ராபர்ட் (நடன இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராபர்ட்
பிறப்பு26 சனவரி 1981 (1981-01-26) (அகவை 40)
தமிழ்நாடு, சென்னை
தேசியம்இந்தியர்
பணிநடன அமைப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990–தற்போது வரை

ராபர்ட் என்பவர் ஒரு இந்திய நடன இயக்குனர் ஆவார். இவர் இந்தியாவின் பல மொழிகளில் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் திரைப்பட நடிகராகவும் உள்ளார். இவர் பெரும்பாலும் எதிர்மறையான பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் அல்லது இவர் நடனம் அமைத்த பாடல்களில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றியுள்ளார்.

தொழில்[தொகு]

ராபர்ட் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். குறிப்பாக மம்முட்டியின் மகனாக அழகனில் (1991) நடித்தார். ராபர்ட் பின்னர் சத்யராஜின் மாறன் (2002) படத்திலும், 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான டான்சர் ஆகியவற்றில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார். டான்சர் படமானது ஒரு ஊனமுற்ற மாணவரின் நடனக் கலைஞராக சாதிப்பதை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டது. அப்படத்தில் எதிர்மறையான பாத்திரங்களை ஏற்று நடித்த ராபர்ட்டின் நடிப்பானது விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது, மேலும் அந்த ஆண்டின் பிற்பகுதியில் சிறந்த எதிர்மறை பாத்திரத்திர நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதைப் பெற்றார்.[1] அந்த காலகட்டத்தில், இவர் பவளக்கொடி (2003) இல் நடித்தார், விமர்சகர்கள் இவரது நடிப்பை விமர்சித்தனர், ராபர்ட் "உணர்ச்சிகளை வெளிப்படுத்த சிரமப்படுகிறார் மேலும் வேடிக்கையான உரையாடல்கள் கூட அவரது பேசும் முறையினால் அவற்றுக்கான விளைவ் ஏற்படவில்லை" என்று குறிப்பிட்டனர்.[2]

போடா போடி (2012) இல் பணியாற்றியதற்காக ராபர்ட் சிறந்த நடன இயக்குனருக்கான விஜய் விருதை வென்றார். அதில் இவர் "லவ் பண்ணலாமா?" காணொளியில் ஒரு சிறிய பகுதியில் தோன்றினார். .[3]

மொட்ட சிவா கெட்ட சிவா (2017) திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னர், நடிகர் டிங்கு, அவரும் ராபர்ட்டும் தாத்தா காரை தொடாதே என்ற பெயரில் தயாரிக்கும் படத்திலிருந்து "ஹரா ஹரா மகாதேவாகி" என்ற பாடலை இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் திருடியதாக குற்றம் சாட்டும் காணொளியை வெளியிட்டார். 2015 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாடலை உருவாக்க அம்ரேசுடன் இணைந்து பணியாற்றியதாக டிங்கு குறிப்பிட்டார். ஆனால் தயாரிப்பு சிக்கல்களால் படத்தயாரிப்பு நின்றுவிட்டதால், அம்ரேஷ் இந்த பாடலை வேறு படத்துக்கு பயன்படுத்திவிட்டார் என்றார். 2017 பெப்ரவரியில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், அம்ரேஷ் கணேஷ் அந்தக் கூற்றுக்களை மறுத்தார்.[4][5][6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ராபர்ட்டின் அக்காள் அல்போன்சாவும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு
1991 அழகன் அழகப்பனின் மகன் குழந்தை நட்சத்திரம்
1996 தமிழ்ச் செல்வன் "உன்னல் முடியம்" பாடலில் ஆடியுள்ளார்
1996 காதல் தேசம் "கல்லூரி சாலை" பாடலில் ஆடியுள்ளார்
1996 மன்னவா "யம்மா யம்மா" பாடலில் ஆடியுள்ளார்
1997 காலமெல்லாம் காத்திருப்பேன் "அஞ்சாம் நம்பர்" பாடலில் ஆடியுள்ளளார்
1997 சக்தி "மானாமதுரை பொண்ணு" பாடலில் ஆடியுள்ளளார்
1997 ராசி "என்னாச்சி தங்கச்சி" பாடலில் ஆடியுள்ளளார்
1997 லவ் டுடே "என்ன அழகு" பாடலில் ஆடியுள்ளளார்
1997 ஒன்ஸ்மோர் "ஊட்டி மலை பியூட்டி" பாடலில் ஆடியுள்ளளார்
1997 காலமெல்லாம் காதல் வாழ்க "பாபிலோனா" பாடலில் ஆடியுள்ளளார்
1998 ஜாலி "செம ஜாலி" பாடலில் ஆடியுள்ளளார்
1998 உன்னுடன் "பாலாறு இது பதினாறு" பாடலில் ஆடியுள்ளளார்
1999 கண்ணோடு காண்பதெல்லாம் "இருபது வயது வரை" பாடலில் ஆடியுள்ளளார்
2000 பிரியமானவளே "வெல்கம் பாய்ஸ்" பாடலில் ஆடியுள்ளளார்
2000 நரசிம்மம் "பழனிமலை" பாடலில் ஆடியுள்ளளார்
2002 மாறன் சிவதாஸ்
2003 பவளக்கொடி Robert
2004 ஜெய் மோகன்
2004 குத்து அவராகவே "போட்டுத்தாக்கு" பாடலில் சிறப்புத் தோற்றம்
2005 டான்சர் அருண் சிறந்த எதிர்மறை நடிகருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது
2007 பிறகு அவராகவே "பதினோருபேரு ஆட்டம் அதைப் பார்க்க ரசிகர் கூட்டம்" பாடலில் சிறப்புத் தோற்றம்[7]
2007 வரலாறு அவராகவே "இளமை" பாடலில் சிறப்புத் தோற்றம்
2008 சிலம்பாட்டம் அவராகவே "நலம்தானா" பாடலில் சிறப்புத் தோற்றம்
2010 சுறா அவராகவே "நான் நடந்தால் அதிரடி" பாடலில் சிறப்புத் தோற்றம்[8]
2011 ஒஸ்தி அவராகவே "நெடுவாளி" பாடலில் சிறப்புத் தோற்றம்
2012 போடா போடி அவராகவே "லவ் பண்ணலாம்" பாடலில் சிறப்புத் தோற்றம்

Vijay Award for best choreographer
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா அவராகவே "ஆசையே அலைபோலே" பாடலில் சிறப்புத் தோற்றம்
2013 மூன்று பேர் மூன்று காதல் "படபடக்குது மனமே" பாடலில் சிறப்புத் தோற்றம்[9]
2013 வணக்கம் சென்னை "சென்னை சிட்டி கேங்ஸ்டர்" பாடலில் சிறப்புத் தோற்றம்
2014 நேர் எதிர் சிறப்புத் தோற்றம்
2014 ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி "ஒண்ணுண்னா ரெண்டு" பாடலில் சிறப்புத் தோற்றம்[10]
2014 எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல் பட்டு இயக்குநரும்
2017 அன்பானவன் அசராதவன் அடங்காதவன் "ரத்தம் என் ரத்தம்" பாடலில் சிறப்புத் தோற்றம்
2018 நாகேஷ் திரையரங்கம் "வாடி வாடி" பாடலில் சிறப்புத் தோற்றம்
2018 ஒண்டிக்கு ஒண்டி ஜோ
2019 வந்தா ராஜாவாதான் வருவேன் "ரெட் கார்டு" பாடலில் சிறப்புத் தோற்றம்
2020 அல்டி

குறிப்புகள்[தொகு]