்புரில் உருவாகி வாரணாசி மாவட்டத்தில் உள்ள சாரை மோகனாவில் கங்கையுடன் கலக்கிறது.[1] பிரத்தாப்புகர் மாவட்டத்தின் சாரை மோகனாவிலிருந்து சடார் வரையுள்ள 6 கிலோ மீட்டர்ப் பகுதியானது வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படுகிறது.[2] 'வாரணாசி' என்ற பெயர் வருணா மற்றும் அசி என்ற இரண்டு நதிகளின் பெயரிலிருந்து உருவானது.

வாமன புராணத்தின்படி, ஆசி ஆற்றின் அருகே தெய்வங்களால் இந்த வருணா நதி உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இந்தத் தகவலானது மகாபாரதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வருணா_ஆறு&oldid=3777099" இலிருந்து மீள்விக்கப்பட்டது